செவ்வாய், 15 ஜூன், 2010

பிரியாத வரம் வேண்டும் 022

---------- Forwarded message ----------
From: rismimusammil rismimusammil <rismimusammil@gmail.com>
Date: 2010/6/16
Subject: பிரியாத வரம் வேண்டும்
To: admin@sivastar.net




கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.

அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.

அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.

விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.

நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!

தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.

அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!

என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?

கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.

அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் - நிஷா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக