செவ்வாய், 15 ஜூன், 2010

ஈழம் என்று மலரும்? 020

---------- Forwarded message ----------
From: vidhyasan m <m.vidhyasan@gmail.com>
Date: 2010/6/15
Subject: ஈழம் என்று மலரும்?
To: admin@sivastar.net



குண்டு மழையில் நனைந்த பூமி
அதன் சத்தம் அடங்கியதாய் காதடைத்த உலகம்
இன்னும் புகை மண்டலம் கசிந்தபடி...

தாய்( நாடு), தந்தை, குழந்தை,
சகோதரன், சகோதரி, கணவன், மனைவி,
உறவு இப்படி பந்தங்ககளை பந்தாடிய இன வெறி...

தீயில் கருகிய மண்டை ஓடுகளும்
வீ என்று விடுதலை வேண்டி கதறிய ஓலம்
தெருவெங்கும் வெறுமை காயம்
இதை எப்படி இருதயம் தாங்கும்...

குண்டுகள் விதையாக விதைக்கப்பட்டது
உரமாக பிணங்கள் குவிக்கப்பட்டது
மானம் வெட்ட வெளியில் கிழித்தெறியப்பட்டது
வானம் உடையும் அளவு வேதனை ஒலி பிளிறியது...

துப்பாக்கி தோட்டக்கள் உடல் துளைத்து
இன வெறி தாகம் தனிக்க குருதி குடித்தது
ஒவ்வொரு இளைஞர்களின் உயிரும்
அடக்கு முறைக்கு வேட்டையாடப்பட்டது...

அழுகை கூட அனாதையானது
அடுத்த சொட்டு கண்ணீருக்கும் பஞ்சமானது
அறமும்,அன்பும் புறம் போனது
அடிமையை துரத்த ஆயிரக் கணக்கில் உயிர் போனது...

கானம் பாடிய குயில்கள் இடத்தில் கழுகுகள்
மானம் காத்த பூமியில் துரியோதனன்கள்
வீரம் உரைந்த மண்ணில் குருதியின் ஈரங்கள்
விடுதலை செய்த யாகத்தில் அடிமைகள்...

தமிழன் தமிழன் தவிக்கிறான்
கூவி கூவி அழைக்கிறான்
தனி ஈழம் வேண்டி மாய்கிறான்
தனிமையில் புலியாய் பாய்கிறான்...

ஈனப்பிறவிகள் அல்ல
ஈழத்தில் உதித்தவர்கள்
சோர்ந்து போவதில்லை
வீரத்திற்கு பெயர் போனவர்கள்...

மீண்டும் விடுதலை எனும் முரசு கொட்டும்
தீயவர்களின் தலைகளை துண்டு துண்டாக வெட்டும்
இனவெறிக்கு ஓர் முடிவு கட்டும்
அந்த நாள் விரைவில் எட்டும்...

நரிகளின் புன்னகை கேள்வி
ஈழம் என்று மலரும்?
பாயும் புலிகளின் பதில்
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் !!

--
vidhyasan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக