புதன், 14 ஜூலை, 2010

தமிழுக்கு அமிழ்தென்று பேர்! 092

---------- Forwarded message ----------
From: Praba garan <puthuvaipraba@gmail.com>
Date: 2010/7/15
Subject: kavithai pottikaana kavithai
To: admin@sivastar.net


தமிழுக்கு அமிழ்தென்று பேர்

வீரியத் தமிழின் விதை
பூமிப் பந்தில்
விழுந்த நாள் எது?
விழி பிதுங்கி நிற்கும்
ஆராய்ச்சியாளர்களின்
வினாக்களுக்கான விடைகள். . .

தொல்காப்பியத்திற்கு முன்னமே
தொன்மையான தமிழில்
இருந்த
பல்லாயிரம் நூல்கள்…

தமிழிலிருந்து
பல வார்த்தைகள் வாங்கிச்சென்று
வழக்காற்றில் வைத்திருக்கிறது
வடமொழி என்பதற்கான
தமிழ்ச்சான்றுகள். . .

தயிருக்கு தாயார் பால்தான் என்று
வழக்காடி நிரூபிக்கும் கொடுங்கதைபோல்
மொழிக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்தானென்று
போராட்டம் நடத்தாமலிருக்க
போதுமான ஆதாரங்கள்…

முதற் சங்கம்
இடைச் சங்கம்
இவையெல்லாம். . .
காலம் மூழ்கடித்தபோது
கடலுக்குள் அமிழ்ந்துபோனது.
அமிழ்ந்து. . அமிழ்ந்து. . அமிழ்ந்து. .
என்னே அதிசயம்?
"அமிழ்ந்து. . அமிழ்ந்து. . "என்று
தொடர்ச்சியாய் சொன்னால்
"தமிழ். . .தமிழ்" என்று ஒலிக்கிறதே!
தமிழுக்கு அமிழ்தென்று பேரோ!!

-புதுவைப்பிரபா-
2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி-605 008.



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக