வியாழன், 15 ஜூலை, 2010

தொலைதூரக் காதல்! 106

---------- Forwarded message ----------
From: Jotheshree <shreejothe@gmail.com>
Date: 2010/7/15
Subject: கவிதை போட்டி- தொலைதூரக் காதல்!
To: admin@sivastar.net



தொலைதூரக் காதல்!

ஊரே! திருவிழா கொண்டாட்டத்தில்
ஒரு பார்வை மட்டும் என் மீது
முறைப்பாய் என் மறுபார்வை...
அசராமல் உன் பார்வை...!

தோழியுடன் திட்டினேன்...
பூவாய் சிதறியது உன் புன்னகை..!
பைத்தியமா! என்றேன்...
ஆம்! உன்! பைத்தியம் என்றாய்...

கோபமாய் திட்டித்தான் வீடு திரும்பினேன்
ஜன்னல் வழியே! கசங்கிய காகிதம்...
கடிதமாய் காதல் கவி வரைந்தாய்...
என்னுள் கனிந்தது காதல்...

தொலைவில் வேலைக்கு செல்வதாய்...
பிரிய மனமில்லை என்றாய்...
பிரியா விடையுடன் என் காதலை
அள்ளிக்கொண்டு சென்றாய்...

அலைபேசியே! கதி என்று கிடக்கின்றேன்...
நீ பேசும் இரு வரிக்காக...
உன் கடிதங்களை மறைத்து படிக்கும் பாடு
உன் காதல் கவிதை வரிகளில் கரைந்து போகிறது...

ஒற்றை மலரில்...
உன் முகம் காண்கிறேன்...!
குளிர் தென்றலில்...
உன் குரல் கேட்கிறேன்...!

பசுமை தரையில்...
உன் அருகாமையை உணர்கிறேன்...!
உன்னிடம் பேசுவது போல்...
நிலவிடம் பேசுகிறேன்...!

உன் கடிதங்கள்...
என் தலையணையில்...
விழிகள் நீ வரும் வழியில்
என்று வருவாய் என்ற பரிதவிப்போடு...!


-ஆர்.கே.ஜோதி ஸ்ரீ
அந்தியூர்.



1 கருத்து: