வியாழன், 17 ஜூன், 2010

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன 010

---------- Forwarded message ----------
From: Sumathi <krishnaamma.sa@gmail.com>
Date: 2010/6/17
Subject: katturai poti
To: admin@sivastar.net

பெண் சிசு கொலை ..........சொல்லும் போதே கஷ்டமாக உள்ளது. எப்படித்தான் 10 மாதம் சுமந்து பெற்றதை கொல்ல மனம் வருதோ? அதுவும் கொல்வது பெற்றதாய் தந்தையே.........அதற்கு அவர்கள் கூறும் காரணத்தை கேட்டால் எனக்கு கோபம் சிரிப்பு ரெண்டும் வரும்.

முதல் காரணம், அந்த தாய் "அதுவும் என்னைப்போல் கஷ்டபடவேண்டாமே என் கொன்றேன் " . என் சொல்வாள். ஏதோ இவமட்டும் தான் இந்த உலகத்தில் கஷ்டபடுவது மாதிரியும், மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் மிதப்பது மாதிரியும். இது எனக்கு ஏளன சிரிப்பை வரவழைக்கும். அப்ப, பையன் பிறந்தால் மட்டும் கஷ்டமே இல்லையா? அவன் வளர்ந்ததும் பெண் கிடைகாமல் கஷ்டபட்டால் பரவைல்ல்லையா? இவ மாதிரி எல்லாரும் பெண் குழந்தை களை கொன்னுடா, யாரை அவ பிள்ளை கல்யாணம் பண்ணுவது? அப்ப, வேறயாராவது ஒருத்தி இவ பிள்ளைகாக பெண் பெற்று வளர்க்கணும். என ஒரு சுயநலம்?

அந்த அப்பாவை கேட்டால், அவன் சொலுவான் , "வயசான காலத்தில் கஞ்சி ஊத்த ஒரு மகன் தான் வேணும்" என்று. என் பெண் குழந்தைகள் கஞ்சி ஊத்தாதா? ( கருத்தம்மா படம் பாருங்க) ஆனா அவனும் யோசிப்பது இல்லை . இவன் அம்மாவையும் யாரோ பெற்று கஷ்டபட்டு வளர்த்து அனுப்பி இருக்கா , இவன் மனைவியும் யாரோ பெற்று கஷ்டபட்டு வளர்த்து அனுப்பி இருக்கா. இவன் மகனுக்கும் அதேபோல் எதிர் பார்க்கிறான். சோ, சமுகம் தான் இவனுக்கும் இவன் குடும்பதுகும் யாரையாவது அனுப்பி கொண்டே இருக்கணுமே தவிர இவன் யாருக்கும் எதுவும் செய்யமாட்டான்.

only receiving end . ஆனால் நம் சமுகம் என்பது ஒரு தொடர் சங்கிலி போன்றது. நீ ஒருவரிடமிருந்து எதை பெற்றுகொண்டாலும், வேறுஒருவருக்கு அதை தரனும். தந்து தான் ஆகணும். நம் வழி பாடுகள் முதல், கலாசாரம் முதல், அடுத்த தலைமுறைக்கு நாம் தர கடமை பட்டவர்கள் ஆவோம். நடுவே சங்கிலியை முறிக்கும் அதிகாரம் நமக்கு இல்ல.

ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு விவசாயி எப்படி தன் தேவைக்கு மட்டும் உழாமல், மற்றவர்களுக்காகவும் சேற்றில் கால் வைக்கிறான்? ஒருவேளை அவன் தனக்கு மட்டும், தன் தேவைக்கு மட்டும் பயிரிடுவானே ஆனால், நம் அனைவரின் கதி? யார் சாப்பிடபோகிறார்கள் என்று கூட அவனுக்கு தெரியாது. இந்த பயிர் நன்கு விளையுமா? தண்ணி இல்லாமல் வாடுமா? ரொம்பமழை பெய்யுமா? இல்ல புயல் வருமா ? என் யோசிக்காமல் நேரத்தே தன் கடமையை செய்கிறான். இந்த எல்லா தடைகளையும் தாண்டி தான் விளைச்சலை எடுக்கிறான். அப்படி இல்லாமல், மேலே சொன்ன தகப்பன் தாய் போல் , கண்டிப்பா தண்ணிவிட மாட்டான் பக்கத்துக்கு ஊர்காரன், இல்ல 'லைலா' புயல் வந்துரும் அதுவும் இல்லையா, நேரத்துக்கு உரம் கிடைக்காது. இல்ல எல்லாம் மீறி, பயிர் வளர்ந்து டா கூட என்ன பெருசாலாபம் வரபோறது? பேசாம இருந்துடலாம் என்றா இருக்கான்? தன் கடமையை எப்பாடுபட்டாவது செய்கிறான இல்லையா? பின் நமக்குமட்டும் என்ன? என்றோ 18 - 20 வருஷம் கழித்து நடக்கபோகும் பெண்ணின் கல்யாணத்துகாக பயந்து இப்ப கொல்லறாளாம் . வெட்கமாக இல்ல? They are escaping from the problem.

அது வரை இவனே இருப்பானோ மாட்டானோ? நாளைக்கு நடப்பது யாருக்குத் தெரியும்; எதுவுமே நிச்சயமில்லாத இந்த உலகத்தில் ? யாருடைய உபயோகதுகாகவோ நான் என் கஷ்டப்பட்டு வளர்க்கணும் என்கிற சோம்பேறித்தனம் தான் முதல் காரணம். அதை மறைக்க 'கொழந்தை கஷ்டப்படும்' என் பூசி மெழுகல். ஒரு உயரை கொல்லும் அதிகாரம் நமக்கு இல்ல. பல கொலைகளை செய்தவனை கூட நாம் உடனே தூக்கில் போடுவது இல்லையே? அப்படி இருக்க ஒரு பாவமும் அறியாத பச்சை மண்ணை எப்படி கொல்லலாம்?

இதில் ஆணை விட பெண்ணுக்கு தான் அதிக கடமை இருப்பதாக நான் நினைக்கிறன். ஏன்னா சுமந்தது அவள் தானே? ஒரு கோழி கூட தன் குஞ்சுகளை நெருங்கும் பருந்தை கூட எதிர்க்கும். அந்த பருந்து நினைத்தால் கோழியையே தூக்கிடும், அது கோழிக்கும் தெரியும். தன்னை விட வலுவான எதிரி ஆனாலும் தான் பெற்ற குஞ்சுகளுக்காக அது தன் உயிர் உள்ளவரை போராடும்.

இந்த மானிட பெண் அதைவிட கேவலமா? அவளால் தன் கணவன் மாமியாருடன் போராடமுடியாதா? அதுவும் அவள் தனி கூட இல்ல, சட்டம் அவள் பக்கம். வேண்டுமானால் வீதியில் வந்து போராடலாம். இப்ப இனிஷியலுக்கு கூட அபபா பேர் தேவைஇல்ல . அம்மா பேர் போதும். சட்டம் இருக்கு தெரியும் ல? ஜெயலலிதா செய்த நல்லதில் இதுவும் ஒன்று. கொழந்தையை கொல்லசொல்லும் கணவன் - வேண்டாம் என் ஏன் தைரியமாய் ஒரு முடிவு எடுக்க கூடாது ?

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் சிசு கொலையை தடுக்கணுமே? குழந்தை ஒரு பெண்ணால் வளர்க முடியாதா? கேஸ் போடு, ஜிவனாம்சம் வாங்கணும் என்று நான் சொல்லல. எப்படியும் உன் குடிகார கணவனுக்கு நீதான் மகளிர் சுய உதவி குழு, சித்தாள் வேலை, வீடு வேலை என ஏதோ செய்து பணம் தந்து , அவன் குடியும் உன் குடுததனத்தையும் காப்பாற்றப் போகிறாய் . இதில், குழந்தையை மட்டும் காப்பற்றமுடியாதா? மேலும் அவ்வாறு வெளியே வந்தால் உன் சுய மதிப்பாவது உனக்கு மிஞ்சும். ஆமாம் ,உன் பெண்குழந்தையை கொன்ற அல்லது கொல்ல வைத்த ஆளுடன் மீண்டும் குடும்பம் நடத்தி ( தூ , அது மானம் கேட்ட பொழப்பு ), அவனை போலவே ஒரு ஆணவம் பிடித்த ஆண் குழந்தையை பெற்று என்ன சாதிக்கப் போகிறாய்? பெண் குழந்தையை கொன்றுவிட்டு நிம்மதியாய் துங்கிடுவாயா நீ?

ஒரு பெண்ணே ,பெண் குழந்தையை கொன்று தன் இனத்துக்கே செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது. ஒருகாலும் பெண்கள் இதை அனுமதிக்க கூடாது. பெரிய இடங்களில் கரு சிதைவு நடக்கிறது அதற்கும் அனுமதிக்க கூடாது . நம் உடலில் உள்ள உயிரை காப்பது நம் கடமை. பெண்களுக்கு எவ்வளவோ சொலிதரும் அம்மாக்கள் இதையும் சொல்லிதரணும்.

சோ, அடுத்த தலை முறை பெண்களை திட மனது படைத்தவர்களாய், அநியாயத்துக்கு துணை போகாமல் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வளர்க்கணும் அநியாயத்துக்கு துணை போகாமல் இருந்தா மாத்திரம் போறாது, தட்டி கேட்கும் தைரியமும் இருக்கணும். அது போலவே, ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே பெண்ணை மதிக்க கற்று தரணும். பெண் வெறும் போகப்பொருள் இல்ல, உயிர் உணர்ச்சி உடையவள் என்று சொல்லி சொல்லி வளர்க்கணும். இவைதான் சிசு கொலையை தடுக்கும். இது ஒரு ராத்திரியில் மாற்றகூடிய விஷயம் இல்ல. மெல்ல மெல்ல தான் மாறும். நாம் தான் மாற்ற முயலனும்.

See, இதுவும் பெண்ணின் கையில் தான் இருக்கு. இப்படி கையில் இருப்பது எல்லாத்தையும் விட்டு விட்டு வெரும அழுதா காரியம் எப்படி ஆகும்? அகவே நாம் எல்லோரும் சேர்ந்து செயல் படுவோம். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக