வெள்ளி, 18 ஜூன், 2010

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? 011

---------- Forwarded message ----------
From: Best Wishes <best_wishes@ymail.com>
Date: 2010/6/18
Subject: sending a composition..
To: admin@sivastar.net


அன்பை மறந்தமையால்,

தாய்தந்தையின் வளர்ப்பு கடமை என எண்ணியதால்,

பணிவுடன் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒதுங்கியதால்,

நற்பண்பே இல்லாததால்,

சுயநலம் பெருகியதால்,

சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்,

நேரமின்மை என்ற காரணத்தால்,

நேராக பார்க்க மறுக்கும் மனதால் என இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.இவை சமீபத்தில் "அன்பகம்" என்னும் முதியோர் இல்லத்தில் நானும் உணர்ந்தது.

பிறப்பும் இறப்பும்:-

ஒரு குழந்தை பிறந்தவுடன் அத்தாயும் தந்தையும் இப்பூவலகில் பெற்ற இன்பத்திற்கு ஈடு இணையில்லை.அப்படி சீராட்டி பாராட்டி வளர்ந்த பிள்ளை தங்களை மறந்தது அவர் தம் விதி என்றாலும் இறுதி மூச்சு அடங்கும் போது தன் பிள்ளையை பார்க்க வேண்டும் என பெற்றோர் மனம் ஏங்கும் என்பதால் மூதியோர் இல்லத்திலிருந்து அழைத்த மேலாளரிடம் மறுப்பு தெரிவிக்கும் மகன்..

மேலும் மேலாளர் கடைசியாக இம்முறை மட்டும் வந்து செல்லவும் என மன்றாடும் அவலம்...

எனினும் வந்து பார்க்க மறுத்த தன் பெற்றோருக்கு கடைசி காரியத்தை செய்ய மறுத்த இம்மனிதம் வாழ்வது முறையோ...

அனைத்து வசதிகள் இருந்தும் பெற்ற பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை அறியா பிறவியை என்னவென்று சொல்வது?

பணமும் வேலையும்:-



தன்னை படிக்க வைத்த போது பெற்றோர் செய்தது கடமையாக எண்ணும் மகன்,வேலைக்கு சென்றவுடன்..."பணம்" என்பது "மனம்" என்பதனை மாற செய்துவிட்ட விந்தை தானோ..

சுயநலம் என்ற தன் வாழ்க்கை..தன் குடும்பம்... என பிரிகிறது.அங்கே பெற்றோர் முதியோர் ஆகின்றனர்.

பந்தமும் பாசமும்:-

பார்த்து பார்த்து வளர்த்த தாயின் முகத்தை பாராமல் இருப்பது பந்தமும் பாசமும் மறந்ததாலோ..

இங்கு இறைவனிடம் பாடும் போது....

"சித்ராவதி தீர வாஸிராம்

ப்ரபு பர்த்தி புரீஸ்வர ஸாயிராம்

காருண்ய மூர்த்தியாம் சாய்ராம்

கனகாம்பர தாரிணி வாசிராம்

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா..

கற்பகமாகும் உன் திருக்கரங்கள்

எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன்...(உனை)

எங்கேங்கு சென்று நான் தேடுவேன்

பண்ணிசைத்து உன்புகழ் பாடுவேன்

பாராமுகம் இது ஞாயாமா...

கோடி கோடி தவம் செய்தேனோ..(உந்தன்)

கோலம் காண்பேன் எந்தன் வாழ்விலே

தேடக்கிடைகாத செல்வமே

தேவாதி தேவனே நாராயணா......" என்ற பாடலை நினைவு படுத்தியது.இதில் ஒரு தாயும் தந்தையும் தன் மகனை பிரிந்து முதியோர் இல்லத்தில் இருப்பதன் ஏக்கமாக அமைந்தாக சில இந்த பாடலில் உள்ள வரிகள் நம்மால் உணர இயலும்.

சுயநலமும் சூழ்நிலையும்:-

சுயநலமாக தன் குழந்தையை வளர்க்க தாத்தாவும் பாட்டியும் தேவை...அக்குழ்ந்தை வளர்ந்தவுடன் இம்மாதிரி இல்லங்களில் அனுப்பும் இந்த இழிவு நிலை என்று மாறுமோ....அன்று தான் மனிதன் முழுமை பெறுகிறான்.நன்றி மாறாவதன் ஆகின்றான்.

சுயசிந்தனை:-

பிள்ளையின் பெயர் சொல்லி அழைக்க மறுத்த பெற்றோர்,

சொல்லி அழைக்க வைத்த செல்ல பெயர்கள் தாம் ஏராளம்.

ஆனால் பிள்ளையால் கைவிடப்பட்ட பெற்றோர் அடுத்த வினாடியே ஆதரவற்ற முதியோர்கள் என்றே அழைக்கபடுகிறார்கள்.

ஆறாவது அறிவை ஆண்டவன் அளித்தும் ஆதரவற்றவர்களாக ஆக்குப்படுவது சுயசிந்தனை இல்லாததாலோ?

தன் மகனோ/மகளோ அப்பாவின் இனிஷியல் அறியாத போது தாத்தாவின் பெயர் கேட்டால் அறியாமல் இருப்பது இக்காலத்தில் நிகழ்கிறது என்பது யதார்த்தம்.

காரணம் அருகாமையில் இல்லாதது,பார்க்க நேரமில்லை,வளர்ப்பு,சூழ்நிலை,பிள்ளைகளிடம் பெற்றோரை பற்றி தெரிய வைக்காமல் இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

முதியோர் இல்லம்:-

அவர்கள் அங்கு சுகமாய் இருந்தாலும்,மாறாத மனக்கவலை இப்படி எனக்கா? நிகழ்ந்தது! என அவர்களே தங்களுக்குள் சமாதானம் ஆகமுடியாத ஓர் இடமாக தான் கருதப்படுகிறது.எனினும் மறந்து வாழ முயற்சி செய்ய நடைமுறை அவர்களை தள்ளியது.

தன் மகன் வரவில்லை எனினும் மகன் /மகள் வயதில் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்வதில் த்ருப்தி அடைகிறார்கள்.

அன்போட பேசி பழகி வாழ்த்துக்கூறி இல்லம் தன்னில் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவ்வன்பு உள்ளங்களில் நாமும் இடம் பெறுவோம்.

முடிந்தவரை வேண்டியதை செய்திடுவோம்.

வாழ்வில் உன்னதமாய் உயர்வோம்.

அன்பு இருக்கும் மனமதை

அன்பாய் எந்நாளும் போற்றிடுவோம்..

முதியோர் இல்லங்களில் சென்று ஆறுதலாய் பேசிடுவோம்.அவர்களின் மனதை புரிந்து நடந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.வாழும் போதே மரியாதை செலுத்துவோம்.ஒரு முறையாவது சென்று வருவோம் என உறுதியினை எடுப்போம்.

நமக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக சென்று வருவோம்.அவர்களின் வாழ்வில் நடந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் நாம் அவர்களை ஒரு விதத்தில் சந்தோஷம் அடைய செய்கிறோம்.ஆகையால் நம்மால் முடிந்தவரையில்

நல்ல முறையில் காப்போம்.எந்த நாளும் நாம் நலம் பெறுவோம்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக