வெள்ளி, 2 ஜூலை, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...! 064

---------- Forwarded message ----------
From: kanagalingam Rama <kanagalingamm@hotmail.com>
Date: 2010/7/2
Subject: கவிதைபோட்டி இனி ஒரு பிறவி வேண்டாம் kirikasan
To: admin@sivastar.net


இனி ஒரு பிறவி வேண்டாம்


வந்தேன் பிறந்தேன் வாழ்கின்றேன் ஆனால்
வாழ்வது ஏன் புரியவில்லை
உண்டேன் உவந்தேன் உருண்டுபிரண்டிங்கே
கொண்டேன் துயில்பெற்றதொன்றுமில்லை
கண்டேன் மகிழ்ந்தேன் காதலித்தேன் அந்த
காதலில் கண்டது ஏதுமில்லை
கொண்டேன் மனைவியென்றோர் மங்கையை
கொண்டதில் ஏதும் குறையுமில்லை

நாளொன்றில் பாயில்படுத்து மல்லாந்து
வானிற் பறக்கும் முகில்களினை
ஆளாய் குரங்காய் அழகாய் ஓர்பெண்ணாய்
அற்புதமான வடிவெடுக்கும்
மீளக்குலைந்து வடிவுகெட்டுஒரு
மெல்லிய பஞ்சாய் பறந்து செல்லும்
கோலம்ரசித்துகிடந்தேன் அட அங்கே
தேவதை ஒன்று வானில் வந்தாள்

அந்தோ அழகியதேவதையே வெண்
ஆடைகள் பூண்ட எழில்அரசி
எந்தன் மனதினில் கேள்வியொன்று இந்த
மண்ணில் வந்துநான் ஏன் பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்துவந்தேன் இனி
எங்கு சென்று அமைதி கொள்வேன்
அங்கேயிருப்பதுஎன்ன இந்த
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சம் ஆக விரித்ததில்
வண்ணக் குழம்பாக்கி வைத்தது யார்
ஏனோ இதுமர்மம் ஆக இருப்பதன்
காரணமென்ன அறிந்துளயோ
ஆவிதுறந்ததும் அண்டவெளியினில்
நாம் போகுபாதைஓர்பால்வெளியோ
தாவிபறந்து வான் கல்லில் படாது
தூரம் சென்று உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
காற்றுமில்லா பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளி சீற்றங்கள் மத்தியில்
செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைக்கிறோம் வெட்டுகிறோம்-கதிர்
முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லைஉடைத்தில்லம் கட்டுகிறோம் -குளிர்
காட்டுவிலங்கை தவிர்ப்பதற்கு

ஆன செயல்களுக் காரணமுண்டு
ஆயின் பிறந்திட்ட காரணம் என்
மேனி எடுத்திந்தபூமியில் வந்தது
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
தொல்லையில்லா வாழ்வுக்கென்றே பலசில
விஞ்னான ஆய்வில் கருவிகண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
அன்பை மட்டும் இழந்துவிட்டார்
நாயினும் கேவலமாக சண்டையிட்டு
நாட்டை பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம் துடித்து அடங்கும்வரை கையில்
கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவனோ அவனுக்கு
இவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் என்ன நடக்குது மானிட
வாழ்வு என்றேபுரியவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்வைவிட்டுஅந்த
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திக்கு வாழவேண்டாம் இனி
யோர் பிறவி இங்கு வேண்டாம் என்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக