திங்கள், 14 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம் / தொலைதூர காதல்

---------- Forwarded message ----------
From: Saralafrom Kovai <saralafromkovai@gmail.com>
Date: 2010/6/15
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்
To: admin@sivastar.net


ஈகரை சிவா அவர்களுக்கு ,
என் பெயர் கோவை மு. சரளாதேவி நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி பாரதியார் பல்கலைகழகம், கோவை . ஈகரையில் வரும் படைப்புகளை சில நாட்களாக படிக்கிறேன் அருமையான பதிவுகள் மேலும் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனைகளை தூண்டும் வகையிலும் தமிழை வளர்க்கும் உங்கள் பணி வளர்க. கட்டுரை மட்டும் கவிதை போட்டி அறிவிப்பு கண்டேன் எனக்குள் இருக்கும் திறமைகளை வெளிபடுத்த நல்ல மேடையாக ஈகரை இருக்கும் என்ற நம்பிக்கையில் சமர்பிக்கிறேன் என் படைப்புகளை என்னையும் ஒரு அங்கமாக இணைத்தால் உங்களோடு இணைந்து தமிழுக்கு பணி செய்த பாக்கியம் பெறுவேன் நன்றி

1.இனி ஒரு பிறவி வேண்டாம்

எனக்குள் உன் விதைகளை
விதைக்கும் போது இன்ப அதிர்வுகள்
இனம் கொள்ள முடிந்தது
எனக்குள் வேறாய் ஊடுருவி
விருச்சமாய் வளர்கையில்
என் ஜீவன் துளிர்த்தது

என் நரம்புகள் அறுத்து
என் சதைகள் கிழிந்து
என் இரத்தம் வழிந்தோட
என் உணர்வுகளை உயிராக்கி
ரத்தத்தை பாலாக்கி
உன்னை உருவாக்கி
உலகை காண செய்தது இதற்க்கு தான

உடல் கொடுதவளின் உடலை சிதைத்து
உயிர் கொடுதவளின் உயிரை எடுத்து
பாலூட்டிய மார்பை கசக்கி - நீ
பிறந்த உறுப்பை சிதைத்து
உனக்கான சிதையை உருவாக்கி கொண்டிருக்கிறாய்

போதும் இந்த பிறப்பு
குருதி குடித்து சதை தின்னும் பிணங்களோடு
மலக்குழியில் நித்தம் நிணம் தின்னும் வாழ்வும்
மரணத்தோடு போராடி மடிந்துபோகும் நிமிடங்களும்
இனி ஒரு பிறப்பிலும் வேண்டாம் ..

2. தொலைதூர காதல்

பார்வைகளில் பால் சமைத்து
பசியாரிகொண்டோம்
பால் நிலாவை பார்த்துகொண்டே
பல இரவு களித்தோம்

தூரத்தில் நாம் இருந்தாலும்
கைகோர்த்து நடந்தது நம் காதல்
நம் நினைவுகளின் உயிரூட்டத்தில்
வாழ்ந்திருந்தோம் பல வருடங்கள்

வருடம் ஒருமுறை வந்தாலும் - உன்
வருகை வசந்தமாய் வாசம் வீசி
குறிஞ்சியாய் மலர்ந்து
குதூகலித்தது எனக்குள்

இப்போது nee என் அருகில் இருந்தாலும்
உனக்கும் எனக்குமான இடைவெளி
வானளவு நீள்கிறது
உடல்கள் மட்டுமே உரசுகிறது

நெருங்கி வந்தாலே நெருஞ்சியாய் மாறி
நெஞ்சை குத்துகிறது - நீ
குறிஞ்சியாய் எனக்குள் குதூகலித நினைவுகளோடு
தொலைதூரம் செல்கிறேன் .......


கோவை மு. சரளாதேவி
18/2JS, அண்ணபுரம்,
போத்தனூர்,
கோவை - 641023
9789189444


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக