புதன், 23 ஜூன், 2010

தொலைதூரக் காதல் - 034

---------- Forwarded message ----------
From: sheik salahudeen <nanbansala@yahoo.co.in>
Date: 2010/6/23
Subject: ஈகரை - தொலைதூரக் காதல் - போட்டிக் கவிதை
To: admin@sivastar.net


தோழர் சிவா,
ஈகரை கவிதைப்போட்டிக்கான என் கவிதையை இத்தோடு இணைத்துள்ளேன்.
பெயர்: சலாகுதீன்
ஈகரை புனைப்பெயர் : தாளையன்
வசிப்பது: துபாய்
தொலைதூரக் காதல்....

தூரம்...
உன் இதயத்திற்கும்
என் இதயத்திற்குமா ?
இல்லை
உன் இடத்திற்கும்
என் இடத்திற்குமா ?

தூரம்...
இடம் என்றால்..
அதை கடக்க
வேண்டும் பல வாரம்

தூரம்...
இதயம் என்றால்..
அது நான்
வேண்டி நின்ற வரம்

உனக்கும்..
எனக்குமான..
பறிமாற்றங்கள்
மிகுதியாக
இல்லை

ஒரே பார்வை.
ஓரிரு வார்த்தை..
உயிர் கிள்ளும் சிரிப்பு
உளம் கொண்ட நினைப்பு
இது மட்டுமே

இருந்தும்
எது ஈர்க்கிறது என்னை உன்பால்
நீ எனக்காகவே இறைவன் படைத்த பெண்பால்..

சூரியன் சுட்டுவிடும் தெரியும் எனக்கு
என் வியர்வை துடைக்க உன் முந்தானை போதும் எனக்கு

வானம் தொட்டுவிடும் தூரம் தெரியும் எனக்கு
நான் மானம் காக்கும் ஆடையாய் மாறவேண்டும் உனக்கு

உதயம், உச்சம், அஸ்தமனம் இதுதானே இயற்க்கை வழக்கு
உன்னோடு மட்டுமே என் வாழ்க்கை இது இதயக் கணக்கு

இப்போது எப்படி
இருப்பாய் நீ ?
எப்படி இருந்தாலும் எனை
ஈர்ப்பாய் நீ....

வருந்தவில்லை நான்..
நீ என் தொலைதூரத்தில்
இருப்பதினால்.....
கரை வரண்டா போகும் ?
அது அலை ஓரத்தில்
இருப்பதனால்.....

நான் ஆள நினைப்பது
இந்த சாம்ராஜ்யங்களை அல்ல...
உன் கன்னக்குழிகளின் ஈரத்தை !

நான் வாழ நினைப்பது
முழு பிரபஞ்சத்திலும் அல்ல...
உன் மெல்லிய நிழலின் ஓரத்தில் !

உனைச் சேர நினைத்து
எழுதப்படும் என் கடிதங்கள் எல்லாம்
முடிக்கப்படாமலேயே
என்னால்
கிழிக்கப்பட்டுவிடுகின்றன !

அது உன்னிடம் வந்து சேராதோ
என்கிற அச்சத்தினால் அல்ல...

அது என் இதயப்பையில்
உன் காதல் மட்டுமே இருக்கின்ற மிச்சத்தினால்...

நமக்கு இடையேயான தூரம்
நம்மை பாகுபடுத்தவில்லை
மாறாக என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது..

உன் மீதான என்
ஆசை,
விருப்பம்,
ஏக்கம்,
கனவு

எல்லாம் சேர்ந்து
காதல் என்ற உயிராகி
என்னுள்
கரு கொண்டுவிட்டது


அந்த கரு
காயாகி,
கனியாகி,
கொடியாகி,
விழுதாகும்
வரை என் உயிரூற்றி
பார்த்திருப்பேன்....

ஒரு ஜென்மம் என்ன
ஓராயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
நான் உனக்காக காத்திருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக