திங்கள், 14 ஜூன், 2010

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? (கட்டுரை) - ஹாசிம்

---------- Forwarded message ----------
From: haseem hafe <hafehaseem@gmail.com>
Date: 2010/6/14
Subject: முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? (கட்டுரை)
To: admin@sivastar.net

இன்றைய நவீன யுகத்தில் தொழில் நுட்பங்களும், பொருளாதாரமும், வாழ்கைத்தரமும் வெகுவாக அதிகரித்துச்செல்லும் அதே வேளை பெற்ற பிள்ளைகளே கண்களாக நோக்க வேண்டிய பெற்றோர்களைக் கவனிக்கும் முதியோர் இல்லங்களும் அதிகரித்துச்செல்வதை அதிகமாக காண்கிறோம். சமகாலத்தில் பெருகிவரும் இவ் விடயமானது அலசி ஆரயப்பட வேண்டிய மிக முக்கியமான குறையாகும்.

பிள்ளைப்பேறு இல்லாது அவதியுறும் பெற்றோர்களுக்கு மத்தியில் தவமிருந்து எத்தனையோ இன்னல்கள் அடைந்து ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்து நல்ல கல்வியை தேர்வு செய்ய வழி செய்து சமூகம் மதிக்கும் நிலைக்கு நல்ல நிலையை உருவாக்கும் ஏணிப்படிகளாக இருப்பவர்கள்தான் பெற்றோர்கள். ஒரு தாயோ தந்தையோ தன் குழந்தையை நல்ல நிலையில் வாழச்செய்வதற்குத்தான் எண்ணுவார்களே தவிர அந்தப்பிள்ளையை தீய விடயங்களுக்கு இட்டுச்செல்லவோ கெட்ட செயல்களை நாடச்செய்யவோ ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள் மாறாக தான் செல்லும் பாதையில் தவறான பழக்கங்களுக்கு ஆழாகும் குழந்தைகள்தான் சமூதாயத்தின் தலையிடியாகவும் தூற்றப்படுபவர்களாகவும் மாறுகிறார்கள் அதற்கு ஒரு போதும் பெற்றோர் காரணமாக அமைவதில்லை.

தன்னைப்பெற்ற எம் தந்தையோ தாயோ எம்மை வளர்த்தெடுக்க எவ்வளவு சிக்கல்கள் எம் கண் முன்னே படுகிறார்கள் என்பதை அவர்கள் கூட இருந்து பார்த்து அவர்கள் அடையும் கவலைகளில் நாமும் பங்கேற்று நமது அத்தனை உயர்விலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்தும் தனக்கென்று ஒரு துணை தனக்கென்று ஒரு குழந்தை தனக்கென்று ஒரு வீடு அடையும் போது அந்த தாய் தந்தை மீதான பாசம் பராமரிப்பு கவனம் அவர்கள் மீது எமது பங்களிப்பு அத்தனையும் குறைந்து செல்கிறது எமது முழுக்கவனமும் எமது விடயங்கிளில் கவனம் செலுத்துகிறோமே தவிர அவர்களை விட்டு விடுகிறோம். பெற்றோர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை இதனால்தான் என்சூழ்நிலை இப்படி என்று தப்பித்துக்கொள்கிறார்கள் பெருமனம் கொண்ட பெற்றோரும் தன்பிள்ளை நலமுடன் இருந்தால் போதும் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் இது பிரதான காரணமாக அமைகிறது இயல்பாக நடைபெறும் காரணமாகவும் இருக்கிறது


இது ஒரு புறமிருக்க நல்ல கல்விமான்களாக சமூகம் மதிக்கும் அழவு நல்ல அந்தஸ்தை அடைந்த நல்ல பிள்ளைகளாலேயும் பெற்றோர்கள் இந்த நிலைக்கு ஆழாகிறார்கள் என்று எண்ணும் போதுதான் கவலையடையச்செய்கிறது. ஒரு சிலர் தான் விரும்பாத நிலையிலும் தனது சுழ்நிலைகாரணமாக தனது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் நிலையையும் பார்க்கிறோம். சிலர் அதிக நோய் மற்றும் கவனிக்க முடியாத நிலை காரணமாகவும் விட்டுவிடுகின்றார்கள் எது எப்படியானாலும் முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகிறதே இது இப்படியே விட்டு விட்டால் நாளை கல்வி கற்பிக்கும் பாடசாலைகளை விட முதியோர் இல்லங்கள் அதிகரித்து விடும் என்பதில் ஐயமில்லை.


இது தவிர வாய்க்கின்ற மனைவியால் அல்லது கணவனால் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு விடையாக பெற்றோரைச் சாடுகிறார்கள் இவர்களால்தான் எமக்கு எல்லாப்பிரச்சினையும் என்று எண்ணி அவர்களை தனிமைப்படுத்தி இவர்களை வெறுக்கிறார்கள் வேறாகிறார்கள் அவர்களை அனாதைகளாக்குகிறார்கள்.மற்றும் செல்வங்களுக்கு அடிமையாகும் சிலராலும் இந்த நிலை பெற்றோர்களின் செல்வங்களை பிள்ளைகள் பங்கு பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பிள்ளையும் பந்தாடுவது போல் தன் பெற்றோரை நடத்துவதால் இதை விட முதியோர் இல்லங்கள் மேல் என்றும் நாடுகிறார்கள். இவ்வாறே இயற்கை அளிவு யுத்தம் போண்ற பேரளிவுகளாலும் பெற்றோர் அனாதரவாகி முதியோர் இல்லங்கள் அதிகரிக்கிறது.

எல்லோராலும் அனுமதிக்ப்படுகின்ற தனிக்குடித்தனம் என்ற விடயம்தான் அதிகமான பெற்றோரை பரிதவிக்கச்செய்கின்றது தனிக்குடித்தனம் என்று கணவன் மனைவி மாத்திரம் வேறாக நினைக்கிறார்கள் தன்னைப்பெற்ற தாய் தந்தையையோ அல்லது தன்மனைவியைப்பெற்ற தாய் தந்தையையோ பொருட்டுத்துவதில்லை தனிக்குடித்தனம் செல்லும் போது இவர்கள் எம்மோடு கூட இருந்தால் தலையிடியாக நோக்குவதால்தான் அவர்களையும் வீதியில் விட்ட இவர்கள் உல்லாச வாழ்கையுள் நுழைகிறார்கள். அது பிழை என்பது கருத்தல்ல நமது சந்தோசம்போல் எமது பொற்றோரையும் சந்தோசமாக வைத்திருப்பது எமது கடமையாகாதா? நாங்கள் அவர்களைக்கவனிக்கிறோம் என்று ஊருக்குக் காட்டுவதற்காக வெள்ளி அல்லது ஞாயிறு போண்ற விடுமுறை நாட்களில் முதியோர் இல்லங்களை பார்வையிட்டுத்திரும்புகிறார்கள் இவைகள் வெட்கப்பட வேண்டிய விடயங்களாக அமைகின்றது

இப்படிப்பட்ட அதிகமான காரணங்களால் முதியோர் இல்லங்கள் அதிகரிக்கக் காண்கிறோம் ஆனால் அத்தனை காரணங்களுக்கும் விடைகள் இல்லாமல் இல்லை அதற்கான தீர்வுகள் இருந்தும் நாடுபவர்களுமில்லை. மனித மனங்கள் பல ரகமானவை ஒருவர் மற்றவர்போல் இருக்க மாட்டார்கள் எதிர்பார்க்கவும் முடியாது இருந்தாலும் பெற்றோர் எண்று பார்க்கும் கோணத்தில் முதியவர்கள் அனைவரும் பெற்றோர்கள்தான் எம்மைப்பெற்றாலும் வேறு ஒருவரைப்பெற்றவராக இருந்தாலும் அவர்களும் எம்போண்றவர்கள் அவர்கள் முதுமை அடைந்தார்களளே தவிர அவர்களுக்கும் அத்தனை மனித குணங்களும் இருக்கின்றன வயது ஏற ஏற குழந்தைத்தன்மைதான் அவர்களிடம் அதிகரிக்கும் எவ்வாறு எமது குழந்தைகளை நோக்குகிறோமோ அவ்வாறே எம்பெற்றோரையும் நோக்கினால் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எம்மை குழந்தையாக நோக்கிய பெற்றோரை நாம் குழந்தையாக நோக்குமிடத்து நாளை எம் குழந்தைகள் எம்மை அரவணைப்பார்கள் ஆதரவு தருவார்கள் என்ற எண்ணம் எப்போதும் எம் மனங்களில் குடியிருக்குமேயானால் பெற்றோரை எக்காலத்தும் பிரயமாட்டோம் பிரிபவர்களை அனுமதிக்கமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் இந்த எடுகோளை வாழ்கையாக கொள்வானேயானால் உலகத்தில் அனாதைப்பெற்றோர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தன்னைத்தான் திருந்தினால் உலகம் திருந்தும் என்பது போல் ஒவ்வொரு மனிதனும் தன்பெற்றோர்களை கவனிக்கத்துவங்கினால் அனைத்துப் பெற்றோர்களும் சுபீட்சம் பெறுவார்கள்.

இந்த விடயத்தில் ஒரே ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தைக்கவனத்தில் கொள்ள வேண்டும் பேரளிவுகளால் ஏற்படும் முதியோர் இல்லங்கள் விதிவிலக்கானது அதற்கு மாற்று விடையம் இருக்கிறதா என்பது சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனை நிவர்த்திப்பதற்கும் ஆனாதைச்சிறார்களை தத்தெடுப்பது போல் பெற்றோரையும் தத்தெடுத்துக்கொள்ளலாம் இதுவும் தீர்வாக அமையும்.

பாரிய பிணிகளில் பாதிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோரைப்பொறுத்தவரை இது பிள்ளைகள் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும் பத்து மாதம் சுமந்து ஈண்ற அந்த தாய் படும் அவஷ்தையை விடவா நாம் அவர்களின் பிணிகளில் காணப்போகிறோம் அவர்கள் மடியில் குழந்தையாக நாம் தவழ்ந்த நேரம் உண்ணும் உணவிலுமல்லவா மலசலம் களித்திருப்போம். இவைகளைத் தாங்கிய பெற்றோர்கள் நோயினால் படும் கஷ்டத்தில் பங்கு கொள்ள மனங்கூசும் எம் உள்ளங்களை என்ன வென்று சொல்வது மனிதத்தன்மை கொஞ்சமாவது எமக்கிருந்தால் நோய்வாய்பட்டு விட்டார் அவரை பராமரிக்க எம்மால் முடியாது என்ற காரணம் கூறி முதியோர் இல்லங்களில் விடுவது எக்காலத்தும் மன்னிக்க முடியாத குற்றமாகும் அதன் வேதனை நீங்கள் உங்க்ள் முதுமையில் அனுபவிக்கும் நிலையில் உணர்வீர்கள். எவ்வளவுதான் நோய் இருந்தாலும் எம்மோடு காட்டிக்கொள்ளாமல் எமக்கு ஒரு நோய் என்றவுடன் பதறும் பெற்றோர்களை எம் கை கொண்டு பார்க்காமல் பிறர் உதவி நாடுகிறோமே மனங்கள் கூச வில்லையா?

முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர் நிலை பற்றி கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்காத பிள்ளைகளும் இருக்கிறார்கள் இல்லங்களுக்குச்சென்று முதியவர்களைச் சந்தித்தால் அவர்கள் கண்ணீர் மல்க கூறுவது என்பிள்ளை வரவில்லை என்னை பார்க்க வில்லை நீங்கள் கண்டீர்களா? நலமாயிருக்கிறார்களா என்றெல்லாம் அங்கலாய்ப்பார்கள் அப்போதும் தன்பிள்ளையின் நலத்தில்தான் கவனமாக இருப்பார்கள். முதியோர் இல்லங்கள் என்று பெருமையாக கூறுகிறோம். அப்படிப் பெருமைப்படுமளவு ஒன்றுமில்லை நல்ல மனம் படைத்த நல்லவர்கள் தயவில் கருணை நோக்காகக் கொண்டு நடாத்தும் நல்ல விடையம் இருந்தாலும் பெற்றோர்கள் நிலையில் அது அவர்களுக்கு சிறைக்கூடம்தான் அவர்களுக்கு தன் பேரப்பிள்ளை கொஞ்சுவதற்கும் உறவுகளுடன் அன்பாக இருப்பதற்கும் ஆசையில்லையா அத்தனையும் குழிதோண்டிப் புதைத்துத்தான் அங்கு வாழ்கிறார்கள் என்பது பதைக்கும் விடயமாக இருக்கிறது.

மனம் அழுகிறது சமூகத்தில் முதியோர்கள் படும் அவலங்களைக்கண்டு அத்தனைக்கும் பிள்ளைகளே காரணம் ஒவ்வொரு பிள்ளையும் தன்பெற்றோரை பேணுவார்களாக இருந்தால் உலகில் எந்த இடத்திலும் முதியோர் இல்லங்களின் அவசியமே இல்லாதிருக்கும் வேண்டாம் இந்த கொடுமை நாளை உங்களுக்கும் இந்த நிலை வந்தால் எப்படி அனுபவிப்பீர்கள் என்ற எண்ணங்கள் மனங்களில் நிறுத்தி பெற்றோரைப்பேணி முதியோர் இல்லங்களை நல்ல போதனைக்கூடங்களாக்குங்கள் சமூகத்தில் உள்ள கொடுமைகள் தானாகவே அழிந்து விடும் உலகம் சாந்தி பெறும். நன்றி

நேசமுடன் ஹாசிம்
ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக