புதன், 30 ஜூன், 2010

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! 014

---------- Forwarded message ----------
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/28
Subject: 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!
To: admin@sivastar.net


இந்த கால கட்டத்தில் எமது மக்கள் எல்லா இடங்களிலும் மூன்று தரப்பினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அச்த வகையில் எமது நிலைகள் பின்வருமாறு வசதி படைத்தவர்கள் என்றும்,நடுத்தர வர்க்கத்தினர் என்றும்,ஏழ்மை நிலையினர் என்றும் வெவ்வேறு தரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வசதி உள்ளவர்களுக்கு பணப்பிரச்சினை என்று ஒரு சிக்கல் வராது உடுப்பதற்கும் உண்பதற்கும் அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.எந்த வசதியும் இன்றி அன்று உழைப்பதை அன்றே உண்டு வாழும் நிலை ஏழ்மை தரம்.இருந்தால் உண்பது இல்லை என்றால் உறங்குவது என்றே அவர்கள் போய்க்கொண்டிருப்பார்கள்.

ஆனால் மிஞ்சியிருக்கும் இந்த நடுத்தர வர்க்கத்தினர் அந்தப் பக்கமும் இன்றி இந்தப் பக்கமும் இன்றி இரன்டும் கெட்டானாக பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டனர்.இவர்களின் குடும்ப நிலவரம் கலவரமாகவே கடந்து செல்லும்.தினம் திண்டாட்டமாகவும் திருப்தி இல்லாமலும் இவர்கள் குடும்ப நிலவரத்தில் ஒருவரின் ஊதியம் வாழ்க்கைச் செலவிற்கு போதுமானதாக இல்லாததன் காரனமாத்தான் அதிகமான குடும்பத்தில் குடும்பத் தலைவியும் வேலைக்குச் செல்ல வெளியாகின்றனர்.

பெண்கள் வேலைக்குச் செல்வதை சில குடும்பத்தில் முழுமையாக ஆதரித்தும், சில குடும்பத்தில் தன் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அனுமதித்தும் ,சில குடும்பத்தில் முற்றாக எதிர்த்தும் காலம் கடக்கின்றன.மனைவி வேலைக்குப் போவதை இவர்கள் எதிர்பதர்க்குக் காரணம் பல வகையிலான தீமைகள் வருவதனால்த்தான்.ஆனால் முற்றாக தீமைகள்தான் என்றில்லை.சில நன்மைகளும் பல தீமைகளும் உண்டு.

முதலில் நன்மைகளைப் பார்த்தோமானால்..

மனைவி வேலைக்குப் போவதால் குடும்பச் சிக்கல்கள் ஓரளவு நிவர்த்தியாக வாய்ப்பு ஏற்படும்.கணவனுடைய சம்பளத்தை செலவு செய்தாலும் மனைவியின் சம்பளத்தை சேமித்தோ அல்லது வெவ்வேறு தேவைகளுக்கோ பயன் படுத்தலாம்.அத்தோடு குறைவாகப் படித்த ஒரு பெண் வேலைக்குப் போவதால் வேலை செய்யும் இடத்தில் பல பேருடன் பேசிப் பழகவும் தெரியாத சிலவற்றை அறிந்து கொள்ளவும் வழி அமைக்கின்றது.இதனால் தம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வாய்ப்புண்டு.

மனைவி வேலைக்குப் போவதால் தலைமைத்துவப் பங்கு வருவதுடன், பொறுப்புணர்ச்சியும் ஏற்படுகிறது.வேலை செய்யும் இடம் குழந்தை காப்பகமாகவோ அல்லது முதியோர் இல்லமாவோ இருந்தால் குழந்தைகளை கவனிப்பதில் ஆர்வமும்,பெரியோரிட்கு மரியாதை செய்யும் தன்மையும் தானாகவே வந்து விடும்.அத்தோடு மன அமைதியும்,குழப்பக் குறைவும் மறுமைக்கு பலனும் கிடைக்கும்.குழப்பக் குறைவும் மறுமைக்கு பலனும் கிடைக்கும்.மனைவி வேலைக்குச் செல்வதால் இவ்வாறான சில நன்மைகள் இருந்தாலும் பல வழிகளில் வரும் பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.அத்தீமைபக் வரும் வழிகளை ஆராய்வோம்.பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் மனைவிக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகவே கிடைக்கும்.இதனால் தன் கணவனையோ குழந்தையையோ குடும்பத்தையோ சரியான முறையில் கவனிப்பதற்கு முடியாமல் போகும்.இதில் முக்கியமான ஒரு விடயம் தான் பெற்றெடுத்த தன் குழந்தைக்கு ஆறு மாதம் வரையிலாவது முழுமையாக தாய்ப் பால் ஊட்ட முடியாமல் போய்விடும்.இதன் காரணமாக குழந்தைக்கு தாய்ப் பாசம் குறைந்து மூளை வளர்ச்சி குன்றி குழந்தை மனம் பாதிக்கப் படலாம்.

இது மட்டுமல்ல தமது உறவினர்களுடன் பேசிப்பழகவும் நேரமில்லை.குடும்ப அங்கத்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடும் சந்தர்ப்பமும் மிவும் அரிதாகவே கிடைக்கும்.கணவன் மனைவி வேலைக்குச் செல்பவராயின் கணவனை விட மனைவி சம்பளம் அதிகம் பெறுவாளாயின் இத கணவனிற்கு கௌரவப்பிரச்சினையாகவும் மானப்பிரச்சினையாகவும் இருக்கும்.இத காலப்போக்கில் கணவன் மனைவியிடையே விரிசல் வர வாய்ப்பளிக்கும்.

ஒருபெண் வீட்டில் இருக்கும் வரைதான் அவளிற்கு மரியாதை வேலைக்கு வெளியிறங்கி விட்டலே பல கோணங்களில் பல பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.வேலை செய்யும் இடத்தில் பல ஆண்களுடன் பேசிப் பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் இது கணவனுக்கு பிடிக்காமல் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிணக்காக உருவாகி பிரியும் நிலை ஏற்படலாம்.எப்போது ஒரு பெண் சுயமாக உழைத்து கைநிறைய சம்பாதிக்கிறாளோ அப்போதே அவளிற்கு ஒரு ஸ்த்தானம் வந்து விடும்.சொந்தக் காலில் நிற்கிறோம் என்கின்ற தைரியமும் வந்த விடும்.இதனால் சிறு தவறிட்கும் கணவனை குறை சொல்லுதல் பிறர் பேச்சுக்கேளாமை பெருமைத்தனம் உற்றார் உறவினரோடு ஒண்டி நடவாமை ஏற்றத்தாழ்வு என்று பல தீமைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தான் பெற்றெடுத்த குழந்தையை அதன் பெற்றோர் குழந்தை அருகில் இருந்து அதன் ஒவ்வொரு அசைவையும் அணுவணுவாக ரசிக்க ஆசைப் படுவார்கள் இதுதான் நியதியும்.ஆனால் மனைவி வெளிநாட்டு பணிப்பெண்பாக இருந்தால் இவளின் நிலை மிகவும் பரிதப்பத்பிற்கு உரியது.பிள்ளையைப் பெற்றெடுத்த பாக்கியம் மட்டுமே இவளிற்கு சேரும்.

இப்படி ஒரு துர்ப்பாக்கியம் தேவைதானா?வேலைக்குச் செல்வதால் குழந்தையை மட்டுமல்ல வீட்டையும் கவனிக்க மறந்து விடும்."சுத்தம் சுகம் தரும்" என்பதே நினைவில் இருக்காது.காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக வேலைக்குப் போகவே ஆயத்தம் செய்வார்கள் இந்த அவசரத்தில் வீட்டைக் கவனிக்க நேரம் கிடைப்பதெப்படி வீடு குப்பையான தீமை.இவ்வளவ தீமைகளிற்கு மத்தியில் சில நன்மைகள் இருந்தாலும் அந்த நன்மைகள் சிறந்த முறையில் யாருக்கும் எந்தக் குறையுமின்றி திருப்திப் படுத்தப் படவேண்டும்.ஆனால் இத எவ்வத சந்தர்ப்பத்திலும் சாத்தியம் அளிக்காது அதிலும் பெண்ணால் முடியாத காரியம் .ஆனால் ஆண்கள் அப்படியல்ல "கணவன் உழைப்பிற்கு மனைவி பொறுப்புதாரி" என பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம்.இயற்கையாகவே ஆண்கள் தைரியசாலிகள் பாட்டாளிகள். கணவன் வேலைக்குப் போவதால் அதிக நன்மைகளே உண்டு.தீமைகள் ஓரிரண்டே.குடும்பத்தில் கணவன் வேலைக்குப் போனால்த்தான் மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க முடியும்.கணவன் வேலைக்குப் போகாமல் வீட்லேயே முடங்கிக் கிடந்தால் அக்கம் பக்கம் அசிங்கமும் குடும்பத்தில் அலங்கோலமும் ஏற்பட்டு விடும்.

வேலைக்கு போவதுதான் ஒரு ஆணுக்கு (கணவனுக்கு)அழகு.அவன் வேலைக்குப்போவதால் குடும்பம் குதுகலாமக அமையும். பெறும்பாலும் சிக்கல்கள் வர சந்தர்ப்பமே கிடைக்காது.தன் நம்பிக்கையும் குடும்பத்தில் பொறுப்புனர்ச்சியும் ஏற்படும்.கணவன் வேலைக்குப் போவதால் சிறு சிறு தேவைகளிற்குக்கும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கத் தேவையில்லை.கணவன் வேலைக்குப் போவதாலும் கை நிறைய சம்பாதிப்பதாலும் மனைவி சந்தோசமாகவும் பெருமையுடனும் இருப்பாள்.கணவன் வேலைக்குப் போவதால் பல நன்மைகள் காணப்பட்ட போதிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன.தினமும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தில் நடக்கும் அன்றாட சந்தோசங்களில் துக்கங்களில் கலந்த கொள்ள முடியாத சந்தர்ப்பம் ஏற்படும்.இதிலும் கணவன் மனைவிக்கு சிறு குழந்தைகள் இருந்தால் கணவன் வேலைக்குப் போகும் போதும் உறங்கிக் கொண்டிருக்கும் வேலை முடிந்து வரும் போதும் உறங்கிக் கொண்டிருக்கும்.இதனால் இக் குழந்தையுடன் ஆசை தீர பேசவும் முடியாமல் விளையாடவும் முடியாமல் குழந்தையின் மனதைப் பற்றியும் செயலைப் பற்றியும் புரியாமலும் அறியாமலும் போய்விடும்.திருமணம் முடித்து சில நாட்கள் சென்றதும் தொலைவில் வேலைக்குச் செல்லும் கணவனது நிலை பரிதாபத்துக்குரியதாகும்.கணவன் மனைவியினது ஆசாபாசங்கள் புதைக்கப் பட்டுவிடும்.

அவர்கள் நினைத்த வாழ்க்கை நடாத்த முடியாது. நினைத்த நேரம் நினைத்த விடயங்களிற்கெல்லாம் வீட்டில் இருக்க முடியாது.

வெளிநாடுகளிற்கு வேலைக்குச் செல்லும் கணவனாக இருந்தால் தமது குடும்பத்தில் ஒருவருக்கு சுகமில்லை என்றால் உடனே வர முடியாத துர்ப்பாக்கியமான சூழ்நிலை அவர்களிற்கு ஏற்படுகிறது.இவ்வளவு ஏன் தன் தாயோ அல்லது மனைவியோ சொத்தான குழந்தையோ மரணித்தால் மரணித்த முகத்தையும் பார்க்க சந்தர்ப்பம் கிட்டாமல் போய்விடும்.இப்படியான தீமைகள் ஏற்படுகின்றன.கஸ்டங்களிற்காக கணவன் வேலைக்குப் போனாலும் நிம்மதிக்காக மனைவி வீட்டில் இருப்பது சிறந்தது.

எஸ்.எம்.சபீர்

தோஹா கத்தார்



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக