புதன், 14 ஜூலை, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...! 087

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/14
Subject: kavithai pottikaana kavithai
To: admin@sivastar.net


பிரியாத வரமொன்று வேண்டும்

சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.

என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.

என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.

சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.

நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.

உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.

என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்

உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.

கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்


-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக