செவ்வாய், 13 ஜூலை, 2010

அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 083

---------- Forwarded message ----------
From: mohamed sunaith <sunaithnadwi@gmail.com>
Date: 2010/7/13
Subject: அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! கவிதைப் போட்டிக்காக
To: admin@sivastar.net


அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

அத்தி பூத்தாற் போலும்
குறிஞ்சி பூத்தாற் போலும்
எப்பொழுதாவது நடக்குமந்த அதிசயங்கள்
இருளப்பிய உன்னறை சன்னலினூடே
சில கீற்று வெளிச்சங்கள் அனுமதிக்கப்படும்
அடுக்கலை வழியாய் குளியலறையில் முற்றுமிடம்
உன் எல்லைக் கோடுகளில் சிறிய தளர்விருக்கும்
வீடிலுத்துக் கூட்டிச் செல்லம் உன்னிரவாடைக்கு
அந்நாளுக்கானலைதல் மிச்சப்படும்
கழுதையும் சனியனுமென்ற நாவுகள்
செல்லமென்றும் தேவதையுமென்றும் புகழ்பாடும்
அதிலும் அழுத்தமாய் சில பெருசுகள்
எங்கள் வீட்டு மகாலட்சுமியெனும்
அடுத்தாரம்பிக்கும் அரிதாரப் படலம்
கழிந்த தீபாவளிப் புடவையில்
உள்ளதில் பாதியும் இரவலில் மீதியுமாய்
மேனி மினுக்குமாபரணங்களில்
ஒரு மணி நேர நாயகி வேடமுனக்கு
இனிக்க இளிக்க பேசியும்
இங்கும் அங்குமாய் உத்தரவிட்டும்
உன் ஊனமின்மையை உறுதி செய்யுமொரு கூட்டம்
படி தாண்டாத பயந்தாங்கொள்ளித் தனமும்
அதிகம் பேசாத அடங்கிய குணமும்
கூடுதல் தகுதிகளெனக் கொள்ளப்படும்
உள்ளதைத் தின்று பணி செய்து கிடக்கும்
தெரு நாயினும் கீழான உன் வளர்த்தல் முறையில்
தம்பட்டமிட்டு மகிழும் உன்னில்லம்
அதைக் கீழினுமோர் அடிமை வாழ்விற்கு
அதி அற்புதமாய் அடங்குபவள் நீயென்று
கூடிய உத்திரவாதங்களுடன்.
உணர்வுகளற்ற ஜடக் கொலு பொம்மையாய்
பிற விருப்பங்களுக்கிசையும் வேளை
உடலெங்கும் பூத்த அலங்காரத்தில்
அகம் மகிழ்ந்து கொள்
நானுமின்று புதுமைப் பெண்ணென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ



--
www.sivastar.net
www.eegarai.net
www.eegarai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக