செவ்வாய், 15 ஜூன், 2010

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்.. கட்டுரை 006

---------- Forwarded message ----------
From: Saralafrom Kovai <saralafromkovai@gmail.com>
Date: 2010/6/15
Subject: Fwd: பெண்ணாய் பிறந்திட
To: admin@sivastar.net





பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்
உயிர்கள் தோன்றிய ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் ஒரு குழுவாக செயல்பட ஆரமித்தான் அந்த குழுதான் சமூகம் என்கிறோம். ஆரம்ப நிலையில் ஆண் பெண் வேறுபாடுகள் அதிகமாக அறியபடாத சூழலில் தாய் வழிச்சமூகம் தலைதோன்கியது ஆண் வேட்டை யாட சென்று வீடு திரும்பும் போது அவனுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்ய தனிப்பட்ட உரிமையுடைய ஒரு உறவு வேண்டும் என்று அவன் நினைத்ததின் விளைவு திருமணம் என்ற பந்தம் (ஒப்பந்தம் ) உருவானது இவனுக்கு இவள் உரிமையுடையவள் இன்ப துன்பங்களில் இருவருக்கும் சரி பங்கு உண்டு என்ற கருத்துக்கு இணங்க இருவரும் வாழ் வழி செய்தனர்.
" வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர் ஆடவர் உயிர் " ( குறுந். ௧௩௫)
என்ற எண்ணபோக்கை இருந்ததை சங்க இலக்கியம் உணர்த்துகிறது . அதற்க்கு பின் சங்க காலத்தில் வீட்டு வேலை செய்யவும், குழந்தை பேணுவதும் பெண்ணுக்குரிய வேலைகளாகவும் பொருள் ஈட்டுவது அதற்கான தொழில் செய்வது ஆணுக்குரிய வேலைகள் எனவும் அறிவுறுத்தினார். இதில் வெளியே சென்று தொழில் செய்வது கடினம் என்றும் வீட்டு வேலை சுலபம் என்றும் ஒரு மனபோக்கை உருவாக்கி பெண்ணை அடிமை படுத்துவதற்க்கான அடிக்கல்லை நட்டனர். அன்றிலிருந்து தந்தை வழி சமூகத்தை இனம் காண முடிந்தது.
பழம்பெரும் இலக்கியமான தொலகாபியத்தில் தலைவனுக்குரிய பண்புகளை வரையறுத்து கூறுகையில் எவருக்கும் அஞ்சாதவனாக வலிமை உடையவனாக தலைமை தன்மை உடையவனாக இருக்க வேண்டும் என்றார் இதை " மிக்கோனோம் கடிநிலை இன்றே " என்ற வரிகள் புலப்படுத்தும். பெண்ணை பற்றி கூறுகையில் குனிந்த தலையுடன் அதிர்ந்து பேசாமல் அச்சம் ,மடம், நாணம், பயிர்ப்பு என் இந்த கயிற்றுக்குள் பெண்களின் ஆசைகளை தாபங்களை உரிமைகளை கட்டிபோட்டுவிட்டார்கள் அவளின் இயல்பான உணர்வுகளை கூட மறைத்து கொண்டு ஒடுங்கி வாழ கட்டளை இடபட்டால்.
தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில்
"தற்புகழ் கிழவி கிழவன் முன் கிளத்தல் ( தொல். 370 )
தன்னை பற்றி புகழ்ந்து கூறுதல் கூடாது என்கிறார் . தன் திறமைகளை வெளிபடுத்த கூடாது என கட்டுப்பாடு வகுத்த ஆண் சமூகத்திற்கிடையே தனக்குள் புழுங்கி அடைத்து வைக்கப்பட்ட உணர்வுகள் ஒரு நாள் வெடித்து எரிமலையாய் வெளிவந்தது அதுதான் பரத்தைமை என்பது .
பரத்தையர் , காமகிழதியர், காதல் பரத்தையர் என் வகைபடுதுகிறார் தொல்காப்பியர். தந்தை வழி சமூகம் நிலைத்திருந்த காலகட்டத்தில் ஒரு ஆண் மகனை தான் காலடியில் விளசெய்த பரத்தையர் பெண்கள் பற்றி அவர்களின் குண நலன்களை பற்றி தொல்காப்பியரும் அவருக்கு பின் வந்தவர்களும் திருவள்ளுவரும் மிகவும் மோசமாக வரையருகின்ற்றனர்.
ஆனால் தலைவி எனப்படும் மனையாள் தலைவனின் அன்பை பெற ஒழுங்குடன் இல்லத்தை கவனித்து குழந்தைகளை கவனித்து கொண்டு இருபதோடு மட்டுமல்லாது தலைவன் பொருள் ஈட்ட போவதாக சொல்லி தலைவியை பிரிந்த கால கட்டத்தில் தான் உடல் பசியை போக்க பரத்தையரோடு கூடி கழித்து அவளை பிரியா மனமில்லாமல் தன்னுடன் தான் இல்லத்திற்கு அழைத்து வருவான் அவளையும் தான் சகோதரியாக நினைத்து சேவை செய்ய வேண்டும் என்கிறார்.
" கொடுமை ஒழுக்கங்கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணும் " ( தொல் .344 )
என்ற பாடல் மூலம் விலகுகிறார் ஆண் மகன் சமூகம் விதித்த விதிகளை மீறி ஒழுககேடாக வாழ்ந்தாலும் தலைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தவறை மன்னித்து ஏற்றுகொள்ளபடும் ஆனால் ஒரு ஆண் வற்புறுத்தி ஒரு பெண்ணை பலவந்த படுத்தும் போது பெண் சமூக நியதிகளுக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் கூட அவளை அக்கினியில் இறங்க செய்து கற்பின் தூய்மையை சோதித்து பார்க்கும் இந்த சமூகம்.
இவாறு பெண்கள் மரபு முதல் அடிமையாக ஓடுகப்படதன் விளைவு அவளுக்குள் ஒரு மாற்று தேடலுக்கான மனநிலை உருவாகிறது இதை உளவியலின் தந்தை சிக்மன் பிராய்டு கூறுகையில் தோல்வி உணர்வால் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கொள்ள மனம் தன்னை அறியாமலே முயல்கிறது. அம்முயற்சிகள் மனதின் தற்காப்பு முயற்சிகள் எனக்குறிபிடுகிறார். மேலும் அது மாற்று தேடலுக்கு அடிவகுக்கும் பசி, தாகம், பால் உணர்வு போன்ற அடிப்படை உந்துதல்கள் நிறைவேற வாய்ப்புகள் அடைபடும்போது அதன் விளைவு தன் இழப்பின் வேதனையை மறக்க மூலபொருளை ஒத்திருக்கும் ஒரு மாற்று பொருளை பற்றி கொண்டு ஆறுதல் பெறுகிறது.
இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் தந்தையின் அடக்குமுறையால் தன் வயதொத்த ஆண்மகனின் அன்பால் ஈர்க்கபடுகிறாள்.பின் அந்த அன்பு காதலாகி கசிந்து கணவன் என்ற அந்தஸ்து பெறும்போது கண்ணீர் வடிக்கிறாள் எனவே அவன் கணவனாக மாறுவது காலனாக மாறுவதற்கு சமம். கணவன் என்றால் உரிமையுடையவன் மனைவி என்பவள் அவன் கட்டளைக்கு அடிபநிபவள் என்ற எண்ணம் ஆண்களுக்கு குழந்தை பருவத்திலே விதைக்கப்பட்ட விஷயம். குழந்தையாக இருக்கும்போது அவன் முன் நிகழும் தாய் தந்தையின் நடத்தைகள் பதிவாகிறது .தாயை அடக்கும் தந்தையின் செயல்பாடுகள் அவன் மனதில் அழுந்த பதிகிறது அவன் வளர்ந்து ஆளான பின் அந்த பதவியை அவன் அடையும் போது அவன் ஆழ மன பதிவுகள் தலைகாட்டுகிறது. இதுவே பெண்களுக்கு மீதான அடக்குமுறைக்கு அவனை தூண்டுகிறது .
இது புரியாத ஆண்கள் இன்று பெண்களை நடத்தும் விதம் மிகவும் மோசமாக இருக்கிறது அலுவலகம் செல்லும் பெண் எத்தனை விதமான சங்கடத்திற்கு ஆளாகிறாள் வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு கணவனுக்கும், குழந்தைக்கும் ,மாமனார் மாமியாருக்கும், அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து பேரூந்து நெரிசலில் கசங்கிய காகிதமாய் அலுவலகம் செல்கிறாள். அங்கு அவள் எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவள் வகிக்கும் பதவியை பொருட்படுத்துவதில்லை அவளின் உடட்கூறுகளை உற்றுநோக்குவதிலே ஆண்களின் கவனம் இருக்கு.
"அறம் போலும் கூர்மை ரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பில்ல தவர்" (குறள். 997 )
என்ற வள்ளுவரின் வாக்கை செயல்படுதுபவர்களாக இருக்கிறார்கள் எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதா மதிகெட்டவர்களாக இருக்கும் ஆண்களை நினைகையில் வேதனைதான் மிகுகிறது.
எந்த ஒரு போராட்டமானாலும் போர்களமானாலும் முதலில் பாதிக்க படுவது பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று அதிகமாக வளர்ந்து நிற்க காரணம் ஆணை அடக்காமல் அவன் வழியில் வளர விட்டு விட்டு பெண்ணை மட்டும் கண்ணகி போல இரு என்று கற்பை பாதுகாக்க தூண்டிய விதம். இந்த தூண்டுதலை ஆண் குழந்தைக்கும் ஒரு சதவீதம் அக்கறைகாட்டி கோவலனாய் இருக்காதே என்று அறிவுறுத்தி இருந்தால் இன்றைக்கு இந்த சமூக சீர்கேடுகளை கலைந்திருக்கலாம்.
பெண்ணுக்கு பெண்ணையே எதிரி ஆகியது இந்த சமூகம் கருப்பான பெண் என்றால் அதிக சீர் வரிசை கொடுத்தால் தான் திருமண சந்தையில் விலை போகும் என்று purakanikkapadum ஒரு பெண்ணின் வேதனை மாமியார் என்னும் வடிவம் பூண்டு தன் இனத்தையே தாழ்த்தி பார்க்க செய்யும் அளவுக்கு வளர்கிறது. இன்று பெண் ஆணை திருமணம் செய்வது குறைத்து வருகிறது ஓரினச்சேர்கை என்னும் இயற்கைக்கு எதிரான ஒரு இணைவு நடக்க காரணம் ஆண் சமுதாயத்தின் அடக்குமுறைதான். இந்த உறவுகள் நீடித்தால் உயிர் உற்பத்தி தடைபடும் ஆண்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும்.
பெண் மற்றவர்களுக்ககவே உழைக்கிறாள் தன்னை பற்றி சிந்தனைகளை மறந்துவிடுகிறாள் தன் சக்தி அனைத்தையும் குடும்பதிர்க்கும் அலுவலகத்திலும் செலவழித்து விட்டு சோர்ந்து போகையில் அவளுக்கு தோள் கொடுப்பது அவளின் தாயின் தோளாகதான் இருக்கும்.
"புண்பட்டு விட்டாயோ..
என்ற பதைப்புடன் - உன் முகத்தை
பார்த்து பார்த்துப் பணிவிடை செய்ததில்
சொந்த முகமே மறந்து போனது "(எந்தன் தோழன். 290 )
இந்த கவிதையின் வரிகளில் புதைந்து கிடக்கிறது அவளின் சுய உணர்வுகள் .இப்படி பெண் ஒரு தலையாட்டு பொம்மையாக தந்தைக்கும் சகோதரனுக்கும், கணவனுக்கும், மகனுக்கும் பணிவிடை செய்து அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்களின் காலுக்கிடையில் கட்டுண்டு கிடக்கவா பெண்ணாய் பிறக்க தவம் புரிய வேண்டும் என்றாய் " பெண்ணாய் பிறந்திட மாதவம் புரியணும் "
என்ற பாரதிகூட மனைவியின் மனதை அறியாமல் இருந்தவர்தான் " நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் புவியில் எவருக்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டு பாரினில் பட்டங்கள் பல பெற்றாலும் அந்த பட்டத்தின் நூல் ஆணின் கையில் அகபட்டுகொண்டு இருக்கும் வரை எங்களுக்கு விடுதலை என்பதில்லை. என்றைக்கு ஆண்கள் பெண்களை உணர்கிறார்களோ அன்று தான் நல்ல பாரதம் உருவாகும் பெண்களை வேண்டாம் என்று சிசுவிலே கொள்ள நினைததால் இன்று கருவில் பெண் சிசு உருவாவது குறைந்து கொண்டிருகிறது . நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை எதை வேண்டும் என்று நினைகிறோமோ அது கிடைக்கும் எதை வேண்டாமென்று நினைகிறேர்களோ அது கிடைக்காது. பெண்களை வேண்டாம்ன்று நினைக்கும் மூடர்கள் பெண் இல்லை என்றால் உயிர்களின் உற்பத்தி தடைபட்டு இந்த உலகமே அழிந்துவிடும் என்ற பேருண்மை தெரியாதவர்களாக இருப்பதை நினைத்து நெஞ்சு கனக்கிறது.
கோவை மு.,சரளாதேவி

1 கருத்து: