வியாழன், 15 ஜூலை, 2010

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஏன்? 020

---------- Forwarded message ----------
From: laxmi srikanth <lekshmisrikanth@gmail.com>
Date: 2010/7/15
Subject: கட்டுரை போட்டி
To: admin@sivastar.net


வணக்கம்,
இத்துடன் கட்டுரை போட்டிக்கான என்னுடைய கட்டுரையை இணைத்துள்ளேன்.
நன்றி
ப்பி.லட்சுமி
௯௫௯௭௧௯௫௨௪௧
4 கோபால் சாமி வீதி (வடக்கு)
கணபதி
கோவை 641 006
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஏன்?

வயதான தன் தாய் தந்தையரை தன் இரு தோள்களிலும் தூக்கி சென்று அவர்களை புனித யாத்திரை செய்ய வைத்த க்ஷ்ரவNNண் பிறந்த பொன்னாடு இது. பெற்றோரையும், பெரியவர்களையும் மதித்தும், மரியாதை செலுத்தியும் பேணிக்காத்த பண்பாட்டுக்கு சொந்தகாரர்கள் நாம்.

மூத்தோர் வாக்கும் முது நெல்லிக்கனியும் முன்னால் கசக்கும். பின்னால் இனிக்கும். தம் அனுபவங்களை நினைவு கூர்ந்து இளையோரை நல் வழிப்படுத்த தம் அனுபவங்களை எடுத்து சொல்வர். பெற்றோர் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத எவ்வளவோ பேர் தங்கள் வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

இன்றோ பணமும் பகட்டுமே வாழ்க்கையாகி விட்டது. பணத்தின் தேவை அதிகமாகி விட்ட இன்னாளில், அதை தேடிப் பறக்கும் இளம் தலைமுறையினர் தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே சுமையாக கருதும் நிலை வந்து விடுகிறது. எவ்வளவு வந்தாலும், திருப்தி என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து பழகி விட்டனர்.

தெம்பு இருக்கும் வரை தன் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலை செய்வதையும், பை நிறைய சம்பாதிப்பதையும் பெருமையாக நினைத்து, சுற்றுலா விசாவில் அவர்களை பார்த்து அளவளாவி விட்டு வருவதை ஏதோ பிறவிப்பயன் அடைந்து விட்டதாக கருதுவது இப்போது நாகரிகமாகி விட்டது.

ஒரு கட்டத்தில் இயலாமை வாட்டும் போதுதான் செய்வது அறியாமல் திகைக்கின்றர். தனிமையின் கொடுமை தெரிய ஆரம்பிக்கிறது. அதற்குள் பிழைக்கும் இடத்தில் காலூன்றி விட்ட பிள்ளைகள், சொகுசு வாழ்க்கையை விட முடியாத பிள்ளைகள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் விடுகின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் ஒரு அரசு ஊழியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பிள்ளைகள் அனைவருக்கும் அள்ளித் தரும் அரசு வேலை. அவரும் இறந்து விட்டார். இப்போது அவர் மனைவியோ தள்ளாத வயதில் தனிமையில் வசிக்கிறார். பிள்ளைகள் அனைவரும் சுக போக வாழ்க்கை. எப்படி இப்படி த்னியாக விட்டு வைத்திருக்கிறார்கள்? இல்லை அந்த அம்மையாருக்குத்தான் தனிமை பிடித்து விட்டதோ? குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தெம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் அவர் தனிமையில் தானே சமைத்து கஸ்டப்படுவதை பார்த்தால் மனம் கஸ்டப்படுகிறது.

பணம், பணம், பணம் என்று பிணந்திண்ணிக் கழுகுகளாய் ஓடும் பிள்ளைகளை யார் தான் மாற்றுவது? தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு செய்யும் நன்றிக்கடன் இது தானா? ஆனால் வளரும் போதே தாய் தந்தயரை பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்பதை புரிய வைத்து வளர்க்க வேண்டும்.

வயதான முதியோர் தள்ளாத வயதில் சிறு குழந்தைகள் போல் நடந்து கொள்வது வாடிக்கை. ஆனால் அதை சகித்து கொள்ளும் தன்மை என்பது சிறிதும் இல்லாமல் போய் விடுகிறது.

பிறந்த குழந்தைகளை காப்பகத்தில் விட்டு வளர்க்கும் பெற்றோருக்கு, வயதான காலத்தில் பிள்ளைகளும் இல்லத்தில் விட்டு சரி செய்து விடுகின்றனர் போலும். ஒரு பக்கம் விலை வாசியேற்றம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அயல் நாட்டு பணத்தில் இங்கு முதலீடு செய்கிறேன் என்று நிலத்தில் முதலீடு செய்கின்றனர். இங்கோ அரசு வேலை, சொந்த தொழில் செய்வோர் தவிற வேறு யாரும் வீடு கட்டுவதோ, வாங்குவதோ குதிரைக் கொம்பாகி வருகிறது. இந்த மாய தோற்றத்தில், பந்தயத்தில் ஓடும் போது பெற்றோரும் சுற்றமும் கண்ணுக்குத் தெரியவதில்லை. பெருகி வரும் முதியோர் இல்லங்களே இதற்கு சான்று. அதுவும் பணம் உள்ளவர்களுக்குத்தான். பணம் இல்லா ஏழை முதியோரின் வாழ்வு இன்னும் திண்டாட்டம் தான்.

ஏதோ நகரங்களில் மட்டும் தான் இந்த நிலமை என்றில்லை. கிராமங்களில் கூட மிக வேகமாக பறவி வருகிறது இந்த கலாச்சாரம். கூட்டு குடும்ப முறை மறைந்தது கூட, மாறி வரும் மக்களின் மனப்போக்கிற்கு காரணம். கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து பழகிய குழந்தைகள், சகிப்புத் தன்மையோடு வளர்ந்தன. இன்றோ தனிக்குடும்பத்தில் எது கேட்டாலும் வாங்கித்தரும் நிலமையில் பெற்றோர். கணிணியும், தொலைக்காட்சியுமே நண்பர்கள். இப்படி வளரும் குழந்தைகள் எப்படி சகிப்புத்தண்மையை கற்றுக் கொள்ளும்? தனக்கு இடையூறு என்று நினைக்கும் எதையும் உதைதுத் தள்ளுகின்றன. வளர்ந்து வாலிப வயதில் காதல் வேறு. அவசர அவசரமாய் கல்யாணம், கல்யாண சரடு காய்வதற்குள் விவாகரத்து. அன்பும் பண்பும் நிறைந்த நம் இந்திய கலாச்சாரம், சீர்கேடு அடைந்து அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புத்தர், ம்ஹாவீரர், க்ஷரவண், காந்தி பிறந்த பொன்னாட்டில் தான் இவ்வளவும். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று படித்து வளர்ந்த நம் மக்களா இப்படி? இதைத்தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்றார்களோ? நம்மிடம் பெருமைப் பட்டுக் கொள்ள பொக்கிக்ஷமாய் இருந்த நம் பண்பாடு, இப்படி அழிவதை புணரமைப்பு செய்ய வேண்டிய நிலமையில் உள்ளோம். கடுமையான சட்டம் போட்டாவது முதியோரை, கவனிக்காமல் விடும் பிள்ளைகளை திருத்த வேண்டும்.

1 கருத்து: