செவ்வாய், 15 ஜூன், 2010

தமிழுக்கு அமுதென்று பேர் 021

---------- Forwarded message ----------
From: Thiru Karan <sthiruva@yahoo.com>
Date: 15 June 2010 22:41
Subject: thamilukku amuthenru per
To: admin@sivastar.net



தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழிங்கு துயரத்தில் உறைகின்ற சீர்
உயிரென்ற உரமிட்டு உழுதிட்ட பேர் - இந்த
உலகுக்கே தெரியாத புதிரான தேன்?

இளமைக்கும் இனிமைக்கும் இறுமாந்த தாய் - இன்று
ஒருதிக்கும் தெரியாது தடுமாறும் நாள்
கொடுமைக்கு இரையான கொடிமுல்லையே - உன்னை
கொலுவேற்ற ஒரு நாளை உருவாக்குவோம்

தாய் நாட்டில் தமிழென்று கொடியேறுது - அங்கு
தமிழாளும் நிலை கண்டு மகிழ்வூறுது
மா நாட்டில் மானாட மயிலாடுது - இங்கு
மானத்தை விலைபேச துணைபோகுது

கானத்தில் தமிழெங்கும் களியாடட்டும் - எங்கள்
ஓலத்தில் ஒளிந்திட்டீர் ஏனோ அன்று
சீனத்தை நாம் நம்பி வாழ்ந்தோமில்லை - உங்கள்
சீலத்தால் ஏமாந்து போனோம் அய்யா

கவிதையில் பெற்றீர் ஐயா கடல்போல் புலமை -ஆயினும்
காண மறந்தீரேசொந்தச் சோதரர் நிலைமை
செம்மொழி மட்டும் தானா உங்கள்
செவிவழி வந்துபாயும் - பாவம்
எம்மொழி பேச இங்கு எவரெவர் மிஞ்சுவாரோ



சிவகுருநாதன் திருவாகரன்
இலங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக