வெள்ளி, 9 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 077

---------- Forwarded message ----------
From: vinotha v <winothee@gmail.com>
Date: 2010/7/9
Subject: Kavithai
To: admin@sivastar.net


ஹலோ சிவா ,
என்னோட கவிதையை மின்னஞ்சல் செய்துள்ளேன் .
பெயர் - வினோதா . வே
முகவரி - ராமநத்தம்,தொழுதூர் (அஞ்சல் ),
திட்டக்குடி (வட்டம் ),கடலூர் (மாவட்டம்) - 606303
பெண்ணுக்குள் பூகம்பம்



பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்

அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்

பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்

குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு

பெண் தினமும்
பிரச்சனைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் திண்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்

ஆடவரின் நாவினால்
நரபலி இடபடுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்

பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்

அமைதியாக வாங்கினாள்
அடிப்பணிந்து சகித்தாள்
தியாகமாய் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சித் திணறினாள்

துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்

குட்ட குட்ட குணிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்

அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்மபமாய் வெடித்ததோ?

கண்ணுக்குள் கொதித்த
கணலெல்லாம்
கதிவரனில் கலந்ததோ?
எரிமலையாய் பொங்கியதோ?

உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய் சுழன்றடித்ததோ?

இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியயாரு பூகம்பம்
இனியயாரு சுனாமி
இனியும் வேண்டுமா?

சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு

உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
இப்படிக்கு
வினோதா


--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக