புதன், 14 ஜூலை, 2010

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 088

---------- Forwarded message ----------
From: Jotheshree <shreejothe@gmail.com>
Date: 2010/7/14
Subject: கவிதை போட்டி
To: admin@sivastar.net

அடங்கி வாழும் பெண்ணிணம்... ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்...

கருவில் பல கனவுகளுடன்...
உலகை காணும் மகிழ்ச்சியில்!
ஆனால்,

அழுகையுடன் பிறந்த அன்றே
ஆரம்பித்துவிட்டது அடிமை வாழ்க்கை...
தந்தைக்கோ! பெண்பிள்ளை என்ற வருத்தம்...
உறவுகளோ! பெண்பிள்ளை என்ற அலட்சியப்பார்வை!

பெண்பிள்ளை சிரிக்காதே! நடக்காதே!
குனிந்த தலை நிமிராதே! வாசலில் நிக்காதே!
அம்மா,அண்ணண் இல்லாமல் தனியாய் செல்லாதே!
பெண்ணிண் அடிப்படை உணர்வுகளை
தடுத்து தந்தை ஆர்ப்பரிக்கிறார்!

அடங்கிதான் வாழ்கிறாள் மகள்...!
விளையாட்டில் சகோதரனுடன் சண்டை!
அம்மா சொல்கிறாள் அவன் ஆண்பிள்ளை!
அவன் செய்வதெல்லாம் சரி

ஆண்பிள்ளையிடம் என்ன சண்டை!
என்று பெண்ணை அடங்கிதான் வாழச் சொல்கிறாள்...
அவனை ஆர்ப்பரிக்கத்தான் சொல்கிறாள்!

புது இடம்!, புது உறவு!,ஆயிரம் கனவுகளுடன்...
புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள்...
ஆரம்பம்தான் ஆகிறது... இயந்திர வாழ்க்கை!

ஆயிரம் வேலைகள்! பணிவிடைகள்!
அயர்ந்து ஓய்வெடுத்தால்! ஆயிரம் இடிகள்!
கருத்துகளை சொன்னால் கூட

கணவன் நான் ஆம்பிள்ளை டீ! நீ பொம்பிள்ளை டீ!
ஆம்பிள்ளை பேசும் போது குறுக்கீடு செய்கிறாய்...
உன் தாயின் வளர்ப்பு என்ன தான் வளர்ப்போ!
என்று தான் ஆர்ப்பரிக்கிறான் கணவன்!
பிறந்த வீட்டிற்காக,

அடங்கிதான் வாழ்கிறாள் மனைவி...!
தெருவில் நடந்தால், நிமிர்ந்தால்
ஆயிரம் பார்வைகள்... ஆயிரம் கிசு கிசுக்கள்...
பேருந்து நெரிசலில்! இடி மன்னர்கள்...
அலுவலகத்தில் அயிரம் கழுகு பார்வைகள்...

பெண் மகளாய்!, சகோதரியாய்!, மனைவியாய்!
சமுதாயத்திற்காக அடங்கி வாழ்கிறாள்...
அவளை அடக்கி ஆர்பரித்து வாழ்வதே ஆண்குணம்...



-ஆர்.கே.ஜோதி ஸ்ரீ

அந்தியூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக