திங்கள், 5 ஜூலை, 2010

பிரியாத வரம் வேண்டும்! 069

---------- Forwarded message ----------
From: Kanimozhi Thil <kanimozhithil@yahoo.in>
Date: 3 July 2010 14:43
Subject: kavithy photti
To: admin@sivastar.net

கட்டிலின் விளிம்பில்
கீழே விழாதிருக்க
தாயைக் கட்டிப்பிடித்திருக்கும் குழந்தைபோல்
உறங்கும் உன் கரம் விலக்கி,
கனிவாய் நெற்றியில்
முத்தமிட்டு,

உனக்கே தெரியாமல்
தேனீர்க் கோப்பையுடன்
உனை எழுப்பிய அந்நாள்!
எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது என் கண்ணே!

அழகான விழிகளை
அகலமாய் விரித்து
என்னை அதிசயமாய்ப் பார்த்தாயே
என் தேவதையே!
உனக்குத் தெரியுமா?
உன் அந்தப்
பார்வைக்காகவே

வாழ்க்கை முழுக்க
தேனீர்ப் போடலாமென்று
மனம் காதலில் கரைந்தது.
இன்றுவரை எனக்குப்
புரியவில்லை கண்ணே!...
எனை ஏன் பிரிந்தாய்?

மனைவியைத்
தங்கத் தட்டில் வைத்து
தாங்குவார்கள் கேட்டிருப்பாய்,
ஆனால் உனை
தங்கத்திற்குக் கூட தராமல்
என் இதயத்தில் வைத்தல்லவா தாங்கினேன்!

எப்படி எனைத்
தள்ளிச் சென்றாய்?
என் கண்ணே!
இன்று நீ
கண்ணோடு கண் நோக்கும்
தூரத்தில் இல்லை.

ஆனால்,
என் வாழ்வின் இறுதி கணங்களிலும்
என் இதயம்
உன்னுடன் மௌனமாய்ப் பேசும்.
அதன் மொழிகளைக் கொஞ்சம்
காதலோடு கேட்டுப்பார்.

அது
உன் பிரிவால் நான் பட்ட
காயங்களைக் காட்டும்.
என் பிரியமானவளே!
என்றும் உனைப் பிரியாத வரம் வேண்டும்.

ஒருவேளைப் பிரிய நேர்ந்தால்
அக்கணமே உயிர் பிரிகின்ற வரம் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக