வெள்ளி, 9 ஜூலை, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்! 076

---------- Forwarded message ----------
From: puthiyamaadhavi sankaran <puthiyamaadhavi@hotmail.com>
Date: 2010/7/9
Subject: kavithai pOtti
To: admin@sivastar.net

பெண்ணுக்குள் பூகம்பம்


மொழிகள் பிறக்காதப் பூமியில்
இலைகள் அறியாத குகையில்
கிளைப்பரப்பி வளர்ந்திருந்தக் காதலை
தொலைத்துவிட்டோம்.

நம்காதல்-
ஆகாயத்தை விட உயரமானது
பிரபஞ்சத்தைவிட விசாலமானது என
அளந்துக் காட்டுகிறது
உன் கவிதை.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலென
நால்வகை நிலத்திலும்
நால்வகைப் படையுடன்
உன் வெற்றிக்கொடி
என் கோட்டையில்
பறக்கும் போதெல்லாம்
வானத்து நிலவு
வன்புணர்ச்சியில்
இரத்தக் கறையுடன்
குறைப்பிரசவமாய்...

கிளைப்பரப்பி நிழல் கொடுத்ததும்
மலர் விரித்து மனம் மகிழ்ந்ததும்
அணில் கடித்த கனி பறித்ததும்
வழிப்போக்கர்கள்
மறந்துவிடலாம்.
நீ...?

வெட்டுகிறாய்
என்னை, என் கிளைகளை.
என் வேர்களை.
அதையும் தங்கக் கோடாரியால்
வெட்டுவதாக
தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய்.

காயம்பட்ட வேர்களிடம் கேள்
எவரும் எழுதாத இலைகளின் கவிதையை.
தங்கச் சுரங்கங்களுக்கு அடியில்
தகத்தக தகவென
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலைக் குழம்பு
எப்போது வேண்டுமானாலும்
பனிக்குடம் உடைத்து
பிரசவிக்கக் கூடும்
பூகம்பங்களை.

உன் ஆயுதங்களின்
ஆரவாரப் பேரணிகளால்
கொலையுண்ட
அமைதிப்புறாக்கள்
அங்கிருந்து
உயிர்த்தெழும்.
வல்லூறுகளாக மாறி
உன்
வானத்தை வட்டமிடும்.
புரிகிறதா..?
பூமிக்கு பூகம்பம்
பூகோளம் மட்டும்தான்
பூமடியில் பூகம்பம்
புதுயுக சரித்திரம் என்பது.
------------------------

புதியமாதவி, மும்பை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக