புதன், 16 ஜூன், 2010

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! 009

---------- Forwarded message ----------
From: Sumathi <krishnaamma.sa@gmail.com>
Date: 2010/6/16
Subject: katturai poti
To: admin@sivastar.net





நான் வேலைக்குப்போகும் பெண் இல்லாவிட்டாலும் கூட போவதன் கஷ்ட நஷ்டம் தெரியும். கொஞ்சம் 'financially sound ',financially independent ' என்பார்களே அது உண்டு . ஆனால் அதற்காக நாம் இழப்பவை............... ரொம்ப அதிகம். என்னை பொறுத்தவரை நன்மை என்று பார்த்தால், மற்றவர்களை விட பொருளாதாரத்தில் அவர்கள் தேவலாம், பெண்கள் தங்கள் படிப்பால் சமுக அந்தஸ்து பெற்றதை சொல்லலாம். அவ்வளவு தான். இது தான் நன்மை.

இப்ப தீமை களை பார்க்கலாம்.

இந்த தலைப்பில் "கணவன் மனைவி வேலைக்கு போவதால்" என்று இருக்கு. நான் அதற்கு கொஞ்சம் முன் போக ஆசைபடுகிறேன் . சம்பாதிபதால்

பெண்ணுக்கு கல்யாணமே பண்ணாமல் அப்பா அம்மா சும்மா இருக்கா தெரியுமா? என் உறவுக்கார பையன் 'தோஷ ஜாதகம்' என்பதால் அவனுக்கு பெண் அமைய நாள் தள்ளிக்கொண்டே போயிடுச்சு. இப்ப அவன் வயது 35 , போன மாதம் ஒரு பெண் ஜாதகம் பொருந்தியது. அவன் மாமா போய் (முன் எல்லாம் எங்க பிரிவில் பெண் வீட்டார் தான் வந்து சொல்வார்கள், இப்ப காலம் மாறிபோச்சு ) விஷயத்தை சொல்லி போட்டோ கேட்டு இருக்கார். பிறகு தரோம் என்று சொன்னவர்கள் தொடர்பே கொள்ளவில்லை. இவரே 2 முறை போய் கேடும் சரியான பதில் இல்லை, வேண்டாம் என்றும் சொல்லல . அந்த பெண்ணுக்கு 31 வயது. இதுக்கு என்ன சொல்வது?

நானும் என் பையனுக்கு பெண் பார்கிறேன் , எனவே எங்க ஜோசியர்ரிடம் கேட்டபோது அவர் 'குண்டை' போடறார். 'Now a days பொண்கள் நன்னா சம்பாரிகரதுகள் , அதுனால அதுகளை கல்யாணம் பண்ணி அனுபிசுப்ப்டா ..........ன்னு பெத்தவா யோசிகரா " என்று சொன்னாரே பார்க்கணும். நானும் இவரும் ( என் கணவர் புன்னகை ) பயம் ரொம்ப ஆடி போய்டோம். இது என்னடா புது குழப்பம் என் இருந்தது. சோகம்

இது கல்யாணம் ஆவதற்கே உள்ள பாடு. இது தீமை தானே?

கல்யாணமானதும், 'shift ' தகறாரு. இப்ப IT இல் உங்களுக்கே தெரியும் UK Shift , USA Shift பிரபலம். இத்துடன் காலை போய் மாலை வரும் ஷிபிட் ம உண்டு. இதில் கணவன், மனைவி கு UK / USA ஒருவருக்கும் காலை - மாலை ஷிபிட் ஒருவருக்கும் இருந்தால் போச்சு. அவர்கள் weekend குடித்தனம் தான் பண்ணனும். அது இல்ல 'callcenter வேலை என்றால்............ சுத்தம். இதுல நன்மை எங்க வந்தது?

அடுத்தது குழந்தை பேறு. முன்னல்லாம் இது "பெரும் பேறாக" கருதப்பட்டது, ஆனா இப்ப "பெரும் போராக " கருதப்படுகிறது. ஆண்கள் விரும்பும் குழந்தை பேறை பெண்கள் தங்கள் career ரின் தடையாக நினைகிறார்கள் . இதில் வேலை பேதேம் இல்லை. கரகாடப்பெண்கள் கூட கோவில் திருவிழாவின் போது கருத்தரிப்பது இல்லை மீறி கரு தரித்தால் கலைகிறார்கள். அது அவர்களின் career

இது சமுகத்துக்கு தீமை இல்லையா?

இப்படி பல தாண்டி குழந்தை பெற்றால், அதை வளர்க கஷ்டம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பரவாஇல்லை. இல்லாவிடில் ? ஆயாமா, பேபி ஸ்கூல், குழந்தைகள் காப்பகம்...இப்படி எங்காவது கொண்டுவிடனும். அது குழந்தை நம் 'பர்ஸ் ' இரண்டையுமே பாதிக்கும் விஷயம். அநியாயம்

இதெல்லாம் விட பெரியது மாமனார் மாமியார் நாதனார் மைத்துனர் என் புக்ககத்து மனுஷா பற்றியது. அவா அனைவரையம் அனுசரிசுண்டு போகணும், பண்டிகை பருவம் , கல்யாணம் , காதுகுத்தல் என் எல்லாம் வரும் கணவன் மனைவி இருபக்க உறவுகளுக்கும். ஒன்றை விட்டுகொடுத்தால் கூட போச்சு, கணவன், அவன் மனைவிக்கு ரொம்ப இடம் கொடுக்கறான் என்பார்கள்.

தவிர ஆபீஸ் வேலை + வீடு வேலை செய்யணும். பசங்க பள்ளிக்கு போக ஆரம்பித்தால் படிப்பு சொல்லிகொடுக்க கஷ்டம். உடனே டியுஷன் வைக்கணும். அதுகள் மற்ற அம்மா வை பார்த்து விட்டு , மதியம் உணவுக்கு அது வேண்டும் இது வேண்டும் என் சொல்லும் . நீங்களே ஒரு டிவி விளம்பரம் பார்த்து இருப்பிர்கள் . ஒரு பெண் தன தலை முடி குறைவாய் இருப்பதாகவும் அம்மாவுக்கு அதிகம் என்றும் சொல்லும். அதற்கு அம்மா சொல்வாள் 'நீள முடி வளர்ப்பது கஷ்டம் மா, எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தா, அவங்க வீட்டுல இருந்தாங்க முடிந்தது நான் ஆபீஸ் போறேனே " என்றதும் சற்றும் யோசிக்காமல் அந்த குழந்தை " நீயும் போகதே ஆபீஸ்" என் சொல்லும். இது தான் குழந்தைகளின் மனநிலை . நீங்கள் அவர்களுக்காக சம்பாதி பதாக சொல்ல்லலாம் ஆனா அவர்களுக்கு அன்று மதிய உணவும் நீள முடியும் தான் முக்கியம். இந்த சின்ன சின்ன சந்தோஷம் களை அது இழக்கும் பொது, நாம் என்ன சம்பாதித்து என்ன என்ற மனநிலை உங்களுக்கே வரும்.

ஆபீஸ்லும் promotion , transfer , foreign chance என் பல வரும். சமாளிக்கணும். இதுல்லாம் மீறி வேலைக்கு போகும் / வரும் நம் வீட்டு வேலைக்கார அம்மா முதல் IT பெண்கள் வரை ஆண்களால் பலவிதத்திலும் தொல்லை. ஒன்னும் புரியல

ஆதலால் பெண்களே, நன்மைகளை விட தீமைகளே நிறைய இருபதால் , தவிர்கமுடியாவிட்டால் வேலைக்கு போங்கோ. படித்த படிப்பு வீணாகாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்கோ . எப்படியும் வேலைக்கு போய் 2 - 3 வருஷம் சம்பாதித்த பின் தான் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் . பிறகு குழந்தை பெரும் வரை போங்கள். குழந்தை பெற்றதும் ஒரு 3 - 4 வருஷம் அந்த குழந்தையுடன் காலம் கழியுங்கள். அது உங்கள் வாழ்வின் பொன்னான நேரம் . போனால் வராது. நீங்கள் கோடி கோடி யாய் கொட்டி கொடுத்தாலும், உங்கள் குழந்தை சொல்லும் முதல் வார்த்தையை கேட்கும் நாள் திரும்ப வராது. அதன் முதல் அடி, தளர் நடை எல்லாம் இழப்பீர்கள். முதல் 3 வருடங்கள் தான் ஒரு குழந்தையின் மிக முக்கியமான நேரம் . அதை உங்கள் வேலையால் இழக்காதீர்கள்

இங்கு நான் ஒன்று சொல்லணும் .என் தோழியின் சகோதரி, அவள் குழந்தையை தூககிக்கொண்டு வந்தாள். 2 வயது குழந்தை. என்னமாய் பேசுகிறது, பழகுகிறது. நானும் இவரும் 1 மாதம் வரை அவளை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம் . அவ்வளவு அருமையான குழந்தை . அதற்கு எவ்வளவு சொல்லி கொடுதிருந் தாள் அவள் அம்மா. ! நான் யோசனை வந்து கேட்டேன் , " நீ வேலைக்கு போகலையா? இதெல்லாம் யார் சொல்லி குடுத்தா? " என்று. அவள் சொன்னால் இல்ல , இவள் பிறந்ததும் நான் வேலைய விட்டுட்டேன், இனி இவ ஸ்கூல் போகும் பொது போவேன் " என்றாள். எனக்கும் இவருக்கும் சந்தோஷம் என்றாலும் ஆச்சரியமும் வந்தது . ஏனென்றால் அவள் வேலை செய்தது தூதரகத்தில். இவளுக்காக தானே என் சம்பாத்தியம் என்றாளே பார்க்கணும். Hats off to her .

குடும்ப வாழ்கை வேலை இரண்டயும் இரு கண்ணாக பாவியுங்கள். வேலை என்றுமே குடும்ப வாழ்கைக்கு தடையை இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். நன்றி பணம் மட்டுமே வாழ்கை இல்ல. நான் 25 வருடங்களுக்கு முன்பு என் குழந்தையை தூக்கிக்கொண்டு, தனி குடித்தனம் போன போது என் அப்பா சொன்னா.

நீ குடித்தனம் பண்ணும் போது இதை நினைவில் வைத்துகொள் ,

அவசியமானதை வாங்காதே ! தவிர்கமுடியாததை வாங்கு !! என்று.

இன்று வரை நான் அதை கடை பிடித்து வருகிறேன் நன்றக உள்ளேன். அது போல் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். சம்பாதிபதற்கு ஒரு அளவு ( target ) வைத்துகொள்ளுங்கள் . பிறகு வாழ்கையை அனுபவியுங்கள். நமக்கு உள்ளது ஒரு வாழ்கை தான் அதை நிறைவாக வாழுங்கள். சந்தோஷம் பணத்தில் இல்ல நம் மனதில் தான் இருக்கு. பணத்தில் என்றால் டாட்டா , ப்ரில்லா தான் சந்தோஷமாக வாழ முடியும். நம் ஊர் குப்பனும் சுப்பனும் வாழ முடியாது. சோ,

அவசியத்துக்கு வேலைக்கு போகதீங்க !

தவிர்க்கமுடியாடி போங்க !!


நன்மையை காட்டிலும் தீமையே அதிகம் உள்ள வேலை தேவையா என் யோசியுங்கள் ! பொறுமையாய் படித்ததற்கு நன்றி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக