புதன், 16 ஜூன், 2010

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - 008

---------- Forwarded message ----------
From: sumathy udayakumar <udayasudha06@rediffmail.com>
Date: 2010/6/16
Subject: கணவன் மனைவி வேலைக்கு போறதால வர்ற நன்மைகள்,தீமைகள்
To: admin@sivastar.net


எல்லாருக்கும் வணக்கம். பணிக்கு செல்லும் பெண் என்பதால் நான் இந்த தலைப்பை எடுத்து உங்களுடன் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன்.
என் கருத்துகளை படித்து பின் யாரும் இனிமேல் இரண்டு பேரும் வேலைக்கு போறவங்களை பார்த்து அவங்களுக்கு என்ன இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க.கை நிறைய பணம் வருதுன்னு வயித்தெரிச்சல் பட மாட்டிங்க.


நான் முதல்ல நன்மைகளை சொல்லிடுறேன்.

நன்மைகள்

1) இன்னிக்கு முழுசா வீட்டுல சும்மாதான இருந்த அப்படின்னு மனைவிய பார்த்து கணவன் கேட்க முடியாது.

2) மனைவிக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்குது.தன்னொட பெத்தவங்களுக்கோ,உடன்பிறந்தவங்களுக்கோ எதாவது உதவி செய்ய நினைக்கும்போது கணவன் கைய எதிர்பார்க்க வேணா

3) மனைவி தன்னொட பொருளாதார சுமைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை தருவதால் அவள் மேல் கணவனுக்கு அன்பு அதிகமாகுது

4) பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியுது

5) மனைவியோட அறிவு நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் பயன்படுத்த படுகிறது.

எனக்கு தெரிஞ்சவரை இதுதான் நன்மைகள்


அடுத்து தீமைகளுக்கு வர்றென்

1) இரண்டு பேரும் வேலைக்கு போறதால முதல்ல சந்திக்குற பிரச்சினை குழந்தை வளர்ப்புதான்.குழந்தைகளுக்கு தன்னோட பெற்றொருடன் இருக்கும் நேரம் குறையுது.அவங்க தன்னொட அம்மாவையும் வேலைக்கு போகாத மத்த அம்மாக்களையும் ஒப்பிட்டு பார்க்குறாங்க.தனக்காகத்தான்,தன்னொட எதிர்காலத்துக்காகத்தான் அம்மா வேலைக்கு போறாங்கன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.

2) மனைவிக்கு கூடுதல் பணிச்சுமை.பணிச்சுமை அதிகமாகும் போது
சாதரணமா வர்ற எரிச்சல்,கோபம், இயலாமை எல்லாத்தையும் வீட்டுல
காமிக்கும்போது கணவன், மனைவிக்குள்ள பெரிய சண்டை வருது

3) 24 மணி நேரத்துல மனைவி 6 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதால்
அவளுக்கு உடல் நலம் பாதிக்குது. அவ உடல் நலம் பாதிச்சா குடும்பத்த கவனிக்க ஆள் இல்லாம போகுது.

4) வேலைக்கு போறதால பிள்ளை பேற்றை தள்ளிபோடும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்

5) எதாவது ஒரு கருத்தை வேலைக்கு போகும் மனைவி எதிர்த்தால்
"வேலைக்கு போகும் திமிரில் பேசுறா" அப்படின்னு ஒரு சொல் வரும்

6) உறவினர்கள் வீட்டு விசேசத்துக்கோ,இல்ல கெட்டதுக்கோ சில சமயம் போக முடியாது போறதால வர்ற கெட்ட பெயர்.

7) தனிக்குடித்தனம் இருந்தாலும் கூட்டு குடும்பமா இருந்தாலும் மருமகள் தன்னை கவனிக்கவில்லைங்கிற வீட்டு பெரியவங்களொட புலம்பல்.

8) முக்கியமான பிரச்சினை வேலைக்கு போற பெண்ணுக்கு ஏற்படுற பாலியல் தொல்லைகள்

9) கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தா கணவனோட சந்தேக கேள்விகள்.


என்னடா இவ நன்மைய விட தீமை அதிகமா சொல்லுறாளென்னு நினைக்காதீங்க.இந்த தீமைகள் எல்லாமே களையகூடியவைதான்.
மனைவி வேலைக்கு போகும் வீட்டுல இருக்கற கணவன் அவள புரிஞ்சிட்டு
அவளுக்கு அன்பா நாலு வார்த்தை பேசினாலெ பாதி பிரச்சினை முடிஞ்சிடும்.
அவளுக்கு உறுதுணையா எல்லா விதத்திலும் இருந்தா மேல சொன்னா தீமைகள் எல்லாம் காத்துல கரையுற கற்பூரம் மாதிரி ஓடி போய்டும்.
பாலியல் தொல்லைகள் கொடுக்கும் ஆண்களுக்கு இப்பெல்லாம் பெண்கள் சவுக்கடி கொடுக்க தொடங்கிட்டாங்க.

இந்த கட்டுரைய எழுதியவர்:உதய சுதா.
உண்மையான பெயர்.சுமதி
வசிப்பிடம்:துபாய்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக