திங்கள், 14 ஜூன், 2010

பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? - சபீர்

---------- Forwarded message ----------
From: seenimohamed safeer <rajabasli@gmail.com>
Date: 2010/6/15
Subject: பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?
To: admin@sivastar.net

செல்வத்தில் மிகச்சிறந்த செல்வம் குழந்தை செல்வம் என்றும் பெண்கள் வீட்டின் கண்கள் என்றும் பேசப்படும் போது உலகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதி முக்கிய செய்திகளில் சிசுக் கொலையும் இடம் பிடித்து விட்டது. சிசுவதை பற்றிய செய்திகள் பல இதல்களில் நாளுக்கு நாள் நாம் காண்பது அரிதாகி விட்டது. அந்தளவுக்கு சிசுக்கொலை சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?

இந்தப் பழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல,பல வருடங்களுக்கு முன்பே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளதை பல தடவை பல செய்திகளின் மூலம் புரிந்துகொண்டோம்.இதற்கு உதாரணம்தான் இந்த வசனம். "பெண் குழந்தை (பிறந்தது) என்ற நற்செய்தியை அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்களின் முகம் கறுத்து அவர்கள் கவலை அடைந்து விடுகிறார்கள்". இந்த வசனத்தின் பிம்பமாக மற்றொரு வசனமும் நம்மை சிந்திக்க வைக்கிறது. "நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களை கொலை செய்வது பெரும் பாவமாகும்".

பெண் குழந்தை பிறந்து விட்டால் அக்குழந்தையை கொலை செய்வதும் பெற்றவளை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பதும் போன்ற மூடப்பழக்கம் அக்காலத்தில் ஏராளமாகவே இருந்தது. பல பெரியோர்களும் அறிஞ்சர்களும் பெண் சிசுக்கொலையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமது விழிப்புணர்வு பிரச்சார யுக்தியை கையாண்டார்கள்.

பெண்ணின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் போது எந்த ஒருப் பெண் ஒழுக்கத்தோடு வாழ்கிறாரோ, அவரே இவ்வுலகத்தின் மிகச்சிறந்த செல்வம் எனக் கூறப்படுகிறது.றினார்கள்.காலப்போக்கில் பெண் சிசுக்கொலை மாறி மறைந்து பெண்ணைப் பெற்றவர்கள் மகிழ்வு கொள்ளும் நிலையை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது சிந்தனைக்கினிய சுப செய்தியாகும்.

உங்களில் ஒருவர் திருமணத்தை நாடினால் விதியாக்கப் பட்டுள்ள மஹர் தொகையை உங்களது மனைவியிடம் கொடுத்து உங்களுக்கு உரிமையாக்கி கொள்ளுங்கள் என நபிகள் (ஸல்) அவர்கள் பெண் சமுதாயம் எதிர் கொண்டிருந்த வரதட்சிணைக் கொடுமையை இறைவனின் கட்டளையின் பேரில் மஹர் என்னும் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார்கள் என்பது உண்மை வரலாறு !

இதற்கு அத்தாட்சியாக எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சி நடை பெறுகிறதோ, அங்கெல்லாம் வரதட்சிணை என்றால் என்ன? எனக் கேட்கும் அளவுக்கு பெண் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருவதை கண் கூடாக காண முடிகிறது.

சிசுக் கொலையில் ஈடுபடுபவர்களிடம் காரணம் கேட்டால் வரதட்சிணக் கொடுமையைத் தான் கூறுகிறார்கள். இதற்கு அண்மையில் நடந்த ஒரு செய்தி தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக வந்த ஒன்பது மாத குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் தொண்டைக் குழிக்குள் உடைந்த பல்பு ஒன்றின் கண்ணாடித் துண்டு சிக்கியிருப்பதை லாரிங் காஸ் கோப் என்ற கருவியால் கண்டறிந்து சாஃப்ட் போர் செப்ஸ் என்ற மற்றொரு கருவியை பயன்படுத்தி லாவகமாக அந்தக் கண்ணாடித் துண்டை வெளியில் எடுத்தாராம்.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? குழந்தையின் தாயை அழைத்த டாக்டர் பல்பு துண்டு எப்படி குழந்தையின் தொண்டைக்குள் போனது என்று விசாரித்ததும் கதறி அழுத தாய் தான் தான் குழந்தையின் தொண்டைக்குள் பல்பு துண்டை தள்ளி குழந்தையை கொல்ல் முயன்றதாக வும் குடும்பத்தினரின் குத்தல் பேச்சுக்களை சகிக்க முடியாமல் இந்தக் குழந்தையை இரண்டு முறை தலையணையால் அமுக்கி கொல்லவும் முயன்றாளாம்.குழந்தை மூச்சுத்திணறி வீறிட்டு அழுததுமே அக்கம் பக்கம்
உள்ளவர்கள் ஓடி வந்து விட்டார்கள் என்றும் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் ஐயா ! எனனறும் சொல்லி மருத்துவரிடம் கதறி அழுதாளாம் அந்தத் தாய்.

இந்தத் செய்தியை படித்ததும் நமக்கு மக்களின் அறியாமை காலம் தான் நினைவுக்கு வருகிறது. ஈமெயில் கணிணி என்று எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் நாம் அறிவில் மட்டும் தலைகீழாக இருக்கிறோமே? இது எந்த வகையில் நியாயம்? அறிவியலின் துணை கொண்டு கருவிலேயே அழிக்கும் தாய் மார்கள் ஒரு புறம் அறியாமையின் காரணத்தால் பெற்ற பிறகு அழிக்கும் கொடூரம் மறுபுறம். ஐந்தறிவு கொண்ட பிராணிகள் கூட, தான் ஈன்ற குட்டியை அது ஆணோ? பெண்ணோ? எதுவானாலும் பாகுபாடு பார்க்காமல் நக்கி பால் கொடுக்கும். அந்த தாய்ப்பாசம் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு இல்லையே ! தான் பெற்ற குழந்தையை புதை குழிக்கு அனுப்பிவிட்டு எப்படித்தான் இவர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதோ? நாளை மறுமை நாளில் கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளிடம் நீ எந்த பாவத்திற்காக கொல்லப்பட்டாய்? என இறைவன் கேட்கும் போது ஒரு பாவமும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தை இந்த படுபாதகி தான் என்னை காரணமின்றி கொலை செய்தாள் என்று தன் தாயை கை காட்டுமே, என்ற பயமோ, அச்சமோ இல்லாததால் தான் துணிந்து இந்த காரியத்தை செய்கிறார்கள். இரண்டு காரணங்களால் தான் சிசுக்கொலை மிகைத்து வருகிறது எனக்கூறலாம். 1) வறுமையை பற்றிய அச்சம் 2) வரதட்சிணை பற்றிய பயம்.

நம்மில் பல ஊர்களில் கூட பெண் குழந்தைகள் என்றால் ஏதோ அது தங்கள்தலையில் ஏற்றப்பட்ட சுமை போன்றும் அதை பெற்றவர்களை பரிதாபமாக பார்க்கும் அவல நிலையையும் சர்வ சாதாரணமாக காணலாம். பெண் குழந்தைகள் என்றால் கவலைப்பட்டு கலங்கி நிற்கும் இன்றைய சூழ் நிலைக்கான அடிப்படைக் காரணமே வரதட்சிணை தான் என ஒரு அறிக்கை தெளிவு படுத்துகிறது.

வரதட்சிணை என்ற இந்த விஷ வேர் முழுவதுமாக வெட்டி எறியப்பட்டால் தான் பெண்மை மதிக்கப்படும். பெண் குழந்தைகளின் உயிரும் பாதுகாக்கப் படும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய இளம் பெண்கள் மேலை நாட்டு நாகரீக மோகத்தில் சிக்குண்டு பெண்மைக் குரிய பண்பாட்டையும் மீறி பிற ஆடவர்கள் ஒன்று சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டு ஆடிப்பாடும் இடங்களில் பெண்களும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சரி நிகராக கலந்து கொள்வதின் மூலம் தேவையற்ற ஆண்களின் நட்பு என்ற போர்வையில் அநாகரீக உறவை ஏற்படுத்திக் கொள்வதுடன் உணர்ச்சி மேலீட்டால் தங்களது கற்பையும் இழந்து அதன் மூலம் தங்களது வயிற்றில் பாவச் சுமையையும் சுமந்து கொள்கின்ற அவல நிலைகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரியதல்லவா? இது போன்ற ஒழுங்கீனத்தால் உண்டான குழந்தைகளை சமூகத்தில் வளர்க்க வெட்கப்பட்டு கருவிலேயே அழித்துக் கொள்வதும் அல்லது பெற்றபின் கொல்வதும் தான் சிசுக்கொலை மிகைத்து வரக் காரணமாகும்.இதன்காரமாகத்தான் திருமணத்தை முடிப்பது சிறந்ததாகும்.

தங்களின் ஐந்து நிமிட அற்ப சுகத்திற்காக ஒரு பச்சிளம் உயிரை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? அதை கொல்வதற்கு முன் ஒரு நிமிடமாவது சிந்தித்துப்பார்த்தீர்களா?

இன்றைய காலகட்டத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.

சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம் ஆரம்பித்தும் பெண் குழந்தைகளை சாக்கடைகளிலும் குப்பை தொட்டிகளிலும் வீசும் அவலமும் கருவிலேயே சிதைப்பதும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் சட்டங்களால் மட்டும் தடுக்க இயலுமா? வேறு வழிகள் உள்ளனவா? என ஆராய்ந்தால்

முதலாவதாக, குழந்தைகள் என்பது ஆணாயினும் பெண்ணாயினும் அது இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் வரவேண்டும.

உயிரின் விலை மதிப்பை அறிய வேண்டும்.

உயிருடன் கொல்லப்படும் சிசுக்களைப் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.


வெறும் தண்டனைகளைப் பற்றி மட்டும் எச்சரிக்காமல் பெண் குழந்தைகள் பிறந்தால் அதை நல்லபடி பராமரிக்கும் பெற்றோருக்கு மறுமையில் சொர்க்கம் என்ற உயாந்த பாக்கியம் கிடைக்கும் என எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் .

மனித சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் அதையும் தாண்டி தப்பிப்பதற்கும் தான் மனிதன் முயலுகிறான் சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே இருக்கிறான்.எனவே இறைவனைப் பற்றிய பயமும், மறுமை அச்சமும் இருந்தால் தான் பெண் சிசுக் கொலை என்ற கொடூரம் மட்டுமில்லாமல் அனைத்துக் கொடுமைகளையும் ஒழிக்க இயலும்.

அடுத்ததாக வரதட்சணை.கௌரவமாக வாழ்ந்த மனிதனையும் இந்த கொடூர நோய் பிச்சைக்கார நிலைக்கு தள்ளி விடுகிறது.இந்த வரதட்சணை என்ற பேய், சமுதாயத்தில் தலைவிரிகோலமாய் ஆடுவதால் பெண் சிசுக் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.இவ்வாறு பெண் சிசுக் கொலைக்கு வழிகோலும் வரதட்சணை என்ற கொடுமையைச் செய்யும் ஆண்களுக்கு மறுமை பதில் சொல்லும்.

ஒரு புறம் பெண்ணுரிமை என்ற மாய ஜால கோஷங்களைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் அல்லது பார்த்தும் மவுனம் சாதித்துக் கொண்டிருப்போரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் சொல்கின்ற நியதிகளின் படி வாழ்ந்தால் தான் நிம்மதி என்பதை பெண்கள் உணர வேண்டும்.

இது தான் இன்றைய சமூகத்திற்கு வேண்டிய விழிப்புணர்வு இந்த உன்னதமான அறிவுரையை ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பேணி பாதுகாத்து நாகரீக மோகத்திலிருந்து ஒதுங்கி பிற ஆடவருக்கு முன்பு வெட்கத்துடனும், ஒழுக்கத்துடனும் வாழ முற்பட்டால் போதும் தானாகவே முடிவுக்கு வந்து விடும் சிசுக்கொலை!

அன்புடன் சபீர்
தோஹா கத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக