திங்கள், 14 ஜூன், 2010

மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம் - ஹனி

---------- Forwarded message ----------
From: haneesa shamsu <haneshams@gmail.com>
Date: 2010/6/15
Subject: மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்.
To: admin@sivastar.net


மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா? என்று யுத்தத்தால் பாதிக்கப் பட்டு வாழ்கின்ற தமிழ் மக்களிடம் கேட்டால் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள். இவர்கள் மட்டும் அல்ல நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களும் இதனைத்தான் கூறுவார்கள். இதனை தற்காலத்தில் பாராமல் மூன்று தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்ததனைப் பார்த்தால் தெரியும்.

மூன்று தசாப்தங்களாக இலங்கையானது ஆழ்கடலில் சூழ்புயலில் சிக்கிய தலைவன் அற்ற கப்பலைப் போன்று போராடிக் கொண்டிருந்தது. அன்று இந்நாடு அனுபவித்தது மரண வேதனையா? அல்லது கொடிய நோயா? என்று தெரியவில்லை. கடந்த முப்பது வருடங்களாக இலங்கை சின்னா பின்னமாக்கப் பட்டு சீரழிந்து கொண்டிருந்தது. கொலை, கொள்ளை, பலவந்தம் போன்ற அலைகளால் மோதப் பட்டு சிறிது சிறிதாக அழிந்தது. யுத்த நிறுத்ததை கொண்டு வர பல நாடுகள் முயற்சி செய்தன. அது எதுவும் கைகூட வில்லை. கடைசியில் யுத்த நிறுத்தமில்லையேல். இலங்கை ஒரு போதும் உயர்வடையப் போவதில்லை என்ற நிலைக்கு அனைவரும் வந்தனர்.

இலங்கை நாட்டில் நான்கின மக்கள் மூன்று மொழி பேசுபவர்களாக இருக்கின்றனர். இங்கு சிங்களவர்கள் ( பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்) அதிகமாக வாழ்கின்றனர். இதனால் இந்நாடு சிங்கள நாடு என்று அழைக்கப் படுகின்றது. சிங்களவர்களால் அலச்சியப் படுத்தப் பட்டு துன்புறுத்தப் பட்டு வரும். சிறு பாண்மையினருள். தமிழர்களும் அடங்குகின்றன. இவர்கள் அதிகமாக வட கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். இவர்கள் சிங்களவர்களால் விரட்டப் பட்டார்கள். இதனால் அந்த தமிழ் மக்களுக்காக வட கிழக்கை ஒரு தனி நாடாக தர வேண்டும் என்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான வரதராஜப் பெருமாள் கேட்டார். முன்னொரு நாள் வட கிழக்கு இணைக்கப் பட்டு நடாத்தப் பட்ட தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின் தனது இக்கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் இவரது கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நிராகரிக்கப் பட்டது.

தமிழ்மக்கள் பட்ட கஷ்டம் நாளுக்கு நாள் அதிகமாகின. அச்சமயத்தில் தான் தமிழர்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைப் பிரபாகரன் தமிழர்களுக்காக தனி நாடு வேண்டுமென்று வரதராஜப் பெருமாளின் கோரிக்கையை முன் வைத்து விடுதைப் புலிகளின் இயக்கத்தினை உருவாக்கினார். இதன் தலைவராக இவரே செயற்ப்ட்டார்.

ஆரம்பத்தில் அகிம்சையாய் ஆரம்பிக்கப் பட்ட இவ்வியக்கம் பின் துப்பாக்கிளையும், வெடிபொருட்களையும் வைத்து நடாத்தப் பட்டது. இதற்க்குப் பல தலைவர்களை பலி எடுத்து பெரும் புரட்சிப் படையானது. அப்போது இலங்கையில் இருந்த அரசியல் வாதிகளும், அரசியட் கட்சிகளும் தங்களின் அரசியல் வாழ்வுக்காகவும், அதில் கிடைக்கும் லாபத்திற்க்காகவும் இவர்களை ஒரு பகடைக் காய் போல் வைத்திருந்தனர். அனைவரும் இவர்களை வைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்தனர். ஆனால் எவரும் இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வில்லை.

இதனால் தமிழ் மக்களுக்காக போராட உருவான இயக்கம் பின் தமிழர்களின் உயிரைக் குடித்ததுமில்லாமல் இளைஞர்களினதும், சிறுவர்களினதும் எதிர்காலத்தை இருளில் மிதக்க விட்டது. இலங்கையில் எவரும் சுதந்திரமாக நடமாட முடியாமல் போனது. தமிழ் மக்கள் என்றாலே அனைவரும் பேச தயங்கும் அளவுக்கு இவ்வியக்கம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டது. இலங்கையில் பயங்கர வாதம் தீவிரமாக ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு 1983 ஆகும். இந்தாஅண்டில் நடந்த கலவரம் கறுப்பு ஜூலை கலவரம் என அழைக்கப் பட்டது.

எந்த தேவையைக் கருதி இவ்வியக்கம் ஆரம்பிக்கப் பட்டதோ அதனை மறந்து சிங்களவர்கள் என்ன தவறை செய்தார்களோ அதை விட பயங்கரமாக இவர்கள் நடந்து கொண்டார்கள். தமிழ் மக்களுக்காகப் போராடி அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க ஆரம்பித்த இயக்கம் 1983 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை அவர்களின் உயிரையே அதிகமாக குடித்தது மடுமல்லாமல் மற்ற இனத்தவர்களின் உயிரையும் குடித்தது.

இந்த யுத்தம் ஒரு வருடமா இரண்டு வருடமா முப்பது வருங்கள் நடை பெற்றது. இந்த யுத்தம் ஆரம்பித்து 1983ம் ஆண்டுக்குப் பின் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்தன. இவர்களின் இயக்கத்திற்க்கு ஆட்கள் தேவைப் பட்ட போது இவர்கள் பயன்படுத்தியது சிறுவர்கள் ( மாணவர்கள்) இளைஞர்கள் அப்பாவி மக்களைத்தான். வலுக்கட்டாயமாக இயக்கத்திற்க்கு சேர்த்தனர். கையில் புத்தகத்தை தூக்க வேண்டிய வயதில் துப்பாக்கியையும் கழுத்தில் சைனட் குப்பிகளையும் சுமந்தனர்.இதற்கெல்லாம் காரணம் கேட்ட போது அவர்களின் தேவையை நிறை வேற்றி தரவில்லை எனக்கூறினர். அவர்கள் அவ்வாறு கூறியது தவறு அதற்க்கான காலமும் வந்தது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற காலத்தில் யுத்த நிறுத்ததை கொண்டு வந்தார். கொண்டுவந்தது மட்டுமல்லாமல் சமாதான பெச்சு வார்த்தையும் நடந்தது. இப்பேச்சு வார்த்தை சில தடவை ஜெனிவாவிலும் நடந்தது. இதில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முக்கிய அங்கத்தவர்களான. அண்டன் பாலசிங்கம், சு. ப. தமிழ் செல்வன் ஆக்கியோரும் கலந்து கொண்டனர். இப்பேச்சு வார்த்தையில் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் நினைத்திருந்தால் ஒரு கௌரவமான இடத்தை பிடித்திருக்கலாம். அவர் அவ்வாறு செய்யவில்லை மாறாக அதனை தங்களின் ஆயுதப் போராட்டத்திற்க்கான ஆயுதங்களை சேர்க்கவே இதனைப் பயன் படுத்தினார். அப்போதைய யுத்த நிறுத்ததின் போது இலங்கையின் முதற்தரப் பாதையான A9 பாதை தற்காலிகமாக திறக்கப் பட்டபோது அனைவரும் எண்ணிலடங்காத சந்தோஷம் அடைந்தனர் ஆனால் அது நிலைக்க வில்லை.அந்த சந்தோஷம் நிலையானதாக இருக்கும் என நினைத்த போது அதனை மறுத்து மீண்டும் ஒரு ஆயுத வாழ்க்கைப் போராட்டமே வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு பிரபாகரன் வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு எரிமலை வெடிக்கும் போது ஏற்படும் தாக்கத்தை விட அது புகைந்து புகைந்து சூழலை மாசடையச் செய்து பொருளாதாரத்தையும் சீர் குழைக்கும் போதுதான் தாக்கமும் அதிகமாகும். யுத்தம் எனும் எரிமலை முப்பது வருடங்களாக புகைந்து சமீபத்தில் வெடித்தது. அது வெடித்த அவ்வேளையில் அப்பாவி ஜனங்கள் கருகிச் சாம்பலானர். சிலர் ஊனமுற்றனர். சிலரின் சந்ததியே கருகிப் போனது.இதற்க்கு காரணம் யுத்தம் ஒன்று வந்தமையாகும்.

ஆரம்பத்தில் தம் பிள்ளை வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ சென்றால் அவர்கள் வரும் வரை அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பார்கள். இதற்க்கு காரணம் விடுதலைப் புலி இயக்கமாகும். ஒன்று கடத்திக் கொண்டு செல்வார்கள் இல்லாவிடின் கொலை செய்யப் படுவார்கள். எத்தனையோ பேர் இவ்வாறு தன் பிள்ளைகளை இழந்து கணவன்மாரை இழந்து தனது பெற்றோர்களை இழந்து தவித்தனர்.

ஒரு சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம், வன்னி என்று சொன்னால் மக்கள் நடுங்கும் அளவிற்க்கே இருந்தது. யாரும் அந்த ஊர்களுக்குச் செல்வதில்லை அங்கிருந்து யாரும் வேறு ஊர்களுக்கும் போக முடியாத நிலை ஏற்ப்பட்டது. இலங்கைக்கு பிடித்த ஒரு கொடிய நோயாக இந்த யுத்தம் கொண்டது. தமிழ் மக்களுக்காக ஆரம்பித்த இப்போராட்டம் பின் அவர்களையே அதிகமாக துன்புறுத்தியது. இவ்வாறு பிரபாகரன் செய்தும் கூட யுத்தம் முடிவடைந்தது தவறு என்று பலர் கூறுகின்றனர். காரணம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்று கொடுக்க இனி யாரும் இல்லை என்று கூறுகின்றனர். இதற்க்கு பல அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்குகின்றனர். இலங்கை மட்டுமன்றி இந்தியாவிலும் இவற்றுடன் தொடர்பாக இருந்த பல அரசியல் தலைவர்களும் இதற்க்கு ஆதரவு வழங்குகின்றனர்.

சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து சண்டையும் சச்சரவும் இருந்து கொண்டே இருக்கிறது. யுத்தங்களால் இளைத்து சளைத்துப் போய் இருக்கும் மக்கள் அழிந்து வாழ்விழந்த கட்டந்தரைகளாக மாறி உள்ளனர். விளை நில புலங்களும் உருமாறி அழிந்து சிதைந்து தரை மட்டமாகி உள்ளன. நாடு முன்னைய நிலையை அடைந்து இயங்க யுத்த நிறுத்தம் தேவை ஒரு நாட்டை மற்றைய நாடு உறிஞ்சி விழுங்கும் காலம் போய் தன்நாட்டை தானே உறிஞ்சி விழுங்கும் நிலை கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் காணப் பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற காலம் தற்போது இல்லை.

நாட்டில் எந்த நேரமும் பிரச்சினை இந்த யுத்ததினால் எத்தனையோ மக்கள் தனது கை, கால், கண், உயிர் என இழக்காதது எதுமில்லை. எவர்களுக்காக இந்த இயக்கம் வந்ததோ அவர்களின் உயிரையும், நின்மதியையும் பறித்தது. எத்தனை பிள்ளைகள் தன் பெற்றோரை இளந்து அனாதைகளாக தன் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது என்று தெரியாமல் இவர்களின் அவலத்தை துடைப்பதற்க்கு ஒரு சிலர் இருக்கின்றனரே தவிர வேறு எவருமில்லை. அதே நிலையில் தன் கல்வியை தொடர வழி இன்றி எத்தனையோ மாணவர்கள் தவிக்கின்றனர். இதற்க்கு காரணம் என்ன யுத்தம், யுத்தம், யுத்தம் என நாம் எந்த சந்தேகமுமின்றி சொல்லலாம்.

இந்த முப்பது வருடகால யுத்தம் ஏற்படாமல் இருந்திருந்தால் அல்லது ஏற்பட்ட யுத்தம் ஆரம்பத்திலேயே தடுக்கப் பட்டிருந்தால் இந்த சிறிய நாடான இலங்கை இன்று வளர்ச்சி அடைந்த நாடாக கருதப் படும். யுத்தம் முடியாததனால் இந்நாடு இன்நிலையில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியை அழித்து, நாட்டில் வாழ்கின்றவர்களை அழித்து தன் எண்ணத்தை நிறைவேற்றும் சிலர் இன்னும் இந்த நாட்டில் இனங்காணப்படாமல் வாழ்கின்றனர்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எவ்வளவு அவதிப் பட்டாலும் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தனக்காகவே வாழ்கின்ற சிலருக்கு யுத்தம் மீண்டும் வந்தாலும் பிரச்சினை இல்லை. வராவிட்டாலும் பிரச்சினை இல்லை. யுத்தம் நடக்கின்ற போது வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சென்று குழப்ப நிலை தீர்ந்ததும் நாட்டுக்கு வருபவர்களுக்கும் பிரச்சினை இல்லை.

ஆனால் யுத்ததினால் பாதிக்கப் பட்டு பலகஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற ஏழை மக்களிடம் கேட்டால் ஒரே பதிலில் இது வேண்டாம் என்றுதான் கூறுகின்றார்கள். சிலரின் எண்ணம் என்னவென்றால் யுத்தம் முடிவடைந்தது கவலையாகவும், விடுதலைப் புலிகளின் இயக்கம் அழிந்து போனது. ஒரு அகிம்சாவாதிகள் இல்லாமல் போனதைப் போல் கருதுகின்றனர். இக்கருத்துக்கு இந்தியாவில் இருப்பவர்களும் ஆதரவு வழங்குகின்றனர்.

இந்த முப்பது வருட கஷ்டமும் தீர்ந்து தனது சொந்த வாழ்க்கைக்கும் தனது சொந்த இடங்களிலும் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்ற மக்களிடம் கேட்டால் மீண்டும் ஒரு யுத்தம் இந்த ஈழத்தில் வேண்டுமா? என்று கேட்டால் அவர்களின் பதில் நிச்சயம் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் ஈழத்தில் மீண்டு ஒரு யுத்தம் வேண்டுமா என்றால் வேண்டாம் என்று உணர்வு பூர்வமாக கூறுவேன்.


ஹனி
இலங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக