வியாழன், 15 ஜூலை, 2010

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஏன்? 020

---------- Forwarded message ----------
From: laxmi srikanth <lekshmisrikanth@gmail.com>
Date: 2010/7/15
Subject: கட்டுரை போட்டி
To: admin@sivastar.net


வணக்கம்,
இத்துடன் கட்டுரை போட்டிக்கான என்னுடைய கட்டுரையை இணைத்துள்ளேன்.
நன்றி
ப்பி.லட்சுமி
௯௫௯௭௧௯௫௨௪௧
4 கோபால் சாமி வீதி (வடக்கு)
கணபதி
கோவை 641 006
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஏன்?

வயதான தன் தாய் தந்தையரை தன் இரு தோள்களிலும் தூக்கி சென்று அவர்களை புனித யாத்திரை செய்ய வைத்த க்ஷ்ரவNNண் பிறந்த பொன்னாடு இது. பெற்றோரையும், பெரியவர்களையும் மதித்தும், மரியாதை செலுத்தியும் பேணிக்காத்த பண்பாட்டுக்கு சொந்தகாரர்கள் நாம்.

மூத்தோர் வாக்கும் முது நெல்லிக்கனியும் முன்னால் கசக்கும். பின்னால் இனிக்கும். தம் அனுபவங்களை நினைவு கூர்ந்து இளையோரை நல் வழிப்படுத்த தம் அனுபவங்களை எடுத்து சொல்வர். பெற்றோர் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத எவ்வளவோ பேர் தங்கள் வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

இன்றோ பணமும் பகட்டுமே வாழ்க்கையாகி விட்டது. பணத்தின் தேவை அதிகமாகி விட்ட இன்னாளில், அதை தேடிப் பறக்கும் இளம் தலைமுறையினர் தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே சுமையாக கருதும் நிலை வந்து விடுகிறது. எவ்வளவு வந்தாலும், திருப்தி என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து பழகி விட்டனர்.

தெம்பு இருக்கும் வரை தன் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலை செய்வதையும், பை நிறைய சம்பாதிப்பதையும் பெருமையாக நினைத்து, சுற்றுலா விசாவில் அவர்களை பார்த்து அளவளாவி விட்டு வருவதை ஏதோ பிறவிப்பயன் அடைந்து விட்டதாக கருதுவது இப்போது நாகரிகமாகி விட்டது.

ஒரு கட்டத்தில் இயலாமை வாட்டும் போதுதான் செய்வது அறியாமல் திகைக்கின்றர். தனிமையின் கொடுமை தெரிய ஆரம்பிக்கிறது. அதற்குள் பிழைக்கும் இடத்தில் காலூன்றி விட்ட பிள்ளைகள், சொகுசு வாழ்க்கையை விட முடியாத பிள்ளைகள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் விடுகின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் ஒரு அரசு ஊழியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பிள்ளைகள் அனைவருக்கும் அள்ளித் தரும் அரசு வேலை. அவரும் இறந்து விட்டார். இப்போது அவர் மனைவியோ தள்ளாத வயதில் தனிமையில் வசிக்கிறார். பிள்ளைகள் அனைவரும் சுக போக வாழ்க்கை. எப்படி இப்படி த்னியாக விட்டு வைத்திருக்கிறார்கள்? இல்லை அந்த அம்மையாருக்குத்தான் தனிமை பிடித்து விட்டதோ? குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தெம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் அவர் தனிமையில் தானே சமைத்து கஸ்டப்படுவதை பார்த்தால் மனம் கஸ்டப்படுகிறது.

பணம், பணம், பணம் என்று பிணந்திண்ணிக் கழுகுகளாய் ஓடும் பிள்ளைகளை யார் தான் மாற்றுவது? தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு செய்யும் நன்றிக்கடன் இது தானா? ஆனால் வளரும் போதே தாய் தந்தயரை பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்பதை புரிய வைத்து வளர்க்க வேண்டும்.

வயதான முதியோர் தள்ளாத வயதில் சிறு குழந்தைகள் போல் நடந்து கொள்வது வாடிக்கை. ஆனால் அதை சகித்து கொள்ளும் தன்மை என்பது சிறிதும் இல்லாமல் போய் விடுகிறது.

பிறந்த குழந்தைகளை காப்பகத்தில் விட்டு வளர்க்கும் பெற்றோருக்கு, வயதான காலத்தில் பிள்ளைகளும் இல்லத்தில் விட்டு சரி செய்து விடுகின்றனர் போலும். ஒரு பக்கம் விலை வாசியேற்றம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அயல் நாட்டு பணத்தில் இங்கு முதலீடு செய்கிறேன் என்று நிலத்தில் முதலீடு செய்கின்றனர். இங்கோ அரசு வேலை, சொந்த தொழில் செய்வோர் தவிற வேறு யாரும் வீடு கட்டுவதோ, வாங்குவதோ குதிரைக் கொம்பாகி வருகிறது. இந்த மாய தோற்றத்தில், பந்தயத்தில் ஓடும் போது பெற்றோரும் சுற்றமும் கண்ணுக்குத் தெரியவதில்லை. பெருகி வரும் முதியோர் இல்லங்களே இதற்கு சான்று. அதுவும் பணம் உள்ளவர்களுக்குத்தான். பணம் இல்லா ஏழை முதியோரின் வாழ்வு இன்னும் திண்டாட்டம் தான்.

ஏதோ நகரங்களில் மட்டும் தான் இந்த நிலமை என்றில்லை. கிராமங்களில் கூட மிக வேகமாக பறவி வருகிறது இந்த கலாச்சாரம். கூட்டு குடும்ப முறை மறைந்தது கூட, மாறி வரும் மக்களின் மனப்போக்கிற்கு காரணம். கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து பழகிய குழந்தைகள், சகிப்புத் தன்மையோடு வளர்ந்தன. இன்றோ தனிக்குடும்பத்தில் எது கேட்டாலும் வாங்கித்தரும் நிலமையில் பெற்றோர். கணிணியும், தொலைக்காட்சியுமே நண்பர்கள். இப்படி வளரும் குழந்தைகள் எப்படி சகிப்புத்தண்மையை கற்றுக் கொள்ளும்? தனக்கு இடையூறு என்று நினைக்கும் எதையும் உதைதுத் தள்ளுகின்றன. வளர்ந்து வாலிப வயதில் காதல் வேறு. அவசர அவசரமாய் கல்யாணம், கல்யாண சரடு காய்வதற்குள் விவாகரத்து. அன்பும் பண்பும் நிறைந்த நம் இந்திய கலாச்சாரம், சீர்கேடு அடைந்து அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புத்தர், ம்ஹாவீரர், க்ஷரவண், காந்தி பிறந்த பொன்னாட்டில் தான் இவ்வளவும். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று படித்து வளர்ந்த நம் மக்களா இப்படி? இதைத்தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்றார்களோ? நம்மிடம் பெருமைப் பட்டுக் கொள்ள பொக்கிக்ஷமாய் இருந்த நம் பண்பாடு, இப்படி அழிவதை புணரமைப்பு செய்ய வேண்டிய நிலமையில் உள்ளோம். கடுமையான சட்டம் போட்டாவது முதியோரை, கவனிக்காமல் விடும் பிள்ளைகளை திருத்த வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 019

---------- Forwarded message ----------
From: Nila saki <nilasaki@in.com>
Date: 15 July 2010 18:41
Subject: eegarai kadduraipoddi
To: admin <admin@sivastar.net>

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கையின் படி பதிமூன்று வயது முதல் முப்பத்தியைந்து வயது உட்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கப் படுகின்றனர் .இதில் இருபாலர்களும் அடக்கம்.அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபத்தி ஆறு சதவிகிதம் இளைஞர்கள் தான். மக்கள் வளத்தில் சீனா இந்தியாவை விட முதன்மையாக இருந்தாலும் , அவர்களைவிட அதிக இளைஞர் சக்தியைக் கொண்டது இந்தியா .நேற்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களை ஒழுங்காக வழி நடத்திச் செல்கின்றனரா?புதிய கலாச்சாரத்தினாலும் ,தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் இன்றைய இளைஞர்கள் அபரிமிதமாக முன்னேறி உள்ளனரா ?அல்லது திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனரா ? என்று காண்போம்

கல்விநிலை

பெற்றோர்கள் மற்றும் ஆசிரயர்களின் கவனிப்பில் இருக்கும் பருவம் பதிமூன்று வயது முதல் இருபது வயது வரை .இந்த பருவத்தில் அவன்/அவள் பார்க்கும் மற்றும் கற்கும் விஷயத்தைப் பொறுத்துதான் வெறும் களிமண்ணாக மாறப்போகிறார்களா ?அல்லது சிறந்த ஒரு பாத்திரமாக மாறப்போகிறார்களா? என்று நிர்ணயிக்கப்படுகிறது.அவர்களது திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பதும் ,சிறந்த வழிகாட்டுதலும் இன்றைய மன்னர்களின் கைகளில் தான் இருக்கிறது .அவர்களது அறிவுப்பசிக்கு தீனிபோட தகுதியுடையவர்களாய் இருக்கவேண்டும்.இன்றைய மாணாக்கர்களின் அறிவு அபரிமிதமானது ...நிச்சயம் அவர்களது அறிவுத்திறன் முந்தைய தலைமுறையை விட வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் .கலை ,அறிவியல் என்று பல்வேறு துறையில் சராசரி அளவைவிட பிராகசிக்கின்றனர் .இதற்கு காரணம் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், தொலைக்காட்சி,இணையதளம் என்று பல காரணங்கள் உண்டு.இதில் கிராமப்புறம் நகரப்புறம் என்ற சுவரு மெல்லிய தாகிக் கொண்டே போகிறது.

பண்பு

ஆனால் பண்பு .மனிதம் போன்ற விஷயங்களும் மலிவாகிக் கொண்டே போகின்றது .பெரியோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்த மரியாதை தேய்ந்து கொண்டே வருகிறது.சின்னத்திரை,பெரியத்திரை மற்றும் ஊடகங்கள் ஒருவகையில் அவர்களை வளர்த்தாலும் இன்னொரு வகையில் சீரழித்துக் கொண்டுதான் இருக்கின்றன.திரும்பும் பக்கமெல்லாம் பாலியல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.பதினான்கு வயது மாணவன் மாணவியைக் கற்பழிக்கிறான்.இன்னொரு பக்கம் பாலியலறிவு இல்லாததால் சிறார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகின்றனர் .இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன வென்றால். சினிமா,இணையதள வக்கிரங்கள் அனைத்தையும் உருவாக்குபவர்கள் நேற்றைய தரம் கேட்ட மன்னர்களே .பணம் புகழ் ஒன்றே பிராதானம் ஆகிவிட்டது ,நீதியும் நேர்மையும் மங்கிவிடத் தொடங்கிவிட்டது.மறுபுறம் அப்துல்கலாம் ,அண்ணாதுரை சாமி போன்றோர்களின் வழிகாட்டுதல் இன்றைய இளைஞர்களுக்கு இன்றி அமையாத சக்தி.

ஏட்டுக்கல்வி

இதற்கு தீர்வுதான் என்ன மாணவர்கள் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் கண்காணிக்கப்படவேண்டும்.வெறும் மதிப்பெண் எடுக்க கற்றுத் கூடாது .அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுக்க வேண்டும்.இன்றைய இளைஞர்கள் உடனடி வெற்றிக்குத்தான் ஏங்குகிறார்கள்,தோல்வியை சந்திக்க திடமில்லை.தற்கொலைகள் ,காழ்ப்புணர்ச்சி ,ஏன் ?சக மாணவனைக் கொலை செய்யக்கூட துணிந்து விடுகின்றனர்.மீறினால் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி முடங்கிப்போய் விடுகின்றனர் .ஐ .ஐ. டி மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான் ஒரு சிறு தோல்வியை சந்திக்க முடியாமல்,கல்வி ஒருவனை விளைநிலமாக்க வேண்டும் ,பண்படுத்த வேண்டும் ,தரிசாக்கக் கூடாது.பாலியல் விழிப்புணர்வு சரியான அளவில் புகட்டப்படவேண்டும்.வாழ்வை எதிர்கொள்ள திடமான மன உறுதியைப் பெற்றுத் தந்திடவேண்டும் .உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் நம் பங்களிப்பு குறைவாகைருக்கிறது.இதற்கு காரணம் புத்தகப்புழுவாய் மாணவர்கள் இருப்பதே காரணம்.ஒலிம்பிக் முதலிய சர்வதேச போட்டிகளில் நம் இளைஞர்களின் தரம் உயரவேண்டும்

வேலை

இருபது வயதுக்குமேல் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிறான் இளைஞன் . நேற்றைய மன்னர்கள் ஓய்வு பெரும் வயதில் வாங்கிய சம்பளத்தில் இன்றைய இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் மிக எளிதாக வாங்கிவிடுகின்றனர் .அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இந்திய இளைஞர்களின் கொடிதான் பறக்கிறது .இது ஒரு வகையில் தலைநிமிர்த்த கூடிய விஷயம் என்றாலும் கல்பனா சாவ்லா போன்றவர்கள் தாய்நாட்டில் கிடைக்காத ஊக்குவிப்பை அங்கு கண்டதால் தான் வேறு நாட்டுக்காக உழைக்கின்றனர் என்ற எதார்த்தத்தை உணர் வேண்டும் .கல்விமுதலான உதவிகளை தாய் நாட்டில் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்காக உழைக்கின்றனர்.உலகமே கிராமமாக ஆன பிறகு இது தவிர்க்க முடியாது .அதனால் அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யலாம்.இதனால் இந்திய விவசாயம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி மேம்படும் ,பொருளாதாரம் உயரும் .

வாய்ப்புகள்

இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் ,இதற்காக அரசு ( நேரு யுவ கேந்தரா ) பல முயற்சிகளை எடுத்து வருகிறது.சுய தொழிலில் இளைஞர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி . இந்த தருணத்தில் இளைஞிகளின் நிலைமையையும் பார்க்க வேண்டும்

பள்ளி கல்லூரிவரை முதலிடத்தில் இருக்கும் மாணவியர் ,சமுதாய கோட்பாடுகளினால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் அதிகமாக பங்கெடுத்தாலும் ,ஆண்களை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது தலைமைப் பதவிகளில் இவர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் காண முடியும் .ஏன் திறமையில்லையா? இல்லை ஆண் பெண் என்ற கண்ணாடித்திரை தடுக்கிறது.ஆண்கள் பெண்களையும் மேலே வர விட வேண்டும்.ஏனென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.தலைமைப் பொறுப்புகளில் ஆண்களுக்கு நிகராக சுடர் விடுகின்றனர்.

அதீத பணப்புழக்கத்தால் பாலியல் கொடுமைகளும் சீர்கேடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .பன்னாட்டு நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் அறம் தவறுகின்றனர்.இரவு நேரங்களில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பில்லை.சுதந்திரம் கிடைத்து என்ன பயன்?.முதியோரில்லத்தில் பெற்றோர்கள்,தன பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க மட்டும் பிள்ளைகளால் வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லப்படும் பாட்டிமார்கள்.(வெளிநாட்டில் ஆயா வேலைக்கு அதிக பணம் கேட்கிறார்களாம் ).இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன் ? நன்றி மறந்தோருக்கு,பாசம் கொல்வோர்க்கு. வாழக்கை வேகத்தில் மனிதத்தை மறக்காதீர்கள்.

நாளைய மன்னர்களே!

மேதகு இளைஞர்களே! இந்த நாடே உங்கள் கையில் தான்!.ஆரோக்யமான போட்டி நமக்குள் மட்டுமல்ல,ஆண்டிப்பட்டியில் பிறந்தவனுக்கும் அட்லாண்டாவில் பிறந்தவனுக்கும் இருக்க வேண்டும் ,உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் .சிந்தனைகளும் கனவுகளும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் .ஆரியபட்டா ,சாணக்கியர் ,விவேகானந்தர் ,அப்துல் கலாம் ,சி.வி ராமன் பிறந்த நாடு நம் நாடு.தொன்மை நிறைந்த யோகாவும் ,மருத்துவங்களும், நீதி நெறி தந்த திருக்குறள் முதலிய நூல்களை உருவாக்கிய செல்வ நாடு.இயற்கைவளங்கள் கொழிக்கும் கவின் நாடு நம் நாடு.பாரதி சொன்னது போல் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் கற்போம்".வழிகாட்ட எத்தனையோ விளக்குள் சுடர்விட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன.அதைக்கொண்டு கல்லாமை,இல்லாமை, ஊழல் போன்ற இருளினைக் கொளுத்துவோம்.உலக அரங்கில் அனைத்து துறைகளிலும் நீங்களே மன்னர்கள் !தோள்கொடுப்போம் !கலாச்சாரம் காப்போம் ,மனிதம் வளர்ப்போம் தொன்மையினை சிதைக்காமல் இருப்போம்."ஒற்றுமையே வலிமை !" மறவோம். இன்றைய இளைஞர்கள் எழுந்து விட்டார்கள் !விழித்து விட்டார்கள் !

நன்றி
ம மங்கையர்க்கரசி /நிலாசகி


தொலைதூரக் காதல்! 106

---------- Forwarded message ----------
From: Jotheshree <shreejothe@gmail.com>
Date: 2010/7/15
Subject: கவிதை போட்டி- தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net



தொலைதூரக் காதல்!

ஊரே! திருவிழா கொண்டாட்டத்தில்
ஒரு பார்வை மட்டும் என் மீது
முறைப்பாய் என் மறுபார்வை...
அசராமல் உன் பார்வை...!

தோழியுடன் திட்டினேன்...
பூவாய் சிதறியது உன் புன்னகை..!
பைத்தியமா! என்றேன்...
ஆம்! உன்! பைத்தியம் என்றாய்...

கோபமாய் திட்டித்தான் வீடு திரும்பினேன்
ஜன்னல் வழியே! கசங்கிய காகிதம்...
கடிதமாய் காதல் கவி வரைந்தாய்...
என்னுள் கனிந்தது காதல்...

தொலைவில் வேலைக்கு செல்வதாய்...
பிரிய மனமில்லை என்றாய்...
பிரியா விடையுடன் என் காதலை
அள்ளிக்கொண்டு சென்றாய்...

அலைபேசியே! கதி என்று கிடக்கின்றேன்...
நீ பேசும் இரு வரிக்காக...
உன் கடிதங்களை மறைத்து படிக்கும் பாடு
உன் காதல் கவிதை வரிகளில் கரைந்து போகிறது...

ஒற்றை மலரில்...
உன் முகம் காண்கிறேன்...!
குளிர் தென்றலில்...
உன் குரல் கேட்கிறேன்...!

பசுமை தரையில்...
உன் அருகாமையை உணர்கிறேன்...!
உன்னிடம் பேசுவது போல்...
நிலவிடம் பேசுகிறேன்...!

உன் கடிதங்கள்...
என் தலையணையில்...
விழிகள் நீ வரும் வழியில்
என்று வருவாய் என்ற பரிதவிப்போடு...!


-ஆர்.கே.ஜோதி ஸ்ரீ
அந்தியூர்.



பெண்ணுக்குள் பூகம்பம்! 105

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/16
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்
To: admin@sivastar.net

இத்தனை நாள்
ஆடவனின் பின்னால்
இருந்ததுபோதுமென்றும்
முன்னால் வந்து
தங்கள் முகம்
காட்டித்தீரவேண்டுமென்றும்
தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது
பெண்ணினத்தால்

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
என்பதெல்லாம்
கல்லானால் கல்
புல்லானால் புல்
புருசனென்றால் மட்டுமே
புருசனென்று
புதுப்பிக்கப்பட்டுவிட்டது


பெண்-
மாறுவேடமிட்டிருக்கும்
பூகம்பமென்று
ஆண்
உணரத்தொடங்கிவிட்ட
காரணத்தினால்
புதுவேகத்துடனும்
வீரியத்துடனும்
சுயமரியாதையோடு
வெற்றிப்பாதையில்
பயணிக்க தொடங்கிவிட்டார்கள்
தோழியர்கள்
அவர்களுக்கு
எம்வாழ்த்துக்கள்

இனி ஒரு பிறவி வேண்டாம்..!104

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/16
Subject: இனி ஒரு பிறவி வேண்டாம்
To: admin@sivastar.net


இனி ஒரு பிறவி வேண்டாம்

என் தாயின்
மார்பகங்களில் ஒன்று
குண்டடி பட்டு
குருதி வடிய வடிய
சதைக்குவியலாய்
பிய்ந்து தொங்குவதை
காண நேர்ந்தது.

தந்தையின் தலையை
கையிலெடுத்துக்கொண்டு
பிணக்குவியலுக்குள்
உடல்தேடியலைந்த
கொடுமை நிகழ்ந்தது

பல நாட்களாய்
உணவே உட்கொள்ளாமல்
வயிற்றுப் பசியால்
வாடி வதங்கிப்போயிருந்த
இளந்தளிர் தங்கையை
சிலர் தங்களது காமப்பசிக்கு
பயன்படுத்திக்கொண்டபோது
எழுந்த அலறலின் அதிர்வுகள்
என் காதில் விழுந்தது

வேறொரு முள்வேலி முகாமிற்குள்
இன்னும் உயிருடன் இருப்பதாய்
அறியப்படுகிற இளம்மனைவி
பற்றிய பய உணர்வுகள்
நொடிக்கொரு முறை எழுந்தது.

வாழ்ந்துக்கொண்டே செத்து. . .
செத்துக்கொண்டே வாழ்ந்து. . .
ஐயோ…! ஐயையோ!
ஏழு பிறவியில்
அனுபவிக்கவேண்டிய
கொடுமைகளையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் ஒரே பிறவியில்
திணித்துவிட்ட காலமே!
இனி ஒரு பிறவி வேண்டாம்


-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 103

---------- Forwarded message ----------
From: vetri selvi <kavivetri.90@gmail.com>
Date: 2010/7/16
Subject: kavithai potti
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்
ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்
முடங்கிப் போகும் வெகுவிரைவில்
அடக்கம் செய்வோம் புதைகுழியில்.
ஆணும் பெண்ணும் நிகராக
வானும் மண்ணும் வலம்வருவோம்
உணர்வும் உரிமையும் ஒன்றென்று
உணரட்டும் ஆணினம் என்றென்றும்
பெண்ணின் திறமைகள் உரமாகும்
புரிந்தால் பெண்ணினம் வரமாகும்
பெண்ணைப் போற்றும் சமுதாயம்
ஏற்றம் பெறுவது சத்தியமே
பெண்ணை சமமாய் பாவித்தால்
முன்னேற்றம் உலகில் சாத்தியமே!


கவி . வெற்றிச்செல்வி சண்முகம்,

கடலூர் .

கல்வித்தகுதி :முதுகலை அறிவியல்
பணி :முதுகலை ஆசிரியர்
முகவரி :46 ராஜகவி நகர்
கொண்டூர் அஞ்சல்
கடலூர் 2

ஆர்வம் :கவிதை, கட்டுரை , பட்டிமன்றம்


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பிரியாத வரமொன்று வேண்டும்...!102

---------- Forwarded message ----------
From: ArulPrakasan Palanisamy <actionarul@gmail.com>
Date: 2010/7/16
Subject: Re: 3. மற்றுமொரு கவிதை பிரியாத வரமொன்று வேண்டும்...! என்ற தலைப்பில்
To: சிவா <admin@eegarai.net>


பிரியாத வரமொன்று வேண்டும்...!

என்னுடன் நீ பேச வேண்டுமென்பதில்லை ,
உனக்கும் சேர்த்து நானே பேசி கொள்கிறேன்.
பார்க்க வேண்டாமென்று மட்டும் சொல்லாதே
பார் தடுத்தாலும் என்னால் பாராமலிருக்க முடியாது பெண்ணே.

குருடனுக்கும் ஆசை வரும்
பார்வை கேட்டு,
உன் குரலை கேட்ட பின்.
உன்னுடன் எனகென்ன பேச்சு
என்று கேட்டாயே
இன்னுமா புரியவில்லை என்னை ,
இரு கண் கொண்டு
ஒரு முறை பார்த்து விட்டேனே உன்னை.

இறந்த பின்னும் உன்னை பார்த்து கொண்டிருக்கும்
பாக்கியம் கிடைக்கிறதென்றால் சும்மா இருப்பேனா என்ன ?
அது தான் கண்ணை மூடிக் கொண்டு
கையொப்பமிட்டு விட்டேன்
கண் தானம் செய்யும் படிவத்தில்
:-)





என் முழு விவரம் கீழே

Name :P.Arulprakasan
Address : 4A,F2,SS Enclave, Dandeeswaran Main Street, Velacheri,Chennai-42.
Email id : actionarul@gmail.com
Monile : 9894847853
- ஜோ (எ) ப.அருள் பிரகாசன்


தமிழுக்கு அமுதென்று பேர்...!101

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/15
Subject: கவிதைப்போட்டி-3
To: admin@sivastar.net


ஆம்!..
தமிழுக்கு அமுதென்று பெயர்தான்..

"தமிழ்" உச்சரிக்கும் போதே.
என் உள்ளம் உற்சாகப் படுகிறது..
"தமிழ்" இதை உணர்ந்து பார்! இதனுள் ஒன்றிப்பார்!
"தமிழ்" ஒரு மொழியல்ல...உலகம்...

ஆதி கால செம்மொழி தமிழ்..முதல்-இன்று
கோவை மக்கள் பேசும் கொங்குத்தமிழ்,
நெல்லை மக்கள் பேசும் நெல்லைத்தமிழ்
மதுரை மக்கள் பேசும் மதுரத்தமிழ்
சென்னை மக்கள் பேசும் சென்னைத்தமிழ்
அது போல..மலேசியத்தமிழ்
இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ்.
இன்னும்..பல தமிழ்.. தமிழ்..

குழந்தை பேசும் மழலைத்தமிழ்
பள்ளிப்பருவ கொஞ்சுத்தமிழ்
வாலிபவயதில் கவிதைத்தமிழ்.
தமிழ் தெரியாத
மாற்றான் பேசும் பிழைத்தமில்.
அயல்நாட்டு வாகனத்தில்
ஒலிக்கும் அறிவிப்புத்தமிழ்..

கணினியில் தெரியும் அழகுத்தமிழ்.

அன்னியநாட்டு நண்பன் பேசும் கொச்சைத்தமிழ்
இவற்றை எல்லாம் நீ ரசித்து பார்!..

நீயும் சொல்வாய் "தமிழுக்கு அமுதென்று பேர்.."

பெண்ணுக்குள் பூகம்பம்! 100

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/15
Subject: கவிதைப் போட்டி : பெண்ணுக்குள் பூகம்பம் !
To: eegaraipoem <admin@sivastar.net>
நீ பொழிந்த
அத்தனை
காதலிலும்
இன்னும்
நனைந்துகொண்டு தான்
நான்
காதலா.. !

காரணம் சொல்
என்னவனே
தொலைந்துபோன
நிஜங்கள்
விட்டுச்சென்றது ஏன்
இத்தனை
நினைவுகளை
மட்டுமென்று.. !

இதோ
தெரிந்தே
தொலைக்கிறோம்
நீ என்னையும்
நான் உன்னையும்
உண்மைதான்
வாழ்வளித்தவர்க்காய்
ஒரு
வாழ்நாள் தியாகம்.. !

என்
விழிகள்
சொரியும்
துளிகளில்
கரைந்தே..
எரியும்
உன்
நினைவுகள்.. !

காதல்
மணமேடை
சேர்வதற்கு,
மனக்கொலைகளும்
மானக்கொலைகளும் தான்
விதியெனில்

அத்தனை
உயிர்களும்
வாழட்டும் நம்
இரு
மனங்களின்
மரணத்தில்.. !

புனிதம் செய்தோம்
காதலை
மனிதம் கொண்டு
ஆனால்..
நான்தான்
தோற்றுப்போகிறேன்
மீண்டும் மீண்டும்
இந்த
மௌன பூகம்பத்தில்.. !
- நியாஸ்




--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

ஈகரைத்தாய்! 099

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/15
Subject: கவிதைப் போட்டி : ஈகரைத்தாய்
To: eegaraipoem <admin@sivastar.net>


பாசத்தொட்டில்
கட்டி
ஆட்டுகிறாய்
இவ்வுலகெலாம்
கூட்டி
தாயே !

இப்பாரினில்
உன் பேரினில் காண்
எம்
தோழமைக் கூட்டம்

கட்டிய கைகளும்
பூட்டிய கண்களும்
என்றோம்
பின் சென்றோம்
நீ
காட்டிய பாதையில்
வென்றோம்
இன்று

பகிர்வும் பாசமும்
பெற்றோம்
சுற்றமும்
இங்கு
கற்றோம்
நற்காதலும்
கனிவும்

உன்னிசையறி
வந்தோம்
விசையறு
வீழ்ந்தோம்
எட்டுத்
திசையறிவித்தோம்

நின்றன்
நிலையது நினைந்து
நித்திரையிழந்து
நித்தம்
பித்தம்
பிடித்தே
நின் பாதம்
பணிகிறேன்
உனை
உயிரென
அணிகிறேன்.. !

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 098

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/15
Subject: கவிதைப் போட்டி: சுவாசிப்போமா சுதந்திர மூச்சு ? - ஈழம்
To: eegaraipoem <admin@sivastar.net>


அடைபட்டிருக்கிறோம்
இந்தக்
கடலளவு
தேசத்தில் சிறு
கண்ணாடிக்
குவளையில்.. !

எங்கள்
கண்ணீரில்
மூழ்கி மூழ்கியே
மூச்சடைத்துப்
போகிறோம்
முக்தியேது ?

வீதிகள்
களவு போன
விதியும்
நிர்கதியும்
தான், எம்
கதியென்று
அகதிகளாய்
இன்று.. !
- நியாஸ்



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பிரியாத வரமொன்று வேண்டும்! 097

---------- Forwarded message ----------
From: Annasamy.V <vas@lntecc.com>
Date: 2010/7/15
Subject: போட்டிக் கவிதை
To: "admin@sivastar.net" <admin@sivastar.net>

பிரியாத வரமொன்று வேண்டும்

மண்ணில் பிறக்க கட்டளை இட்டீர்.
கண்ணில் வழியும் நீரினை கனிவாய்த்
துடைக்க ஓரினிய உறவைக் கொடுத்தீர்.
இடைவிடா துன்னையும் கண்டேனே.

அன்னை காட்டும் பரிவில் மறந்தேன்
என்னை. பெறும் அந்த இன்பம்
பன்மடங் காகிட தந்தையென ஒருவரையும்
முன்னறி தெய்வமாய்ப் பெற்றேனே.

இருவரின் ஈடிலா அன்பினை விளக்க
ஒருபதம் நீயே கூறுவாய்! உருகிட
ஓர்தாய், தாரளமாய் தரவோர் தந்தை;
பேரின்ப, பெருமைகொள் நாட்களே.

உணவு, கல்வியென எனது தேவைகளை
உணர்ந்த மனதோடு என்றும் இணக்கமாய்
விளங்கும் இவர்களை ஒருபோதும் பிரிக்காதே.
அளித்தவரே பறிப்பது முறையோ?



தொலைதூரக் காதல்! 096

---------- Forwarded message ----------
From: srini vasan <srinihasan@gmail.com>
Date: 2010/7/15
Subject: தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net

தொலைதூரக் காதல்!

நானிருப்பது தொலைதூரம் என்பதனாலோ
அவளுக்கு தொல்லைதரமால் வாழ்க்கின்றேன்
எங்களுக்குள் காதலை வளர்ப்பது காகிதமே!
அவளின் கைவிரல்கள் பேனாபிடித்து எழுதிட
மணிக்கட்டு எழுத்துகளுக்கு மேடையமைத்திட
முத்தத்தையும் முகத்தையும் சேர்த்து பதித்து
நாவால் கடிதத்தின் பசைக்கும் உயிரூட்டி
என்னின் விலாசத்திற்கும் மனதிற்கும் அனுப்பிட
அதனை கைகளால் பிடித்து படிக்கின்ற
சமயம் அவளின் ஸ்பரிசங்களை தீண்டும்
தருணத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு
இணையான நினைவுகளாக எந்தன் நெஞ்சில்
எனக்குள் தொல்லை தருகின்ற காதலாய்
எங்களுக்குள் எல்லை மீறாத காதலாய்…

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 095

---------- Forwarded message ----------
From: srini vasan <srinihasan@gmail.com>
Date: 2010/7/15
Subject: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!
To: admin@sivastar.net


ஈழம் மண்ணில் இன்னும்

ஈரம் குன்றாமல் இன்றும்

காரணமறிவோரோ?

எத்தனையோ ஆனால் எதுவோ?

அறிவியலின் விந்தையல்ல

அழிவின் விளைவாய்…

ஆக்கத்தின் வித்தாய்

ஆரம்பத்தின் முளையாய்…

நாற்புறமும் நீரால் சூழ்ந்து

தீவாய் மிதக்கும் பூமியிது

என்பதனாலோ? - உண்மையாய்

இருக்கலாம் ஆனால் இல்லை…

எல்லா உறவுகளை இழந்து தவிக்கும்

எங்கள் நட்புகளின் கண்ணில் வழியும்

கண்ணீரோ? - இருந்தாலும்

இருக்கலாம் ஆனால் இல்லை…

எங்களுக்காக உயிரையும் கொடுத்து பிரிந்த

எங்கள் உறவுகளின் உடலில் பிறந்த

செந்நீரோ? - உருத்தலாய்

இருக்கலாம் ஆனால் உண்மை…

எந்தன் இனத்தவர் விட்டுசென்ற

காலடிகளின் தடமும் அழியாமல்

மனதிற்குள்ளும் அதற்கு அடையாளமாய்

கண்களின் முன்பும் நிழலாடிக்கொண்டு…

மண்ணில் புதைந்து போனவர்கள்

எத்தனையோ பேர் கண்ணில் தெரியாது

மண்ணை பிரிந்து போனவர்களும்

எத்தனையோ பேர் கணக்கில் வராது…

குண்டு துளைக்க முடியாத சட்டையிருக்கலாம்

குண்டுகள் துளைக்காமல் விட்டதில்லை எங்கள்வீட்டை

கண்களுக்கு முன்பு எத்தனையோ கொடூரம் - எனினும்

கணத்த இதயத்துடன் வாழ்ந்து(ம்) வருகின்றோம்…

விட்டுகொடுப்பவன் வாழ்வில்

என்றும் கெட்டு போவதில்லை

விட்டுபிரிந்தவர்கள் மீண்டும்

சேராமல் இருக்க போவதில்லை

இழந்த உயிர்கள்

வாழ்வில் மீண்டு(ம்) வரபோவதில்லை

இருக்கின்ற உயிர்கள்

துவண்டு போகாமலிருந்தால் போதும்

உறவுகள் இல்லாமல் நாங்கள்

வாழும் இவ்வாழ்கை துறவுகோலம்தான்

நாங்கள் வேண்டுவது திறவுகோலாய் - ஒன்றைமட்டும்

இதயத்திற்கு இதமளிக்கும் அன்புதான்…

உங்கள் வாழ்வில்

கண்ணில் கண்ணீரும்

மனதில் சோகமும்

கொள்ளா(ல்லா)மல் இருக்க

கண்ணில் செந்நீரும்

மனதில் தா(க்)கமும்

கொண்டு இக்கவியின்

வரிகளை வ(மு)டிக்கின்றேன்.

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு எழுதுகின்ற நேரம்

எழுந்தது என்னுள் எத்தனையோ பெரும்மூச்சு…


--
Ever yours,
S.N.Srinivasan
"The fragrance of flowers spreads only in the direction of the wind.But the goodness of a person spreads in all direction."
(Chanakya quotes (Indian politician, strategist and writer, 350 BC-275BC)



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

புதன், 14 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 094

---------- Forwarded message ----------
From: kavitha kamakshi ganesan <kavisubhaganesh@gmail.com>
Date: 14 July 2010 00:15
Subject: composing a poem
To: admin@sivastar.net

பெண்ணுக்குள் பூகம்பம்!

பொறுமையின் வடிவே பெண்... அவள்
சினந்தால் உலகமே மண்...

பெண்ணே சித்திரத்தின் அறிமுகம், அவள்
எண்ணம் படைத்திடும் புதிய சரித்திரம்...

அன்பே அவளின் ஆயுதம்...
தாக்குமே வம்பரை தினந்தினம்...

வாழ்க்கைக் கடலில் துரும்பாய் இருந்து
கரும்பாய் இனிக்கும் காவியமாவாள்...

அறிவுத்திறனுக்கு அவளே எல்லை...
அன்பு அறிவு அழகு அடக்கம் எல்லாம்
நிறைந்த ஆழ்கடல் அவளே...!

சோதனை தாங்கும் ஆய்வகம் அவளே
சாதனைப் புயலின் சீற்றமும் அவளே...!

ஆக்கமும் தேக்கமும் அவளது கைகளில்
அறிந்திடு மனிதா போற்றிடு புனிதம்!

எழுதியவர்,
க.கவிதா காமாக்‌ஷி
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி
பாரத வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி
DATE: 13.07.2010
Respected Sir,
Please find the attachment file - (POEM)
Iam sending the Poem.
Kindly Acknowledge.
Yours faithfully
G. KAVITHA KAMAKSHI
12th Standard
School: Bharatha Vidyalaya Matriculation Higher secondary school, Ayanavaram, Chennai
Contact No: 94447 02131


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

ஈழம் என்று மலரும்? 093

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/15
Subject: kavithai pottikkana kavithai
To: admin@sivastar.net


ஈழம் என்று மலரும்

நரித்தனமான நாடுகள்
ஒன்றுசேர்ந்துகொண்டு
வெறித்தனமாக தாக்கிற்று
எம் இனத்தை
ஆகையால்-
அரியணையை தவறவிட்டு
அகதிகளாய் தமிழன்

ஒன்டவந்த பிடாரிகள்
ஊர் பிடாரிகளாயிற்று
பூர்வீக மண்ணில் தமிழனுக்கு
முழு உரிமையும் போயிற்று

தவறிவிழுதலும்
தவறவிடுதலும்
இயல்பானதே!

சுற்றுகின்ற பூமியில்
இரவும் பகலும் போல்
போராட்ட களம் அதில்
வெற்றியும் தோல்வியும்
இயல்பு

தற்காலிக பிறழ்வை
புறம்தள்ளி
விடியலுக்காய் காத்திருக்கும்
தோழர் தோழியரே. .

கிரகணத்தால் சூழும் இருள்
நிரந்திரம் கிடையாது
நமக்கும் நற்காலம் வரும்
பொறுத்திருப்போம் மனம் உடையாது

ஆயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்குப் பின்-
சில இனத்தவருக்கு
தனிநாடு கனவினை
நிறைவேற்றித் தந்திருக்கிற காலம்
வீரியத் தமிழனை
விட்டுவைக்காது…
தமிழனின் கனவு ஈடேறும்
விரைவினில் மலரும் தனி ஈழம்

-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தமிழுக்கு அமிழ்தென்று பேர்! 092

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/15
Subject: kavithai pottikaana kavithai
To: admin@sivastar.net


தமிழுக்கு அமிழ்தென்று பேர்

வீரியத் தமிழின் விதை
பூமிப் பந்தில்
விழுந்த நாள் எது?
விழி பிதுங்கி நிற்கும்
ஆராய்ச்சியாளர்களின்
வினாக்களுக்கான விடைகள். . .

தொல்காப்பியத்திற்கு முன்னமே
தொன்மையான தமிழில்
இருந்த
பல்லாயிரம் நூல்கள்…

தமிழிலிருந்து
பல வார்த்தைகள் வாங்கிச்சென்று
வழக்காற்றில் வைத்திருக்கிறது
வடமொழி என்பதற்கான
தமிழ்ச்சான்றுகள். . .

தயிருக்கு தாயார் பால்தான் என்று
வழக்காடி நிரூபிக்கும் கொடுங்கதைபோல்
மொழிக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்தானென்று
போராட்டம் நடத்தாமலிருக்க
போதுமான ஆதாரங்கள்…

முதற் சங்கம்
இடைச் சங்கம்
இவையெல்லாம். . .
காலம் மூழ்கடித்தபோது
கடலுக்குள் அமிழ்ந்துபோனது.
அமிழ்ந்து. . அமிழ்ந்து. . அமிழ்ந்து. .
என்னே அதிசயம்?
"அமிழ்ந்து. . அமிழ்ந்து. . "என்று
தொடர்ச்சியாய் சொன்னால்
"தமிழ். . .தமிழ்" என்று ஒலிக்கிறதே!
தமிழுக்கு அமிழ்தென்று பேரோ!!

-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தொலைதூரக் காதல்! 091

---------- Forwarded message ----------
From: ArulPrakasan Palanisamy <actionarul@gmail.com>
Date: 2010/7/15
Subject: 4. தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net




தொலைதூரக் காதல்!

கதைக்க ஆரம்பித்தோம்
கணக்கில்லாமல் ,
நட்பானோம் ஒப்பந்தம் போடாமலே
நாளுக்கு நாள் ,
பார்க்காமலேயே பார்த்து பழகுபவர்களை விட
பல மடங்கு பழகினோம்,

என் சிறு சிறு பொய்களுக்கெல்லாம்
ஏங்கினாய் ,அவையெல்லாம் பொய்யாக பொய்த்து போகவே
வேண்டுமென சில சமயம்
வேண்டினாய் கடவுளிடம்
நான் சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்குமோ என அஞ்சி ,
நானும் நீயும் மணமொத்த நிலையிலிருந்த பொழுது
நம்மை யாராலும் பிரிக்க முடியாதென மார் தட்டினேன்
நமக்கு மட்டுமே தெரியும் படி .
நீ எதிர் பார்த்த தருணங்களில்
ஏன் என் அன்பை வெளிபடுத்த முடியாமல் புழுங்கி தவித்தேன்
என்பது உனக்கு தெரியும் .

சரி என மீண்டும் நட்பாகவே தொடர்ந்தோம்,சில காலம் கழித்து
சொந்தமாகலாம் என நினைத்து
சொன்னேன் என் விருப்பத்தை
தொலை தூர கல்வியில் படித்து தேர்வு பெறுவது போல என்
தொலைதூர காதலிலும் வெற்றி பெறலாம் என எண்ணி,
எதிர்பாரா முடிவை தந்தாய்
எதிர் பார்த்த தருணத்தில் முடியாதென

- ஜோ (எ) ப.அருள் பிரகாசன்

Name :P.Arulprakasan
Address : 4A,F2,SS Enclave, Dandeeswaran Main Street, Velacheri,Chennai-42.
Email id : actionarul@gmail.com
Monile : 9894847853


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு? - ஈழம்! 090

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/13
Subject: கவிதைப் போட்டி எண்-3
To: admin@sivastar.net

நண்பனே! இது..
மண்ணில் நம் கொடி நிற்க..
மரணத்தை மகிழ்வோடு தழுவிய
மைந்தர்கள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
தேசம் காக்கச் சென்று..தன்
தேகம் காக்க மறந்து போன..
தேசத்தியாகிகள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
தோலால் செய்யப்பட்ட உடலை
துச்சமென நினைத்து..
துப்பாக்கித் தோட்டாக்களுக்கு ..
துணிவோடு கொடுத்த
துளிர்கள் பிறந்த நாடு!..

நண்பனே! இது..
மண்ணில் மனித உரிமை
மரம் போல் வளர்ந்து நிற்க..நம்
மண்ணுக்குள் உரமாகி போன ..
மகாத்மாக்கள் பிறந்த நாடு!..

இது தெரிந்தும் ..
ஏன் எந்த தயக்கம்?..
ஏன் இந்த கோழைத்தனம்?.

இந்த..
இரக்கமற்ற ..மனிதர்களை..
இரத்த வெறிகொண்ட மிருங்கங்களை..
அழிக்காமல்...எப்போது நாம் சுவாசிப்போம் !
சுதந்திர மூச்சு? இறங்கி வா இப்போதே..

நண்பனே!
முயற்சிப்போம்..மகாத்மா போல் உயிரை கொடுத்து
சுதந்திரம் பெற.. இல்லையேல்.. இரக்கமற்ற ..
மனிதர்களின்..உயிரை எடுத்து
சுதந்திரம் பெறுவோம்..

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 089

---------- Forwarded message ----------
From: tamil elakiyan <tamilelakiyan@gmail.com>
Date: 2010/7/14
Subject: kavithai.
To: admin@sivastar.net, tamil elakiyan <tamilelakiyan@gmail.com>

கடினப்பட்டு பள்ளிசென்று
பாடம் படிக்கையில் தெர்யவில்லை
பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி
நூத்தி எட்டு குறும்பு என்றபோதும் தெர்யவில்லை
பேருந்துக்காக நான் காத்துக்கிடந்து
பிறர் பேருதவி செய்தபோதும் நினைக்கவில்லை
கல்லூரி காதலிலும் இக்குறைப்பற்றி
கடுகு எண்ணம் தோன்றவில்லை
கண்ணீர்விட்டு இப்போது நினைக்கிறேன்
சுமந்தவளே சுமையாக நினைக்கும்போது
இனி ஒரு பிறவி வேண்டாமென்று .

நன்றி ....

இவன்

மு.மோகன்தாஸ்

முதுகலை இரண்டாமியண்டு

சுப்ரமணியபாரதி தமிழியற்புலம்

புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி.





--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 088

---------- Forwarded message ----------
From: Jotheshree <shreejothe@gmail.com>
Date: 2010/7/14
Subject: கவிதை போட்டி
To: admin@sivastar.net

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்...

கருவில் பல கனவுகளுடன்...
உலகை காணும் மகிழ்ச்சியில்!
ஆனால்,

அழுகையுடன் பிறந்த அன்றே
ஆரம்பித்துவிட்டது அடிமை வாழ்க்கை...
தந்தைக்கோ! பெண்பிள்ளை என்ற வருத்தம்...
உறவுகளோ! பெண்பிள்ளை என்ற அலட்சியப்பார்வை!

பெண்பிள்ளை சிரிக்காதே! நடக்காதே!
குனிந்த தலை நிமிராதே! வாசலில் நிக்காதே!
அம்மா,அண்ணண் இல்லாமல் தனியாய் செல்லாதே!
பெண்ணிண் அடிப்படை உணர்வுகளை
தடுத்து தந்தை ஆர்ப்பரிக்கிறார்!

அடங்கிதான் வாழ்கிறாள் மகள்...!
விளையாட்டில் சகோதரனுடன் சண்டை!
அம்மா சொல்கிறாள் அவன் ஆண்பிள்ளை!
அவன் செய்வதெல்லாம் சரி

ஆண்பிள்ளையிடம் என்ன சண்டை!
என்று பெண்ணை அடங்கிதான் வாழச் சொல்கிறாள்...
அவனை ஆர்ப்பரிக்கத்தான் சொல்கிறாள்!

புது இடம்!, புது உறவு!,ஆயிரம் கனவுகளுடன்...
புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள்...
ஆரம்பம்தான் ஆகிறது... இயந்திர வாழ்க்கை!

ஆயிரம் வேலைகள்! பணிவிடைகள்!
அயர்ந்து ஓய்வெடுத்தால்! ஆயிரம் இடிகள்!
கருத்துகளை சொன்னால் கூட

கணவன் நான் ஆம்பிள்ளை டீ! நீ பொம்பிள்ளை டீ!
ஆம்பிள்ளை பேசும் போது குறுக்கீடு செய்கிறாய்...
உன் தாயின் வளர்ப்பு என்ன தான் வளர்ப்போ!
என்று தான் ஆர்ப்பரிக்கிறான் கணவன்!
பிறந்த வீட்டிற்காக,

அடங்கிதான் வாழ்கிறாள் மனைவி...!
தெருவில் நடந்தால், நிமிர்ந்தால்
ஆயிரம் பார்வைகள்... ஆயிரம் கிசு கிசுக்கள்...
பேருந்து நெரிசலில்! இடி மன்னர்கள்...
அலுவலகத்தில் அயிரம் கழுகு பார்வைகள்...

பெண் மகளாய்!, சகோதரியாய்!, மனைவியாய்!
சமுதாயத்திற்காக அடங்கி வாழ்கிறாள்...
அவளை அடக்கி ஆர்பரித்து வாழ்வதே ஆண்குணம்...



-ஆர்.கே.ஜோதி ஸ்ரீ

அந்தியூர்.


பிரியாத வரமொன்று வேண்டும்...! 087

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/14
Subject: kavithai pottikaana kavithai
To: admin@sivastar.net


பிரியாத வரமொன்று வேண்டும்

சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.

என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.

என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.

சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.

நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.

உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.

என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்

உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.

கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்


-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தொலைதூரக் காதல்! 086

---------- Forwarded message ----------
From: lakshmi sivagami <lakshmisivagami@gmail.com>
Date: 2010/7/13
Subject: kathal.
To: admin@sivastar.net


நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே.
பிரிய முடியாமல்...
பிரிய மனமில்லாமல்
உன்வழியே பகிர்ந்துக்கொண்ட
நினைவுகளை உன்னில்
தினம் தேடிக்கொண்டே...
ஆனந்தம் என்ற வடிவத்தின்
பாதங்கள் கண்ணுக்கு தெரியாமல்
அன்பால்...உலகத்தை உனக்கு அடிமையாக்கு... நீ யாருக்கும் ஆகிவிடாதே...
என் வழிகளை பார்க்க வேண்டாம்
என் வரிகளை பார்த்தாலே போதும்
என் உள்ளத்தை பார்க்க வேண்டாம்- அதில்
என்ன வரிகளை பார்த்தாலே போதும்.

--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

செவ்வாய், 13 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 085

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/13
Subject: eegarai kavithai pottikkana kavithai
To: admin@sivastar.net


தொலைதூரக் காதல்

எல்லையிலே துப்பாக்கி
ஏந்தி நிக்கும் எம் மாமா
இந்த கொல்லைபுரத்தழகி
ஒன பார்க்க வரலாமா?

ஆண்டுக்கு ஒரு முறைதான்
கிராமத்துக்கு நீ வருவ
அந்த இருபது நாளுலதான்
எங்கண்ணில் நீ படுவ

சொற்ப நாட்கள் அது
சத்தியமா போதல
தவணை முறையிலெல்லாம்
சொல்லலாமா காதல?

எனக்காக ஏங்கறையோ - இல்ல
குறட்டைவிட்டு தூங்கறியோ
உன்னோட நெனப்பால – நான்
படும்பாட்ட கேட்கறீயா?

மலைக்கோயில் போனாக்கா
பாறையில நீ தெரிவ
கண்மூடி படுத்தாக்கா
எம் மனசெல்லாம் நீ நெறைவ

உன் கடுதாசி தலைக்கு வச்சி
படுத்தாக்கா நீ வருவ
உன் போட்டோவ வச்சிக்கிட்டா
கனவில்வந்து எனை தொடுவ

கண்ணாடி பார்க்கையில
எம் பின்னாடி நிக்கறியே
தலைவாரும்போதெல்லாம்
நீ சீப்பில் வந்து சிக்கறியே

என்னோட தலையணைக்கு
உன் தலை வந்து முளைக்குது
அது அப்பப்போ கீழிறங்கி
என் தூக்கத்த கலைக்குது

நீ முரட்டு முத்தமிட
நான் துடிச்சு சத்தமிட
ஆசையா இருக்குதைய்யா
உன்னோடு யுத்தமிட

அருகிலிருந்தாலும் ஆயிரம் மைல் தள்ளி
அப்பால இருந்தாலும்
உன் நெனப்பு அச்சில்தான்
என்னுலகம் சுத்துது

நமக்கு நடுவால
இருக்கிற தூரத்தால
ஏக்கம் பெருக்கெடுத்து
அழறேன் பிரிவு பாரத்தால

தனிமை கொல்லுதென்ன
புரிஞ்சிக்கோ என் தலைவா!
பிரிஞ்சிருக்க முடியலையே
நீ வர்றீயா நான் வரவா?


-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 084

---------- Forwarded message ----------
From: ashraf ali <ashraf_kkcas@yahoo.co.in>
Date: 2010/7/13
Subject: போட்டிக் கவிதை : அடங்கிவாழும் பெண்ணினம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்
To: eegaraipoem <admin@sivastar.net>


அடங்கிவாழும் பெண்ணினம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம் !

கள்ளிப்பாலுக்குக்
கரைந்தது போக
மீதம்தான்
நாங்கள்.. !

வக்கிரப்
பார்வைகளுக்கு
மத்தியில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
வயதிற்கு வந்த
பொம்மைகள்.. !

உங்கள்
வட்டத்திற்குள்
வைப்பதற்கு
கோலிக் குண்டுகளோ
கோழிக் குஞ்சுகளோ
அல்ல நாங்கள்... !

போட்டிக்கு
வந்துவிடுவோமென்று
பூட்டி வைத்தே
பழகிவிட்டீர்கள்
'பொட்டச்சி'
தானென்று
பட்டமும்
பதிந்தீர்கள்

நிரயாசைகளுக்கென்று
நிர்பந்திக்கப்படவர்கள்..
நிர்கதியே எங்கள்
நிலைமை,
நித்திரை கூடச்
சொந்தமில்லை
காரணம்
முத்திரை
பதிக்கப்பட்ட்டவர்கள்
நாங்கள்
பெண்களென்று.. !


எங்கள்
வளைவிலும்
சேலை நெளிவிலும்
தொலைந்து போனவர்களே
சற்றேனும்
தேடியெடுங்கள்
புதைந்துபோன
உங்கள் மனசாட்சியில்
ஏதேனும்
மீதமிருந்தால்.. !

- நியாஸ்



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 083

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப் போட்டிக்காக
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

அத்தி பூத்தாற் போலும்
குறிஞ்சி பூத்தாற் போலும்
எப்பொழுதாவது நடக்குமந்த அதிசயங்கள்
இருளப்பிய உன்னறை சன்னலினூடே
சில கீற்று வெளிச்சங்கள் அனுமதிக்கப்படும்
அடுக்கலை வழியாய் குளியலறையில் முற்றுமிடம்
உன் எல்லைக் கோடுகளில் சிறிய தளர்விருக்கும்
வீடிலுத்துக் கூட்டிச் செல்லம் உன்னிரவாடைக்கு
அந்நாளுக்கானலைதல் மிச்சப்படும்
கழுதையும் சனியனுமென்ற நாவுகள்
செல்லமென்றும் தேவதையுமென்றும் புகழ்பாடும்
அதிலும் அழுத்தமாய் சில பெருசுகள்
எங்கள் வீட்டு மகாலட்சுமியெனும்
அடுத்தாரம்பிக்கும் அரிதாரப் படலம்
கழிந்த தீபாவளிப் புடவையில்
உள்ளதில் பாதியும் இரவலில் மீதியுமாய்
மேனி மினுக்குமாபரணங்களில்
ஒரு மணி நேர நாயகி வேடமுனக்கு
இனிக்க இளிக்க பேசியும்
இங்கும் அங்குமாய் உத்தரவிட்டும்
உன் ஊனமின்மையை உறுதி செய்யுமொரு கூட்டம்
படி தாண்டாத பயந்தாங்கொள்ளித் தனமும்
அதிகம் பேசாத அடங்கிய குணமும்
கூடுதல் தகுதிகளெனக் கொள்ளப்படும்
உள்ளதைத் தின்று பணி செய்து கிடக்கும்
தெரு நாயினும் கீழான உன் வளர்த்தல் முறையில்
தம்பட்டமிட்டு மகிழும் உன்னில்லம்
அதைக் கீழினுமோர் அடிமை வாழ்விற்கு
அதி அற்புதமாய் அடங்குபவள் நீயென்று
கூடிய உத்திரவாதங்களுடன்.
உணர்வுகளற்ற ஜடக் கொலு பொம்மையாய்
பிற விருப்பங்களுக்கிசையும் வேளை
உடலெங்கும் பூத்த அலங்காரத்தில்
அகம் மகிழ்ந்து கொள்
நானுமின்று புதுமைப் பெண்ணென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

தொலைதூரக் காதல்! 082

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: தொலைதூரக் காதல்! கவிதைப் போட்டிக்காக
To: admin@sivastar.net



தொலைதூரக் காதல்!


நகன்றும் அசைந்தும் விரட்டியும்
அகலவியலா கொசுத்தொல்லையென
உன் நினைவுகள்

குனிந்து நிமிர்ந்து ஓடி
அனிச்சை செயல்களில் ஆடித் திரிந்தும்
இறுக்கிச் சம்மனமிட்டிருக்கின்றன
உன் நோக்கியான என் நினைவுகள்

இளித்து வருந்தி கடுத்து
தன் கதையளப்பவர்களுக்கெல்லாம்
ரசித்து ருசித்து "ம"; இட்டுக்கொண்டே
உன்னில் கரைந்து கிடக்கிறேன் முழுதுமாய்

கறுத்து மஞ்சனித்து பின் வெளுத்து
வெளியுலகம் வேஷம் பலவேற்றும்
என்னுலகம் மட்டும் இருண்டு நிற்கின்றன
காலம் பல கழிந்தும்

மிதக்குளிரில் நனைந்து கரையும் மாலைப் பொழுதுகளிலும்
வலிய வந்தனைக்கும் நந்தவன மலர் மணங்களிலும்
வெளியிறங்கி உட்கொள்ள நாத் துடிக்கும்
பன்சுவை நொறுக்குத் திண்பண்டங்களிலும்
தும்பிகளின்றி இசைவாகா சிறுவனைப் போல்தான்
ஏற்றமாகவே எல்லாம் கண்ட என்னுலகம்
எனக்கிசைய மறுக்கிறது உன் இல்லாமைகளில்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ






--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 081

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: பெண்ணுக்குள் பூகம்பம்...! (கவிதைப் போட்டிக்காக)
To: admin@sivastar.net




பெண்ணுக்குள் பூகம்பம்...!


உன் விழிகளேந்திய கண்ணீர் துளிகளை
கழுவித் துடைத்துக்கொள் என்றெல்லாம்
தேற்றுதலிட்டு இன்னுமின்னும் உன் கோழமையை
தட்டித் தூக்கி விட மனம் ஒப்பவில்லை எனக்கு

இதயத்தில் கவிந்த கருமைகளை
உயிரில் புரையோடிய கவலைகளை
உன் விழிக் கண்ணீர் இளக்கி இலகுவாக்குமென்றும்
உன்னை அலசி உன்னதமாக்குமென்றும்
காரியமியலா பித்தர்கள் பிதற்றிக் கொட்டியவையவைகள்.

உன்னியலாமையை இன்னும் இருத்தும் அழுத்தமாய்
எழுந்து பொங்கும் உன் குருதிச் சூட்டினை
நீரிட்ட தணலாய் கீழிறக்கும்
இளஞ்சிவப்புக் குருதியின் ஒரு பகுதியை
உறிஞ்சிக் கண்வழி துப்பும் எதற்கும் லாயக்கற்றதாய்

இன்னும் நீ ஆழ்ந்து தாக்கப்படுவதற்கான உத்திகளை
ஆயுதமற்ற உன் புறத்திலான உத்திரவாதங்களை
எதிராளியின் காதில் இரகசியமிடும்

நின்று துணியும் உன் சாமானியத்தனம் உருவி
உன் வீட்டீசானிமூலையில் உனக்கோரிடமிடும்.

இறுக்கியமர்ந்த நீரின் ஒற்றைத் துளி
உருவில் முத்தாகி மதிப்பில் சொத்தாகி
கூடிப் பன்மடங்கிட்டு நிற்பதைப் போல்தான்
கூடிக் கழித்த ஒற்றைக் கழிவுதானென்றாலும்
நாலாப்புறச் சுவர்களில் நசுங்கிக் கிடந்ததற்காய்
உறுப்புகளேற்று உருவமிட்டு நிற்கும்
உயிர் ஜனனத்தைப் போல்தான்;
உங்களுக்குள் உறைய விடுங்கள் கண்ணீரை
உங்களுயிர் மீறிய உருவம் பூண்டு
உங்களையுமுயர்த்தும் ஒரு நாள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


தொலைதூரக் காதல்! 080

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/12
Subject: கவிதைப்போட்டி-3
To: admin@sivastar.net

தொலைதூர காதல்.

கண்மணியே!..
கை நிறைய காசு சம்பாரிக்கலாம்!..
வளமாய் வாழலாம்..என நினைத்து
ஐந்து வட்டி, பத்து வட்டி என பார்க்காமல்..
கடன் வாங்கிக்கொண்டு..
கடல் தாண்டி வந்தேன்..உன்னை பிரிந்து..

ஆனால்..
"நேசத்தின் மகத்துவம்"எல்லாம்
நெருங்கி இருக்கும்போது தெரிவதில்லை"
என்பதை அறிந்தேன்..நீ என் அருகில் இல்லாதபோது..

இங்கு..நான் மட்டும் தனிமரமாய்..
நாள்தோறும் இருக்கிறேன்.. – தினம்
தொலைபேசி வாழ்க்கை வாழ்கிறேன்..-உன்னோடு..

இரைச்சிலிடும் மெசின்கள்..
சப்தமிடும் வாகனங்கள்..
அதிரவைக்கும் கிரேன்கள்..
தீப்பொறி கக்கும் கிரைண்டர்கள்..
ஒளியை கக்கும் எலேக்ட்ரோடுகள்..
அனலாய் கொதிக்கும் அணு உலைகள்..
இவற்றுக்கிடையே நான் இருந்தபோதும்..
என் மனதில் தென்றலாய்..மெல்லிசையாய்.
உன் நினைவுகள்...

இதுவாய் வாழ்க்கை...
பணம் சேர்த்தால் வளமாய் வாழலாம்..என
நினைத்து..தினம்..தினம் ..பிணமாய்
வாழ்கிறேன்..

இதுவாய் சந்தோஷம்!...

அன்று..தினம் ஒருவேளை உணவாக..

உன் கையால் வெறும் சாதம் மட்டும்

உண்டபோது அமிர்தமானது..

இன்று...
(சொல்ல வார்த்தை வரவில்லை..)

"போதுமடி.. இந்த வாழ்க்கை"

புறப்படுகிறேன்..நாளையடி"

திங்கள், 12 ஜூலை, 2010

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? 018

---------- Forwarded message ----------
From: Narayana Ganeshan <nganezen@gmail.com>
Date: 2010/7/11
Subject: இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?
To: admin@sivastar.net


அன்புடையீர்,
வணக்கம். தாங்கள் அறிவித்திருந்த ஈகரைக் கட்டுரைப்போட்டி தலைப்பு "இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?"க்காக நான் ஒரு புதிய கட்டுரையை இத்துடன் அனுப்பி உள்ளேன். இக்கட்டுரை இது வரை பிரசுரமானதல்ல என்றும் உறுதி கூறுகிறேன்.

நன்றி.
என்.கணேசன்


இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?


இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

"முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?" என்று முனிவரிடம் அவன் கேட்டான்.

அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு 'பாருங்கள். உயிரில்லையே' என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு "உயிருடன் இருக்கிறது பாருங்கள்" என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். "அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது"

அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். 'கத்தியின்றி, இரத்தமின்றி' நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை "கற்பூரப் பருவம்" என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில்\ அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.

"ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்" என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

இளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே!

கவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை நகைச்சுவையாக எழுதினார்.

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே
தற்கால நாகரி கம்!

ஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் "தத் த்வித்யம் ஜன்மா" என்ற வாக்கியம் உண்டு. இதற்கு 'கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது' என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்?

இக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.

நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே!


-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 079

---------- Forwarded message ----------
From: ravi msravi <msravi05@yahoo.com.my>
Date: 2010/7/12
Subject: கவிதை போட்டி
To: admin@sivastar.net

இனி ஒரு பிறவி வேண்டாம்

அந்நியன் வற்புறுத்தலினால்
சொந்த ஊரை விட்டு
இந்த ஊரில்
சஞ்சி கூலிகளாக
தஞ்சம் புகுந்தவர்கள்
நாங்கள்…

ஆனால்,

கறையானும்
கல்வி பயிலும்
எங்கள் தமிழ்ப்பள்ளியில்
மதிப்பெண்
அதிகமாயிருந்தாலும்

பணியில் கால் பதிப்பது
அவ்வளவு எளிதல்ல…
எங்கள் சோதனைகளையும்
தாள மாட்டாமல்தான்
கோவில்களெல்லாம் தரைமட்டமாகின்றனவோ???

அரசியல் தலைவர்களெல்லாம்
தலைமறைவானதால்
குடும்பத் தலைவர்களுக்கு தான்
சுமை மிகுந்தது

சொந்த நாட்டிலும்
அயல் நாட்டினர் போல்
வாழும் அவல நிலை
மாற்றான் மொழியில்
வல்லமை பெற்றதால் என்னவோ

தமிழனே தமிழ்மொழியை
மதியாத
இந்த பிறவி போதும்
இனி ஒரு பிறவி வேண்டாம். . .


இரவி மது
மலேசியா



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

ஞாயிறு, 11 ஜூலை, 2010

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! 017

---------- Forwarded message ----------
From: lakshmi sivagami <lakshmisivagami@gmail.com>
Date: 2010/7/11
Subject: katurai
To: admin@sivastar.net


பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்.

இப்படி பெண் ஒரு தலையாட்டு பொம்மையாக தந்தைக்கும்,சகோதரனுக்கும், கணவனுக்கும், மகனுக்கும் பணிவிடை செய்து அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்களின் காலுக்கிடையில் கட்டுண்டு கிடக்கவா பெண்ணாய் பிறக்க தவம் புரிய வேண்டும்.

தன்னை பற்றி புகழ்ந்து கூறுதல் கூடாது என்கிறார்.இவாறு பெண்கள் மரபு முதல் அடிமையாக ஓடுகப்படதன் விளைவு அவளுக்குள் ஒரு மாற்று தேடலுக்கான மனநிலை உருவாகிறது.அவளின் இயல்பான உணர்வுகளை கூட மறைத்து கொண்டு ஒடுங்கி வாழ கட்டளை இடபடுகிறது..இவாறு பெண்கள் மரபு முதல் அடிமையாக ஓடுகப்படதன் விளைவு அவளுக்குள் ஒரு மாற்று தேடலுக்கான மனநிலை உருவாகிறது இதை உளவியலின் தந்தை சிக்மன் பிராய்டு கூறுகையில் தோல்வி உணர்வால் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கொள்ள மனம் தன்னை அறியாமலே முயல்கிறது. அம்முயற்சிகள் மனதின் தற்காப்பு முயற்சிகள் எனக்குறிபிடுகிறார்.இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் தந்தையின் அடக்குமுறையால் தன் வயதொத்த ஆண்மகனின் அன்பால் ஈர்க்கபடுகிறாள்.பின் அந்த அன்பு காதலாகி கணவன் என்ற அந்தஸ்து பெறும்போது கண்ணீர் வடிக்கிறாள். எனவே அவன் கணவனாக மாறுவது காலனாக மாறுவதற்கு சமம்.

இது புரியாத ஆண்கள் இன்று பெண்களை நடத்தும் விதம் மிகவும் மோசமாக இருக்கிறது அலுவலகம் செல்லும் பெண் எத்தனை விதமான சங்கடத்திற்கு ஆளாகிறாள் வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்துவிட்டு கணவனுக்கும், குழந்தைக்கும் ,மாமனார் மாமியாருக்கும், அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து பேரூந்து நெரிசலில் கசங்கிய காகிதமாய் அலுவலகம் செல்கிறாள். அங்கு அவள் எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவள் வகிக்கும் பதவியை பொருட்படுத்துவதில்லை அவளின் உடட்கூறுகளை உற்றுநோக்குவதிலே ஆண்களின் கவனம் இருக்கு.என்ற வள்ளுவரின் வாக்கை செயல்படுதுபவர்களாக இருக்கிறார்கள் எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதா மதிகெட்டவர்களாக இருக்கும் ஆண்களை நினைகையில் வேதனைதான் மிகுகிறது.எந்த ஒரு போராட்டமானாலும் போர்களமானாலும் முதலில் பாதிக்க படுவது பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று அதிகமாக வளர்ந்து நிற்க காரணம் ஆணை அடக்காமல் அவன் வழியில் வளர விட்டு விட்டு பெண்ணை மட்டும் கண்ணகி போல இரு என்று கற்பை பாதுகாக்க தூண்டிய விதம். இந்த தூண்டுதலை ஆண் குழந்தைக்கும் பல சதவீதம் அக்கறைகாட்டி கோவலனாய் இருக்காதே என்று அறிவுறுத்தி இருந்தால் இன்றைக்கு இந்த சமூக சீர்கேடுகளை கலைந்திருக்கலாம். பெண்ணுக்கு பெண்ணையே எதிரி ஆகியது இந்த சமூகம்.

பெண் உழைக்கிறாள் தன்னை பற்றி சிந்தனைகளை மறந்துவிடுகிறாள் தன் சக்தி அனைத்தையும் குடும்பதிர்க்கும் அலுவலகத்திலும் செலவழித்து விட்டு சோர்ந்து போகையில் அவளுக்கு தோள் கொடுப்பது அவளின் தாயின் தோளாகதான் இருக்கும். எந்தனை பெண்கள் எதிரியாக இருக்கிர்கள்.பெண்கள்தான் பெண்கள் போற்றா வேண்டும். " பெண்ணாய் பிறந்திட மாதவம் புரியணும் "என்ற பாரதி.

பாரினில் பட்டங்கள் பல பெற்றாலும் அதை போற்றா வேண்டும்.இன்று கருவில் பெண் சிசு உருவாவது குறைந்து கொண்டிருகிறது .

நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை எதை வேண்டும் என்று நினைகிறோமோ அது கிடைக்கும் எதை வேண்டாமென்று நினைகிறேர்களோ அது கிடைக்காது.பழம்பெரும் இலக்கியமான தொலகாபியத்தில் தலைவனுக்குரிய பண்புகளை வரையறுத்து கூறுகையில் எவருக்கும் அஞ்சாதவனாக வலிமை உடையவனாக தலைமை தன்மை உடையவனாக இருக்க வேண்டும் என்றார். பெண்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று உலகத்ல்அதிகமாக நடை பெறுகிறது. பாவம் பெண்கள்.இது ஒரு வேதனை. நம்மக்கு ஆகாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

குடிபோதையில் சொந்த மகளையே கற்பழித்த கணவனை அவரது மனைவி தனது தம்பிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீ.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உண்ணாமலை (வயது48) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள், உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது நான்கு மகள், ஒரு மகனுடன் ஏழுமலை, உண்ணாமலை பீ.தாங்கலில் வசித்தனர். ஏழுமலைக்கு குடிபழக்கம் உள்ளவர், பல பெண்களுடன் ஏழுமலைக்கு கள்ள தொடர்பும் இருந்துள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன், புதுமாம்பட்டில் ராமலிங்கத்தின் வீடு கட்டும் வேலைக்காக ஏழுமலையும், உண்ணாமலையும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏழுமலை பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அங்கு வந்த உண்ணாமலை, அவரது தம்பிகளான ராமலிங்கம், பழனிசாமி ஆகியோர் விபத்தில் ஏழுமலை இறந்துவிட்டதாக கூறி, பிரேதத்தை துணியில் சுற்றி ஆம்புலன்சில் ஏற்றி எடுத்து சென்று வீட்டில் இறக்கினர். விபத்தில் தனது மகன் ஏழுமலை இறந்ததாக கூறியதில் சந்தேகம் அடைந்த ஏழுமலையின் தாய் சின்னப்பிள்ளை, தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஏழுமலை உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். உண்ணாமலை மற்றும் அவரது தம்பிகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் ஏழுமலையை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

உண்ணாமலை காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் ஏழுமலை குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், மனநிலை பாதித்த மகள் அம்சவள்ளியை (17) வன்புணர்ந்தார். அதை நேரில் பார்த்த மகன் மணிகண்டன் (11) என்னிடம் கூறி அழுதான். பெற்ற மகளையே வன்புணரும் கணவனை கொல்ல திட்டமிட்டேன் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், பீ.தாங்கல் கிராமத்திலிருந்து புதுமாம்பட்டு கிராமத்திற்கு ஏழுமலையை அழைத்து சென்றேன். அங்கு புதிதாக கட்டும் வீட்டிற்கு உதவியாக இருவரும் இருந்தோம். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சின்னமாம்பட்டு கைகாட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக ஏழுமலை சென்றார்.

இதன் பிறகு நானும், ராமலிங்கம், பழனிசாமி ஆகியோரும், போதையிலிருந்த ஏழுமலையை, டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று, கத்தியால் குத்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டு சாலையோரம் பிரேதத்தை போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். நேற்று காலை ஏழுமலை இறந்து கிடப்பதாக சிலர் தகவல் கிடைத்ததும் எதுவும் தெரியாதது போல் அழுதபடி, அங்கு மூவரும் சென்று பிரேதத்தை துணியில் வைத்து கட்டி, விபத்தில் என் கணவர் இறந்து விட்டதாக கூறி, கள்ளக்குறிச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து, பிரேதத்தை எடுத்து சென்றோம். உடலை அடக்கம் செய்வதற்கு முன் காவல்துறையினர் வந்து பிரேதத்தை கைப்பற்றி விட்டனர் என்று உண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து உண்ணாமலை, ராமலிங்கம், பழனிசாமி மூவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகளை கற்பழித்த கணவரை, கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தான் பாலியல் வன்முறை இன்று உலகத்ல்அதிகமாக நடை பெறுகிறது. சுயுனர்வுடன் இரூக்கும் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் .

எத்தனை தந்தை மோசமாக இர்ருகிரர்கள். மகளை சரியாய் படிப்பில் கவினிக்காமல், அவளுடைய எதிர்கால படிப்பில் அக்கறை இலல்லாமல் .

மிகவும் மோசமாக உள்ளது. பெண் என்றால் அதிக சீர் வரிசை கொடுத்தால் தான் திருமண சந்தையில் விலை போகும் என்று புறக்கணிக்கப்படும் ஒரு பெண்ணின் வேதனை மாமியார் என்னும் வடிவம் பூண்டு தன் இனத்தையே தாழ்த்தி பார்க்க செய்யும் அளவுக்கு வளர்கிறது. இன்று பெண் ஆணை திருமணம் செய்வது குறைத்து வருகிறது ஓரினச்சேர்கை என்னும் இயற்கைக்கு எதிரான ஒரு இணைவு நடக்க காரணம் ஆண் சமுதாயத்தின் அடக்குமுறைதான். இந்த உறவுகள் நீடித்தால் உயிர் உற்பத்தி தடைபடும் ஆண்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும்.எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பெண்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதா மதிகெட்டவர்களாக இருக்கும் ஆண்களை நினைகையில் வேதனைதான் மிகுகிறது.இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் தந்தையின் அடக்குமுறையால் தன் வயதொத்த ஆண்மகனின் அன்பால் ஈர்க்கபடுகிறாள்.பின் அந்த அன்பு காதலாகி கசிந்து கணவன் என்ற அந்தஸ்து பெறும்போது கண்ணீர் வடிக்கிறாள் எனவே அவன் கணவனாக மாறுவது காலனாக மாறுவதற்கு சமம். கணவன் என்றால் உரிமையுடையவன் மனைவி என்பவள் அவன் கட்டளைக்கு அடிபநிபவள் என்ற எண்ணம் ஆண்களுக்கு குழந்தை பருவத்திலே விதைக்கப்பட்ட விஷயம். குழந்தையாக இருக்கும்போது அவன் முன் நிகழும் தாய் தந்தையின் நடத்தைகள் பதிவாகிறது .தாயை அடக்கும் தந்தையின் செயல்பாடுகள் அவன் மனதில் அழுந்த பதிகிறது அவன் வளர்ந்து ஆளான பின் அந்த பதவியை அவன் அடையும் போது அவன் ஆழ மன பதிவுகள் தலைகாட்டுகிறது. இதுவே பெண்களுக்கு மீதான அடக்குமுறைக்கு அவனை தூண்டுகிறது .

என்றைக்கு ஆண்கள்,தந்தை,தாய்,பெண்களை உணர்கிறார்களோ அன்று தான் நல்ல பாரதம் உருவாகும்.

சனி, 10 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்..! 078

---------- Forwarded message ----------
From: Rajesh Jana <jana.rajesh928@gmail.com>
Date: 2010/7/10
Subject: kavithai-by janarthanan
To: admin@sivastar.net

இனி ஒரு பிறவி வேண்டாம்

அளவில்லாமல் அன்பைப் பொழியும் அன்னை
அதற்கு நிகரில்லாமல் பண்பைப் பொழியும் தந்தை
என்னை என்றும் நேசிக்கும் என் சுற்றம்
அனைவரையும் என்பால் பிணைக்கும் என் நட்பு
இவ்ற்றிற்கு மேலாக என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் பிரயாணிக்கும் என் கல்வி
தேசத்திற்கு தொண்டாற்றும் வகையில் அமைந்த என் பணி
என்னை நாள்தோறும் சுமக்கும் பாரதத் தாயின் மடி
என்னை அளவில்லாமல் பிரமிக்கவைக்கும் இயற்கையின் அழகு
முக்கியமாக என்றும் என்னுள் ஊஞ்சளாடிக் கொண்டிருக்கும் நிம்மதி
இவ்வன்மைகளெல்லாம் இப்பிறவயிலேயே அமைந்ததால்
நான் மனமுவந்து கூறுகிறேன்,
இப்பெரும் புவனதில் வாழ
எனக்கு,
இனி ஒரு பிறவி வேண்டாம் !!!

வெள்ளி, 9 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 077

---------- Forwarded message ----------
From: vinotha v <winothee@gmail.com>
Date: 2010/7/9
Subject: Kavithai
To: admin@sivastar.net


ஹலோ சிவா ,
என்னோட கவிதையை மின்னஞ்சல் செய்துள்ளேன் .
பெயர் - வினோதா . வே
முகவரி - ராமநத்தம்,தொழுதூர் (அஞ்சல் ),
திட்டக்குடி (வட்டம் ),கடலூர் (மாவட்டம்) - 606303
பெண்ணுக்குள் பூகம்பம்



பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்

அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்

பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்

குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு

பெண் தினமும்
பிரச்சனைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் திண்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்

ஆடவரின் நாவினால்
நரபலி இடபடுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்

பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்

அமைதியாக வாங்கினாள்
அடிப்பணிந்து சகித்தாள்
தியாகமாய் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சித் திணறினாள்

துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்

குட்ட குட்ட குணிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்

அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்மபமாய் வெடித்ததோ?

கண்ணுக்குள் கொதித்த
கணலெல்லாம்
கதிவரனில் கலந்ததோ?
எரிமலையாய் பொங்கியதோ?

உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய் சுழன்றடித்ததோ?

இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியயாரு பூகம்பம்
இனியயாரு சுனாமி
இனியும் வேண்டுமா?

சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு

உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
இப்படிக்கு
வினோதா


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

பெண்ணுக்குள் பூகம்பம்! 076

---------- Forwarded message ----------
From: puthiyamaadhavi sankaran <puthiyamaadhavi@hotmail.com>
Date: 2010/7/9
Subject: kavithai pOtti
To: admin@sivastar.net

பெண்ணுக்குள் பூகம்பம்


மொழிகள் பிறக்காதப் பூமியில்
இலைகள் அறியாத குகையில்
கிளைப்பரப்பி வளர்ந்திருந்தக் காதலை
தொலைத்துவிட்டோம்.

நம்காதல்-
ஆகாயத்தை விட உயரமானது
பிரபஞ்சத்தைவிட விசாலமானது என
அளந்துக் காட்டுகிறது
உன் கவிதை.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலென
நால்வகை நிலத்திலும்
நால்வகைப் படையுடன்
உன் வெற்றிக்கொடி
என் கோட்டையில்
பறக்கும் போதெல்லாம்
வானத்து நிலவு
வன்புணர்ச்சியில்
இரத்தக் கறையுடன்
குறைப்பிரசவமாய்...

கிளைப்பரப்பி நிழல் கொடுத்ததும்
மலர் விரித்து மனம் மகிழ்ந்ததும்
அணில் கடித்த கனி பறித்ததும்
வழிப்போக்கர்கள்
மறந்துவிடலாம்.
நீ...?

வெட்டுகிறாய்
என்னை, என் கிளைகளை.
என் வேர்களை.
அதையும் தங்கக் கோடாரியால்
வெட்டுவதாக
தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய்.

காயம்பட்ட வேர்களிடம் கேள்
எவரும் எழுதாத இலைகளின் கவிதையை.
தங்கச் சுரங்கங்களுக்கு அடியில்
தகத்தக தகவென
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலைக் குழம்பு
எப்போது வேண்டுமானாலும்
பனிக்குடம் உடைத்து
பிரசவிக்கக் கூடும்
பூகம்பங்களை.

உன் ஆயுதங்களின்
ஆரவாரப் பேரணிகளால்
கொலையுண்ட
அமைதிப்புறாக்கள்
அங்கிருந்து
உயிர்த்தெழும்.
வல்லூறுகளாக மாறி
உன்
வானத்தை வட்டமிடும்.
புரிகிறதா..?
பூமிக்கு பூகம்பம்
பூகோளம் மட்டும்தான்
பூமடியில் பூகம்பம்
புதுயுக சரித்திரம் என்பது.
------------------------

புதியமாதவி, மும்பை.

ஈழம் என்று மலரும்? 075

---------- Forwarded message ----------
From: baskar palanishamy <baskar.diva@gmail.com>
Date: 2010/7/7
Subject: ஈழம் என்று மலரும்?. கவிதை போட்டி
To: admin@sivastar.net

நண்பா!..

உலகத்தின் பார்வை உன்மீது இருக்கிறது!...
உன் பார்வை மட்டும் ஏன் கண்மூடி இருக்கிறது?..

இதோ... உனது காலடியில் நம் நாட்டின்
வருங்கால பெருமைகளும்..
வளமான வாழ்வுகளும் ..மண்டியிட்டு அமர்ந்துள்ளது..

உன்னுடைய விழிப்புக்காக...
உன்னுடைய எழுச்சிக்காக..
உன்னுடைய செயலுக்காக...

ஈழம் என்று மலரும்?. என ஏங்கும்..இதயத்திற்கு..
ஈனம் இல்லை எங்கள் இதயம் என்பதை..நிருபி..
உன்னால் மட்டும் தான் முடியும்...

நம் நாட்டின் இருள் போக்க...
விழி.!.. எழு.!.. செய்..!..இன்றே..

நீ யோசிக்கின்ற ஒவ்வொரு நொடியும்..
பல உயிர்போகின்றதை நீ அறிவாயா?

நாம் தான் நான்கு திசைகளில் சிதறுண்டு உள்ளோம்...
நம் சந்ததிகளாவது சந்தோசமாக..
நம் நாட்டில் வாழட்டும்..

-தேனி "சூர்யா" பாஸ்கரன்.

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண் குணம்.. 074

---------- Forwarded message ----------
From: ota koothan <otakoothan23@gmail.com>
Date: 2010/7/7
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்பரிக்கும் ஆண் குணம்..kavithai pottti..
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்பரிக்கும் ஆண் குணம்..
என் தலை மயிர் என்றால் அவனுக்கு எப்போதும் உயிர்,
ஆட்டாங்கல் ஆட்டுவது போல் வெறி கொண்டு சுழற்றுவான்..
படுக்கையறையில் அவன் ஒரு விஞ்சானி...
தினம் தினம் ஒரு புது நிலை கண்டுபிடிப்பான்...
நாயை விட கேவலமாய்..
என் மார்பு அலறும்...தொடை நடுவு வலிக்கும்...
பெற்ற பிள்ளை பரிதாபம்...
பாலுக்காக தினம் அழும்..
மறுக்க முடியாது...மறுத்தால்
என் மீது அந்த ஊதாரி கணவனின்
வன்மையான கைகளினால் அடி விழும்...
வேலை என்று எதுவுமில்லை..
காலையில் விழிப்பு...
பகல் முழுக்க கூத்தியாள்...
இரவிலே குடியும் நானும்..!...
இப்போதெல்லாம் நான் அழுவதில்லை....
கல்லாய் மாறிவிட்டது மனம்....
கல் கண்ணீர் விடுமா?
குடி குடியை கெடுக்கும் என்பார்கள்...
என் விசயத்தில் குடி குடியை வாழ வைத்து இருக்கிறது,!
அமாம்...
நேற்றிரவு தான்...
இருண்டு போனா என் வாழ்க்கைக்கு
கணவன் குடித்த சாராயத்தினால் விடியல் பிறந்ததது..
ம்ம்ம்...என் கணவன் கள்ள சாரயத்தால் இறந்து விட்டான்....
member of eegarai...
Otakoothan
14 surya ganthi st,
thoppil nagar,
kalveerampalayam.
coimbatore 46
9842112666


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

செவ்வாய், 6 ஜூலை, 2010

பிரியாத வரம் ஒன்று வேண்டும்!073

---------- Forwarded message ----------
From: ota koothan <otakoothan23@gmail.com>
Date: 2010/7/6
Subject: உன்னை பிரியாத வரம் ஒன்று வேண்டும் kavithai potti
To: admin@sivastar.net


பிரியாத வரம் ஒன்று வேண்டும்
சிறு வயதில் சின்னஞ் சிறு கைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு
மாலை ஆனவுடன் மறக்காமல்
நான் சென்ற
என் ஊர் நதி கரையின் ஈரம்
இப்போதும் என் நெஞ்சில் உலர வில்லை.
நதிக்கரை ஓரம், அருகே நாவல் மரம்...
நாவல் மரம் ஓரத்தில் நின்றபடி,
பழம் ஒன்று கிடைக்காதா என தேடி தேடி
மண் படிந்த நாவலையும்,
மெய் மறந்து தின்று விட்டு,
ஊதா நிற நாக்கை தொட்டு தொட்டு
மகிழ்திருந்தேன்.
மாடு தினம் குளிக்கும்.
ஆடு முதல் குரங்கு வரை
அங்கே தான் சுற்றி திரியும்.
தண்ணிரில் இறங்கும்போதே
உச்சி எல்லாம் குளிர்ந்து விடும்.
மீன்கள் எல்லாம் சுற்றி வந்து கால் கடிக்கும்,
சில சமயம் நாகம் வந்து படகை போல் பயணம் செய்யும்,
உடலலெல்லாம் குளிரிருந்தும்
உவகையினால் உள்ளத்தில் சூடிருக்கும்,
இந்த நதி சத்தம் போடாது...
சிறு குழந்தை சிரிப்பது போல் சல சலத்து ஓடி வரும்..
சித்திரத்தில் வரைந்தது போல்,வளைந்து வளைந்து ஓடி வரும்..
மழை கொஞ்சம் பெருக்கெடுத்தால்
முதிய நடை இளைஞ்சனாகும்...
எனக்கு ரசனையை தந்த நதி...
வாழ்க்கையின் வாசனையை நுகர வைத்த மணக்கும் நதி....
இன்று....
காலம் கட்டிய விதி என்னும் வலையில் நதியும் தப்பவில்லை...
நீர் குறைந்தது...
கரையின் ஓரம் மெலிந்தது..
சில் என்ற தன்மை இல்லை...
கண்ணாடி போல் இருந்த நதி
ஆனால் கழிவு கலந்து..அதற்கான
அடையாளம் ஒன்றுமில்லை..
ஏதோ....
நடை பிணமாய் , வாழ்ந்து கேட்ட மனிதனை போல்...
கால்வாய் வடிவாக பாவமாய் நடந்து கொண்டிருக்கிறது.
என்றாலும்.....
அதே நாவல் மரம்....
அதன் ஓரம்...ஒரு பழம் ....
கிடைக்காதா என தேடி கொண்டே இருக்கிறேன்....
என் நதியே....
உன்னை பிரியாத வரம் ஒன்று வேண்டும்
member of eegari...
Otakoothan
14 surya ganthi street,
thoppil nagar,
kalveerampalayam,
coimbatore 46
9842112666