திங்கள், 21 ஜூன், 2010

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! 013

---------- Forwarded message ----------
From: sumathy udayakumar <udayasudha06@rediffmail.com>
Date: 2010/6/21
Subject: பெண்ணாக பிறந்திட‌......
To: admin@sivastar.net


எல்லாருக்கும் வணக்கம்

பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.

பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.

நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,

நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.

எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.

குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?

இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?

எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.

ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை

நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.

இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.


எழுதியவர்:உதயசுதா
நிஜ பெயர்.உ.சுமதி
வசிப்பிடம்:துபாய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக