செவ்வாய், 15 ஜூன், 2010

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 007

---------- Forwarded message ----------
From: Sumathi <krishnaamma.sa@gmail.com>
Date: 2010/6/16
Subject: katurai poti
To: admin@sivastar.net

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ரொம்ப சரி ............ ஆனா தெய்வம் எப்பவுமே சோதிக்கும். நான் அதை பற்றி பேசபோகிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் அல்லவா? நாம் இரண்டாவது பக்கத்தையும் தான் என்ன என்று பார்ப்போமே. எப்போதும் பிள்ளைகளையே குறை சொல்வதை கொஞ்சம் நிறுத்தி விட்டு மறு பக்கத்தையும் கொஞ்சம் பார்ப்போமே. ஏனென்றால் 'எரிவதை தணித்தால், கொதிப்பது நின்றுவிடும்' அல்லவா?

"எதானாலும் அவா வயசானவா, பெரியவா நாம் தான் தழைந்து போகணும்" என சொல்பவர்கள் தயவு செய்து மேலே படிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். அப்படி பட்டவர்களுக்கு உண்மை கசக்கும், அவர்களால் உண்மையை ஜெரிக்க முடியாது. சோ, நீங்க மேலே படிக்கச் வேண்டாம்.

நான் சொல்வதை காதுகொடுத்து கேட்டு பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு சொல்பவர்கள் மேலே படித்தால் போரும். வழக்கு ஆரம்பிக்குமுன்னே தீர்ப்பு சொல்பவர்கள் எனக்கு வேண்டாம். ( தயவு செய்து யாரும் கோபிக்க வேண்டாம் ) பிள்ளைகளை குறை சொல்லி சொல்லி பெரியவர்களை , தங்கள் தவறை உணரும் படிக்கு யாரும் செய்யலை. பெரியவர்களிடம்/வயதானவர்களிடம் ஒரு சிறிய விழிபுணர்வை என்னால் ஏற்படுத்த முடிந்தால் ரொம்ப சந்தோஷ படுவேன். நானும் உங்கள் எல்லோரயும் போல் முதியோர் இல்லங்களை குறைக்க/ஒழிக நினைப்பவள் தான்.ம்ம்.. முகாந்திரம் போரும் விஷயத்துக்கு வருவோமா? நாம் இங்கு விதிவசத்தால், போர் அல்லது சுனாமி, நிலநடுக்கம் போன்ற அசம்பாவிதங்களால் தனிமை படுத்தப்பட்டு முதியோர் இல்லங்களில் இருப்பவர்களை பற்றி பேசபோவது இல்ல. பெண் பிள்ளை சுற்றம் எல்லாம் இருந்தும் முதியோர் இல்லங்களில் இருப்பவர்களை பற்றி தான் பேச போகிறோம்.

முதலில், யாரும் அப்பா அம்மா கு எதிரி இல்ல. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்' என்பது போல், அன்று வினையை விதைத்தவர்கள் இன்று முதியோர் இல்லத்தில் அதை அறுக்கிறார்கள்.

(நான் முரட்டுதனமாய் சொல்வது போல் இருந்தாலும் மேலே படிக்கவும்)

ஆமாம் அன்று குழந்தைகளுடன் பேச கூட நேரம் இல்லாத, வேலை பணம் சேர்க்கணும் என்று பறந்த அதே அப்பா அம்மா தான் இன்று அதேபோல் பேச கூட நேரம் இல்லாமல் சம்பாதிக்க பறக்கும் மகனிடம் கோபம் கொள்கிறார்.

மற்றவர்களிடம் அவனை பற்றி குறை கூறுகிறார். அன்று அவர் அவன் கேட்டதெல்லாம் வாங்கி தர தான் நான் வேலை பார்த்தேன் என்பார்; ரொம்ப சரி இன்று பிள்ளையும் அதே சொன்னால் ஏன் தப்பாய் படுகிறது?

நீ அன்று பணத்தை தந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்தேன் என்று சொல்கிறாய் , இன்று அவனும் cheque மூலம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் அது தவறா?

ஒரு சிறிய குழந்தைகு எது வேண்டும் என்று கூட தெரிந்துகொள்ளாமல், நான் அவனுக்காக தான் சம்பாதிக்கிறேன் என்று அன்புக்கு பதில் பணத்தை தந்த தாய் தந்தைகு இன்று மகனும் ( அவனுக்கு கற்றுத்தந்தது அதுதானே?) அதையே தந்து ஒருவீட்டில் - முதியோர் இல்லத்தில் விட்டால் கோவம் , தனிமை வேதனை ஏனப்பா? "தோசையை மகன் இன்று திருப்பி போட்டால் கோவம் ஏனப்பா?

பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் கஷ்டபடுவதே கூட அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். வேளாவேளைக்கு சாப்பாடு, தேவையானால் டிவி, அவர்கள் வயதை ஒத்த பல நண்பர்கள் . வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு. நான் தான் வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பேசறேனே? உடல் நலம் சரி இல்லையானால் டாகடர் வருவாரே? எல்லா ஏற்பாடும் செஞ்சுடுதான வந்தேன் என்பான். இதே வார்த்தைகளை தான் அவர் ( அப்பா) அவன் சிறுவனாக இருந்தபோது ஒரு பர்த்டே கோ ஒரு சுற்றுலா கோ போகும் போது, சொல்லிருப்பார். ஆனால் இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. கண்டிப்பாக அன்று அவன் வருத்தப் பட்டு இருப்பான், இன்று நாம் அன்று அப்பா செய்ததை போல் அவரை கஷ்டப்படாமல் பார்துகொன்டாலும் கூட அவர்கள் என் சந்தோஷமாக இல்லை என்று குழம்புகிறான்.

இதைத்தான் நான் 'வினை ' என்று முதலில் சொன்னேன். இப்ப புரிகிறதா நெலைமை? அன்று பணம் என்று பறந்தவர்கள் இன்று அன்பு என்றால் எங்கிருந்து வரும்? Now it is tooooooooooo late . போனது போனது தான்.

2 ) அடுத்ததாக, போனவாரம் விஜய் டிவி இல் 'நீயா நானா ?' பார்த்தீர்களா ? அதில் கோபிநாத் சொன்னது போல் பிள்ளைகளை 'இன்வெஸ்ட்மென்ட்' மாதிரி வளர்ப்பது. அதாவது, அவனை 'இத படி அத படி ' என உயிரை வாங்குவது. placement கிடைக்காவிட்டால் "தண்ட சோறு" என்பது. அவ்வளவு நாள் ஆசை ஆசையாய் வளர்த்த பிள்ளை அப்படி சொல்ல எப்படி தான் மனம் வருமோ? பிள்ளைகள் மனம் உடைந்து 'சீ' என் ஆகி விடுவார்கள். அன்புக்கு ஏங்குவார்கள், அறுதல் வார்த்தைகளுக்கு ஏங்குவார்கள். வேலை கிடைத்ததும் 'உனக்கு என்னைவிட பணம் தானே முக்கியம், எடுத்துக்கொள். என்னை விட்டுவிடு " என்பார்கள். பிறகு என்ன முதியோர் இல்லம் தான்.

3 ) இது எல்லாம் மீறி மகன் ஆசையாய் ஒரு A / C யோ ஒரு கிரைண்டர் ஒ வாங்கி தந்தால், அதை பாராட்டாமல் உடனே, "நான் அந்தகாலத்தில் 10 ரூபா சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன், அப்ப fan 25 ரூபா, நான் வாங்கி வந்து எங்க அம்மாவுக்கு போடேன் . இது என்ன பிரமாதம் இவளோ சம்பளத்தில் இத வாங்கி வந்துட்டியா பெருமையாய் " என பிள்ளைகள் மனதை உடைப்பது. அந்த பிள்ளைக்கு இது புது

செய்தி (பாட்டிக்கு அபபா fan வாங்கினது ) மேலும் இப்ப அப்பாக்கு இந்த பொருளால் சந்தோஷமா இல்லையா என் தெரியாது. இது ஒரு பொறி தான், இது பல நாட்களாய் வளர்ந்து, மருமகள் வந்ததும் ( தன்னை அபபா அவமானபடுத்தும் போது பொறுமையாய் குழம்பிய மகன் , எதிர் வார்த்தை கூட கேட்காமல் ,புது மனைவியை சொன்னதும் பதட்டப்படுவான் - அது சரி தானே?) சில நாட்களில் அபபா அம்மா முதியோர் இல்லத்தில்.. முடிந்தது பிரச்சனை.

4 ) ஒரு அபபா அம்மா கு 4 - 5 குழந்தைகள் இருந்தாலும் பிரச்சனை வருதே, என்றால், அதுவும் அவர்கள் வளர்ப்பு தான். சின்ன வயது முதலே பெற்றவர்களுக்கு எதாவது ஒரு குழந்தையை ரொம்ப பிடிக்கும். ( சினிமாவில் தான் எல்லோரும் சமம், நிஜத்தில் இல்ல ) போச்சு, இங்க ஆரம்பிச்சது தொல்லை. அனைவரும் பெரியவர்கள் ஆனதும் "உனக்கு தான் அவளை / அவனை தானே பிடிக்கும் அங்கேயே போ " என பெற்றோர்களை பந்து ஆடுவார்கள். நீங்கள் பார்த்திர்கள் என்றால், செல்லம் கொடுத்த குழந்தை வாழ்வில் ரொம்ப முன்னேறாது - அது தான் முன்னேறா ததற்கு அபபா அம்மா தனக்கு கொடுத்த செல்லமே காரணம் எனவே என்னிடம் வராதே, உன்னால் என் வாழ்வே போய்டுச்சு - என்று சொல்லாமல் செயலில் காண்பித்து துரத்தும். . செல்லம் கொடுக்காது வளர்த்த பிள்ளைகளாவது வைத்துகொள்வார்கள் என்று பார்த்தால், அவர்கள் இவர்கள் கூட இருந்தும் இல்லாமல் வளர்ந்தவர்கள் இன்று அவர்களுக்கு அபபா அம்மா தேவையில்லை. முடிவு........ முதியோர் இல்லம் தான். கழிவிரக்கம் தான்.

மேலும் முன்பு எல்லாம் பெற்றோகள் தங்கள் காலத்துக்கு பிறகு தன் குழந்தைகள் சேர்ந்து வாழனும் என் விரும்புவார்கள். ஆனால் இன்று ஒவ்வொருவர் ஒரு நாட்டில் இருக்கும் போது , அவர்கள் தனி தனியாய் அபபா அம்மாவை காண வரும் போது இவர்கள் அவர்களிடம் மற்ற பிள்ளைகளை பற்றி குறை சொல்லி , நீதான் எனக்கு நெறைய பணம் தருகிறாய், அவன் தண்டம்' என் சொல்ல வேண்டியது . என்றாவது அவர்கள் (பிள்ளைகள் ) பேசும் போது உண்மை வெளிவரும். அடுத்தமுறை வரும் போது அவர்களாகவே பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு பணத்தை கட்டி விட்டு போய்விடுவார்கள். (இது என் சுற்றத்தில் நடந்த உண்மை )

5 ) போறாததற்கு இந்த அப்பாக்களுக்கு வாய் நீளம். "நீங்க யாரும் என்னை பாத்துக வேண்டாம், அவன் அவன் பாட்டை அவன் அவன் பாருங்கடா" என் சொல்லி சொல்லி வளர்ப்பார். பெறகு அதை யே பிள்ளை செய்தால் முதியோர் இல்லத்தில் உட்கார்ந்து கொண்டு பிள்ளையை குறை சொல்வார். என்ன நியாயம்? அவர் விரும்பியதை தானே அவர்கள் செய்கிறார்கள்? இது எப்படி தப்பாகும்? எனக்கு புரியலப்பா .

6 ) மேலும் ஒரு மகன் சிறுவனாக இருக்கும் போது அவனை 'இன்வெஸ்ட்மென்ட்' ஆக வளர்க்கும் அதே அபபா அவன் வேலைக்கு போய் கைநெறைய சம்பளம் வாங்கும் போது விரோதி போல் நடத்துகிறார். அங்கு அவர் தன் மகனை பார்பதில்லை மற்ற்றொரு ஆண்மகனை பார்க்கிறார். தான் ஒய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிட தன் மகனின் முதல் சம்பளம் அதிகம் என்கிற நெஜத்தை அவரால் - அவர் தன்மானதால் (ஈகோ ) தாங்க முடிவதில்லை. இந்த உண்மையை ஒப்புக்கொள்ள ரொம்ப நெஞ்சு உரம் வேண்டும். இந்த உண்மை மகனுக்கு தெரியவரும் போது மனம் உடைகிறான் , செய்வது அறியாமல் திணறுகிறான். மேலும் மேலும் அவன் மௌனம் சாதிக்க

சாதிக்க , அபபா ரொம்ப பிள்ளையை குத்திக்காட்ட குத்திக்காட்ட, ஒருநாள் பிள்ளை பொறுமை இழந்து அவர்களை கொண்டு விடுவான் முதியோர் இல்லத்தில்.

இப்பொழுது உள்ள காலத்தில் தாய் தந்தையர் கள் தங்கள் பிள்ளைகள்

மேல் பொறாமை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இது பச்சையான நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை . இது எல்லா அபபா அம்மா களுக்கும் பொருந்தாது. ஆனால் இந்தமாதிரி முதியவர்களும் நம் சமுதாயத்தில் இருபதால் தான் முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன.

இந்த அபபா அம்மா களுக்கு, பிள்ளைகள் western culture ல் வளரனும், ஆங்கிலம் பேசணும் அமெரிகாகாரனை போல் , ஆனா ஒரு சாதா இந்தியன் போல் - புராண கால ----------------- போல் பெற்றோர் சேவையும் செய்யணும். இது எந்த ஊர் நியாயம்? பசங்க அமெரிக்கன் போல் அபபா அம்மா வை தனியாய் வைத்து 'Father 's day , Mother 's day கு வாழ்த்து சொன்னால் கூடாதாம். நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்.

7 ) இங்கு வெறும் அப்பாக்கள் கதை மட்டும் இல்ல. அம்மா கதை யும் உண்டு. முதியோர் இல்லத்தில் தங்களால் முடிந்த வேலையை செய்யும் அம்மாக்கள், வீட்டில் ஒரு ஸ்பூன் னை கூட நகர்த்த மாட்டார்கள். மருமகள் 9 மணிக்கு வந்தாலும் அவள் தான் சமைக்கணும் . அதையும் சும்மா சாபிடமாடர்கள் அடுத்தாத்து மாமி இடம், "இவ எப்போவரா ளோ அப்ப தான் நாங்க சாப்பிடனும் " என்று சொல்வா. அந்த மாமியும் நீங்க என் சமைகலன்னு கேட்க மாட்டா. ஏன்னா அவளும் இவ வயசு தானே, அவ தன் மாட்டு பெண்ணை பற்றி சொல்வா. ஆனா இந்த இரண்டு பெரும் முதியோர் இல்லத்தில் நல்லா வேலை செய்து, அங்கு நல்ல பேர் வாங்கிண்டு மாட்டு பெண்ணுக்கு கெட்ட பேர் வாங்கி வைப்பா. "இந்த மாமியை போய் ஒருத்தி யால 'அட்ஜஸ்ட் ' பண்ணிண்டு போகமுடியலையே , கலி காலம் " என்று சொல்வார்கள். அந்த மாமியாரும் தன் மருமகளை திட்டுவதை பெருமையாய் பார்ப்பாள் . (என்ன கருமம்டா இது?)

8 ) இதெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் ஒரு பத்திரிகை செய்தி . ஒரு வாலிபன் தன் மனைவியை தன் தாய் தந்தையுடன் விட்டுவிட்டு வளைகுடா சென்று உள்ளான். இங்கு அந்த தந்தை மருமகளை 'நீ சும்மா தானே இருகிறாய் , உன் இளமையை வீணடிக்காதே " என் கூபிடுகிறார் இதற்கு அந்த தாயும் உடந்தை. இப்ப மகன் வந்ததும் என்ன செய்வான்? சரியாய் சொன்னிர்கள் ......... பெற்று வளர்த்த பாவத்திற்காக அவர்களை கொல்லாமல், முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான் . இது எப்படி இருக்கு?

அதனால் தோழர்களே, வெறும் வயதை காரணமாய் வைத்து, அந்த போர்வையில் தன் தவறுகளை மறைத்து, தான் பெற்ற குழந்டிகலையே

அதனால் தோழர்களே, வெறும் வயதை காரணமாய் வைத்து, அந்த போர்வையில் தன் தவறுகளை மறைத்து, தான் பெற்ற குழந்தைகளையே மற்றவர் தூற்றும் படி நடக்கும் பெற்றோர் களுக்கு பாவம் பார்காதிர்கள். அவர்களுக்கு 'எடுத்து உரைத்து, இடித்து உரைத்து' மகன் மற்றும் மகளிடம் ஒத்து போகசொல்லி அறிவுரை சொல்லுங்கள். அவர்கள் எதானாலும் தன் குழந்தைகளை விட்டு கொடுக்காத மனம் பெறட்டும்.

இந்த கால் குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள . நமக்கு அவர்களிடமிருந்து என்ன வேண்டும் என் சொன்னால் போரும் . அவர்கள் செய்வார்கள். இந்த நாட்களில் உள்ள இளம் பெற்றோர்கள் தங்கள் தாய் தந்தையரிடம் படும் அவஸ்தை களை பார்க்கும் எந்த ஒரு குழந்தை யும் தன் பெற்றோரை அவர்கள் காலத்தில் முதியோர் இல்லத்தில் விடாது. முன்பு சொன்ன "தாத்தா வோட அன்ன சட்டிய வெச்சு கோப்பா, உனக்கு உதவும் " என சொல்லாது. அதனால் எதிர் காலத்தில் முதியோர் இல்லங்கள் குறையும். என நம்பலாம்.

முதியவர்கள் கொஞ்சம் அனுசரித்து போகதுவங்கினால், இளயவர்களும் அதை நிச்சயம் பின்பற்றுவார்கள்.

பொதுவாகவே, எல்லா அபபா அம்மா களும் பாவம் இல்ல, எல்லா பிள்ளைகளும் கொடியவர்களும் இல்ல என்பதை சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம் . அது 1 % நிறைவேறினால், இந்த கட்டுரை ஒருவருக்காவது 'eye opener 'ஆக இருந்தது என்றால் நான் மகிழவேன். பொறுமையாய் இதை படித்தமைக்கு மிக்க நன்றி.

With warm regards,

SumathiSundar


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக