செவ்வாய், 15 ஜூன், 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...! 025

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/6/16
Subject: கவிதைப் போட்டி: இனி ஒரு பிறவி வேண்டாம் !
To: eegaraipoem <admin@sivastar.net>


கலங்கி நிற்கிறோம்..
கண்களையே நம்ப முடியாமல்..
பூக்களாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தவர்கள்
அங்கே
புண்ணாக்கப்பட்டு
மண்ணோடு மறைந்தார்களே
ஐயோ... !
தீவிரவாதத் தீயிற்கு
தீனியிடப்பட்ட
மனிதக் கொள்ளிகள்
எத்தனை எத்தனை... !
கைகொட்டும்
சப்தத்திற்குக் கூட
நெட்டி முழித்திடும்
பச்சிழம் பிஞ்சுகள் (அவர்கள்)
சாமரம் கொண்டு
வீசப்பட வேண்டியவர்கள் (அங்கே)
சருகுகளாய்... !
தங்கள்
உயிரான உறவுகள்
உயிருக்காய் துடிக்கையில்
உணர்வுகளற்ற
உருவ பொம்மைகளாய்
உருமாறிப் போனது
எத்தனையோ உள்ளங்கள்... !
ரம்மியமான தெருக்கள்
ரணகளமாகிப் போனதன்
காரணம் புரியாமல்
ரணப்பட்டுப் போயிருக்கும்
மழலை மொட்டுக்கள்
மீதமிருப்பது
அம்மாவா இல்லை
அப்பாவா
என்று தெரியாமல்... !
இத்தனைக்கும்
சிந்திய கண்ணீர்
அத்தனைக்கும் இனி
எவர் சொல்வார் விடை..
காரணம்
எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
துடைக்கப்பட்டல்ல (அதுவாய்)
வற்றித்தான் எப்போதும்... !
இந்த பூமியில் பிறந்தது தான்
எம் தவறென்றால்
இதுவோடு போதும்
நிச்சயம்
வேண்டாம் எங்களுக்கு
இன்னொரு பிறவி... !

- நியாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக