திங்கள், 14 ஜூன், 2010

ஈகரை சிறக்க......(கட்டுரை) - சுமதி

---------- Forwarded message ----------
From: Sumathi <krishnaamma.sa@gmail.com>
Date: 2010/6/15
Subject: katurai poti
To: admin@sivastar.net

ஈகரை எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது என்பது பற்றி நான் இங்கு பேசபோவது இல்லை. மாறாக இதில் வேறு என்ன 'உத்தி' புகுத்தி இதை மேலும் வளர்க்கலாம் என்றே சொல்லப்போகிறேன். 2 வயது குழந்தை வீட்டில் இருந்தால் எந்த பள்ளியில் போடலாம், என்ன கற்றுகொடுத்து அவனை வல்லவனாகலாம் என்று எண்ணு வோம் அல்லவா? அது போல் இப்பொழுது நம் இக்கரை பாலகனை மேலும் வளர்க்க என்ன செய்யலாம் என பார்போம்.

1 ) முதலில் சில புது 'ஐடியா'களை சொல்கிறேன். நம்முடைய தளத்தில் 'search engine ' ல் , புதியவர்கள் ஒரு ('thread ') த்ரியை துவங்குமுன் ( 'keyword ' ) முக்கியமான வார்த்தையை போட்டு தேடினால் அந்த வார்த்தைக்கு உண்டான 'திரி' இருந்தால் அது காட்டும். அதை பார்த்துவிட்டு அவர்கள் வேண்டுமானால் புது த்ரி ஆரம்பிக்கலாம் அல்லது அதிலேயே அவர்களின் கருத்தை பதிய வைக்கலாம். இவ்வாறு செய்வதால், மீண்டும் மீண்டும் ஒரு (thread repeat ) திரியே

மறுபடி மறுபடி வராது.இது நம் தளத்தை மேலும் சிறக்கவைக்கும் என்பது என் எண்ணம். இது பொதுவாக தேட, அதாவது, ஒரு திரியின் தலைப்பை தேட. இந்த செய்தியை புதிதாய் வருபவர்கள், புது திரி துவங்குபவர்கள் கண்டிப்பாக படிக்கும் படி அறிவுறுத்தவேண்டும். அதற்காக ஒரு திரி துவங்கி, 'திரி துவங்குமுன் படிக்கவேண்டிய விதிகள்' என்று போட்டு, அதை 'ஒட்டு' என்றும் போடலாம். இது புதியவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

2 ) அதே போல் ஒவ்வொரு (thread ) ன் உள்ளேயும் ஒரு 'search engine ' வேண்டும் ( To search inside the thread ) ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடித்து தேடினால் , (அந்த குறிப்பிட்ட திரியில் ) அந்த வார்த்தைக்கு உரிய பதிவை அது காட்டவேண்டும். இது குறிப்பிட்ட பதிவை தேடுபவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

3 ) ஒவ்வொரு திரிக்கும் ('Rating ') தரவரிசை வேண்டும். அதாவது, ஒன்றிலிருந்து ஐந்து வரை (star ) நட்சத்திர குறி தரலாம். அந்த குறி முதல் பக்கத்தில், அதாவது திரியின் பெயரின் பக்கத்தில் வருமாறு செய்யவேண்டும். எனவே, அதை பார்க்கும் போதே, அந்த குறிப்பிட்ட திரியின் மதிப்பு தெரியும், அதன் மூலம் திரியின் தரமும் உயரும்.

4 ) தர வரிசையை போல் மற்றொன்று (polling ) 'ஒட்டுபோடுதல்' அதாவது, ஒருவாரம் ஒரு தலைப்பு. உள்ளே வருபவர்கள், அங்கு உள்ள கேள்விக்கு, அங்கு உள்ள 'ஆம் / இல்லை ' பொத்தானை அழுத்தணும். அவ்வாறு செய்வதன் காரணத்தையும் எழுதணும். அது ஆரோகியமான விவாதமாக இருக்கணும். (வெறும் கிண்டலாக இல்லாமல்).

5 ) மேற்சொன்னவைகளை மேற்பார்வை இட (Moderators ) மேற்பார்வையாளர்கள்

அமைக்கப்படவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் 4 - 5 திரிகளை

பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு வேலையை பிரித்து கொடுத்தால் தளத்தின் தரம் உயரும். தளத்திற்கு வருபவர்கள் (traffic ) அதிகரிப்பார்கள்.

6 ) ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்தவர்களை இந்த தளத்திற்கு அறிமுகபடுத்தணும். ( Introduce a member ) நுழைவு படிவத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தி , வருபவர்களை அதை பூர்த்தி செய்யசொலவேண்டும். அதில், அவர்கள் இந்த தளத்தை யாருடைய சிபாரிசின் பேரில் பார்த்தார்கள் என்பதை பதிய சொல்ல வேண்டும். அவர்கள் நம்முடைய உறுப்பினர் பெயரை பதிந்தால் அவருடைய பெயரின் கீழே (near or under user name ) 'இவரால் அறிமுகம் ஆனவர்கள்' என போட்டு 1 , 2 , 3 என போடலாம். இது நெறைய நண்பர்களை அறிமுகப்படுத்த உதவும். நம் தளத்தின் நடமாட்டம் பெருகும்.

7 ) கட்டுரை போட்டிக்கு 1000 வார்த்தைகளுக்கு மேல் எழுத சொல்கிறீர்கள் அல்லவா? அதை எண்ணுவதற்கும் ஒரு சிறிய 'மென்பொருளை' போட்டால் நன்றாக இருக்கும். நான் சில தளங்களில் பார்த்து இருக்கிறேன். 250 வார்த்தைகள் மட்டுமே என போட்டு இருப்பார்கள் , நாம் வார்த்தைகளை பதிய பதிய அது குறைந்து கொண்டே வரும். அது போல் நம் தளத்திலும் போட்டால் கட்டுரை அடிக்க வசதியாய் இருக்கும்.

8 ) 'Emotion icons ' நம்மிடம் நெறைய உள்ளது. மேலும் சில போடலாம்.

9 ) இது வரை புகுத்த வேண்டிய புதிய முறைகளை பார்த்தோம். இப்போ நான் சொல்லபோவது உள்ளதை திருத்த.( யார்மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை,) நம் தளம் சிறக்கவே இதை சொல்கிறேன். நான் பல திரிகளில் பார்க்கும் போது மனதில் பட்டது - சில பதிவுகள் தலைப்புக்கு எந்தவிதத்திலும் சேராத , தலைப்பையே மறக்க அடிக்கக்கூடிய படிஉள்ளது. அவைகள் தவிர்க்க படவேண்டும் என நினைக்கிறன். நகைச்சுவைக்காகவும் அரட்டை காகவும் நமக்கு தனி தனி திரிகள் உள்ளன. நாம் அங்கு அரட்டை அடிப்போம் . நகைசுவை திரியில் சிரிப்போம் ஆனால் சுவையான அல்லது முக்கியமான விவாதத்தின் போது அதை திசைதிருப்பாமல் இருந்தால் நல்லது.

10 ) அதே போல் எழுதும வார்த்தைகள் இரண்டு அர்த்தம் உள்ளதாக இருக்க கூ டாது இவைகளை பார்க்க, வேண்டுமானால் திருத்த (moderators ) மேற்பார்வையாளர்கள் அவசியம் என நெனைக்கிறேன்.

எனக்கு தெரிந்த பல 'தள முன்னேற்ற குறிப்புகளை' தந்துள்ளேன். இது நம் தளம் இன்னும் சிறப்பாக வருவதற்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.



Thanking you,
With warm regards,

SumathiSundar
Bangalore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக