வியாழன், 17 ஜூன், 2010

தொலைதூரக் காதல்! .. 027

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/17
Subject: கவிதைப் போட்டி : தொலைதூரக் காதல்
To: eegaraipoem <admin@sivastar.net>



தொலைதூரக் காதல்
என் இனியவளே
இதமாய்
இம்சிக்கபடுகிறேன்
இரவுக்கும் பகலுக்குமான
அந்த மெல்லிய
இடைவெளியில்... !
பூக்கள் என்னிடம்
புன்னகைப்பதில்லை
காரணம்..
எத்தனையோ பூக்களைக்
கண்டிருந்தும் நான்
இம்சிக்கப்படுவது உன்
இதழ்களால் தானே... !
ஆம்
இந்தத் தொலைவுகளில் நான்
தொலைந்து தான் போகிறேன்
உன்னை தேடித் தேடியே..
ஒவ்வொரு முறை
என்னை மீட்டெடுக்க
எத்தனிக்கும் போதும்
ஏளனம் செய்கிறது இதயம்
பின்னே,
அங்கே தேடலுக்கு என்ன
தேவையிருக்கிறது
தொலைந்தது உன்னில் என்றால்...
பிரிவின் கொடுமை
புலப்பட துவங்கிவிட்டது
இதோ என் கண்கள்
நிறைகுடமாகின்றன (உந்தன்)
நினைவுகளோடு... !
முட்களில் நான்
முகம் புதைத்திருக்கிறேன்
மற்றவர்க்காய்..
கீறலின்
முத்திரைகளேனும்
முகத்திரை ஆகட்டுமென்று..
காவல் இருக்கிறேன்
உயிரின் கரையில்
இமைகளைத் தொலைத்துவிட்டு..
கைது செய்ய மாட்டேன்
களவு போவதை,
என் தேவையெல்லாம்
காண வேண்டும்
கள்ளி நீ
வந்து போவதைத் தான்.. !

- நியாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக